சொல்லத்துணிந்தேன் பத்தியில் வெளியான சில கருத்துக்கள் குறித்து வாசகர் ஒருவர் இது பகிரப்பட்ட வட்ஸ்ஸப் குழு ஒன்றில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன்.
Category: தொடர்கள்
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 8
மோசமடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகின்ற வரதராஜா பெருமாள் அவர்கள், நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து இந்தப்பகுதியில் பேசுகின்றார். இலங்கை அரசாங்க வரிக்கொள்கையில் உள்ள பாதகங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 8
மட்டக்களப்பில் அமைந்துவரும் நூலகத்துக்கான சில பரிந்துரைகளை செய்யும் வகையில் இந்தத்தொடரை எழுதி வருகின்ற நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், நூலகத்தின் ஒரு ஆவணக்காப்பகம் செயற்பட வேண்டிய வழிவகை குறித்து இந்தப் பகுதியிலும் பேசுகின்றார்.
தமிழகம் துரோகம் இழைத்ததா….? தலைவர்கள் துரோகிகளா….? (காலக்கண்ணாடி – 55)
இலங்கைப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு தமிழக தலைவர்கள் மீது, குறிப்பாக கலைஞர் கருணாநிதி மீது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஆனால், அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்க ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தகுதி இருக்கின்றதா என்று இங்கு கேள்வி எழுப்புகிறார் அழகு குணசீலன். தமிழக அரசியல் அமைப்புக்களின் இலங்கைத்தமிழருக்கான உதவிகளை அவர் மட்டிடுகிறார்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை: ஒர் அரசியல் போராளியின் பயணம்
ஒரு போராளியாக தான் கடந்துவந்த பாதை குறித்துப் பேசும் யோகன் கண்ணமுத்து(அசோக்) அவர்கள், இங்கு புளொட் அமைப்பில் தனது ஆரம்பகால அனுபவம், தனது காதல் ஆகியவை குறித்துப் பேசுகின்றார்.
பயனற்றுப்போகும் பொது முடக்கம்
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை மக்களும் பொருட்படுத்தவில்லை, அரசும் அதனை அமுல் படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. அதனால், அது பலனற்றுப் போவதாகக் கூறும் செய்தியாளர் கருணாகரன், இது பேரழிவுநிலைக்குள் தள்ளிவிடும் என்று அஞ்சுகிறார்.
1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்: (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))
தனது சொந்த மண்ணின் நினைவுகளை இங்கு பகிர்ந்துவருகின்ற பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், 1977 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் அரசுக்கட்சியின் (தமிழர் விடுதலைக்கூட்டணி) குழப்பகரமான நடவடிக்கைகள் குறித்து மேலும் பேசுகின்றார்.
சொல்லத் துணிந்தேன் – 89
விடுதலைப்புலிகளின் முகவரல்லாத அமைப்புகள் இணைந்து 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டாவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் பரிந்துரைத்த கோபாலகிருஸ்ணன் அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அமைப்புக்கள் அதில் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை பரிந்துரைக்கிறார்.
இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை அங்கு பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தும் வருகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்கிறார் செய்தியாளர் கருணாகரன். இந்த நிலை தொடர்ந்தால் அது பேராபத்தை மாத்திரமல்லாமல் போராபத்தையும் ஏற்படுத்திவிடும் என்பது அவரது கவலை.
மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)
மாறிச்செல்லும் உலக அரசியல் சூழலும் ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் என்னும் தலைப்பிலான தனது இந்தத் தொடரில் சிவலிங்கம் அவர்கள், 20 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக பேசப்பட்ட பாசிசம், கம்யூனிஸம் மற்றும் லிபரல் ஜனநாயகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராய்கிறார்.