நாடாளுமன்றத்தின் அண்மைக்கால நிகழ்வுகள் குறித்த தனது அவதானங்களை முன்வைத்துள்ள ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அங்கு தமிழ் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஆனாலும், அவை சரியாகச் செயற்படுமா என்பது குறித்த சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Category: தொடர்கள்
காலிமுகத்திடலில் நுனிப்புல் மேய்தல்..! (காலக்கண்ணாடி 83)
இலங்கை போராட்டங்கள் குறித்து தனது கருத்துகளை மீண்டும் பதியும் அழகு குணசீலன், இந்தப் போராட்டங்கள் இன்னமும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை முன்வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். பெரும்பான்மை இன மக்கள் தமது பேரினவாத தலைமையை இன்னொன்றின் மூலம் மாற்றீடு செய்வதற்கான முயற்சியே இவை என்கிறார் அவர்.
காலத்தைக் கடத்தும் அரசியல் கட்சிகளின் முயற்சிகள் (வாக்குமூலம்-13)
ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்காக என்று கூறிக்கொண்டு நாடாளுமன்ற முக்கிய கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் யாவும் காலத்தைக் கடத்தும் நடவடிக்கைகள் என்று விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், உண்மையில் தமிழ் மக்கள் இவற்றில் தமது காலத்தை செலவிடாமல், ஓரணியில் திரண்டு, தமது உரிமைகளை குறைந்தபட்சம் 13வது திருத்தத்தின் மூலமாவது உறுதிப்படுத்த முயல வேண்டும் என்கிறார்.
சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா?அல்லது உக்கிரப்படுத்துமா? – பகுதி 2
நாணய நிதியத்தால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா என்ற தனது ஆய்வின் இரண்டாவது பகுதியில், உள்ளூரில் மக்கள் மனதில் ஏற்பட்டு வரும் மாற்றம் அதனைவிட பலன் தரும் என்கிறார் ஆய்வாளர் சிவலிங்கம்.
கோத்தா கோஹோம்.. அடுத்து என்ன? .. அறிவுரை அல்ல ஆதங்கம்
இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்த தாது பார்வையை முன்வைத்துவரும் மூத்த இடதுசாரியான பி. ஏ. காதர் அவர்கள், இது வெறுமனே கோத்தாவுக்கு எதிரான போராட்டமாக மாத்திரமாக அல்லாமல், ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக மாற வேண்டும் என்கிறார்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-12)
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தமிழர் தரப்பு கட்சிகள் மிகவும் பலவீனமான வகையில் கையாள்வதாக குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இதனை புரிந்துகொண்டு தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
கடன் கண்ணியில் சிறிலங்கா..! பிணை நிற்கிறது இந்தியா…!! சிக்கெடுக்க வருகிறது ஐ.எம்.எப்..!!! (காலக்கண்ணாடி 82)
சர்வதேச கடன் பொறியில் சிக்கியுள்ளதாக கருதப்படும் இலங்கையை மீட்பதற்கான அண்மைக்கால நடவடிக்கைகள் சிலவற்றின் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்கு மூலம்-11)
இலங்கையின் தற்போதைய நிகழ்வுகள் அவரவர் அரசியல் லாபம் கருதி நடத்தப்படுபனவேயன்றி மக்களின் பொருள்தாரப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கியவை அல்ல என்கிறார் கோபாலகிருஸ்ணன்.
காலக்கண்ணாடி- 81 காலிமுகத்திடல் : ஒரு குறுக்கு வெட்டு முகம்..!
கொழும்பு காலிமுகத்திடலில் “கோத்தா கோ” என்ற தொனிப்பொருளில் நடக்கும் போராட்டத்தின் தன்மை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. யதார்த்தமான பிரச்சினைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயும் சிவலிங்கம் அவர்கள், அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் பரிந்துரைக்க முயல்கிறார்.