எங்களுக்கும் காலம் வரும்!

எங்களுக்கும் காலம் வரும்!

சீதன விளக்குச்

சுவாலையில் விழுந்து

வெந்து மடியும்

விட்டில் பூச்சிப்

பெண்கள் நாங்கள்.

இப்படி இனிமேல்

இருக்க மாட்டோம்!

என்றோ ஒருநாள்

ஒன்றாய்க் கூடுவோம்!

ஒன்றாய்க் கூடி

உயரப் பறப்போம்!

உயரப் பறந்து

விளக்கினில் வீழ்வோம்!

வீழ்ந்து விளக்குச்

சுவாலையை அணைப்போம்!

சுவாலையின்

சொந்தக்கார ஆண்களே!

நீங்களும் கவனம்!

ஏனெனில்,

நீங்களும் உடையலாம்

அந்தத் தருணம்!

அந்தக் காலமே

பெண்கள் எமக்குப்

பெருமைக்காலம்.

– செங்கதிரோன்