‘கடலாக இருக்கிறேன்’ எனுமிக் கவிதைத் தொகுப்பு மேற்கூறப்பெற்ற புரியாத புனைவுமொழி போன்ற பலவீனங்களிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவம் மிக்கதாய் திகழ்வதே இதன் சிறப்பு ஆகும். காரணம் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் யாவும் அவை புதுக்கவிதைப் பாணியிலே அமைந்திருந்தாலும்கூடத் தெளிவாகவும் – இறுக்கமாகவும் – எளிமையாகவும் – நுகர்வோருக்கு அதாவது வாசகருக்குப் புரியும் மொழியிலும் புனையப்பட்டிருப்பதே.”
Category: கவிதைகள்
வெளிகள் ஆயிரம் கோணங்கள் பல்லாயிரம்
தேவனின் வார்த்தைகளை விட சாத்தானின் வார்த்தைகளே இங்கே அதிகம் ஈர்ப்புடையவை. இல்லையெனில், தம்மைச் சூழ்ந்திருக்கும் நற்கனிகளை விளைப்போரையெல்லாம் புறமொதுக்கித் தள்ளிவிட்டு, காயடிப்போரைத் தோளில் தூக்கிச் சுமக்குமா ஈழத் தமிழ்ச் சமூகம்? ஈழ விடுதலைப் போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் ஏன் இலக்கியத்திலும் கூட அத்தகைய நல்ல வித்துகளும் நல்விளைவுக்கான முயற்சிகளும் இருந்தன; இருக்கின்றன. அவற்றை ஏற்று முன்கொண்டு செல்வதை விட, அவற்றுக்கு ஆதரவளித்துப் பலமாக்குவதை விட, எதிர்ச்சக்திகளின் மீது மோகம் கொண்டதே விதியானது. என்பதால்தான் எத்திசையின் பயனுறு வார்த்தைகளும் வெறும் சருகாகிப் புறமொதுங்கின. நடேசன் இங்கே முன்வைத்துப் பேசும் பிரதிகளிற் பலவும் தேவ வாக்கைத் தம்முள் கொண்டமைந்தவை. ஆயினும் தமிழ்ப் பெருந்திரளோ அவற்றைத் ‘தொட்டாற் சுடும்’என்று கருதி முகச்சுழிப்போடு விலக்கம் செய்து வருகிறது. சிறிய வட்டங்களே அவற்றைப் பேசியும் வாதிட்டும் முன்னெடுத்துச் செல்கின்றன.
உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி
“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”
‘மூன்றாவது கண் மற்றும் கரை தொடும் அலைகள்’
மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர். இரா. மேரியனின் ‘மூன்றாவது கண்’, ‘கரை தொடும் அலைகள்’ எனுமிரு கவிதை நூல்களின் வெளியீடு 16.02.2025 அன்று மட்டக்களப்புத்தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘மூன்றாவது கண்’ நூல்பற்றி செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.
எங்களுக்கும் காலம் வரும்!
விட்டில்களும் ஒருநாள் உயரப்பறக்கும். அப்படி பெண்களும் வீறுகொண்டு உயர்வர். உயர்ந்ததால் வீழ்ந்தாலும் அடக்குமுறை தீயை அணைப்போம் என்று அவர்கள் உறுதி கொள்கின்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்ட செங்கதிரோனின் கவிதை.
‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’
“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.
அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”
செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல” சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!
“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. “
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” !
“அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.”
செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் – ஒர் இலக்கியத் தளம்
“எழுத்தாளரும்,கலை இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் 13.12.2024 ஆகிய இன்று அகவை எழுபத்திநான்கைப் பூர்த்திசெய்து தனது எழுபத்தைந்தாவது அகவையுள் காலடி எடுத்துவைப்பதையொட்டி இக் கட்டுரை இடம்பெறுகிறது.”
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)
“கனகர் கிராமம்” தொடர் நாவலில் சூறாவளி அழிவுக்கு பின்னரான திட்டமிடல் ஏற்பாடுகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து பேசும் செங்கதிரோன், அதற்கு முன்னதாக மட்டக்களப்பை தாக்கிய சூறாவளிகள் பற்றியும் அவை குறித்து எழுந்த இலக்கிய வடிவங்கள் சில பற்றியும் குறிப்பிடுகிறார்.
