இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அழகு குணசீலன் எழுதும் குறிப்பு இது. அந்தப்பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இந்த நியமனத்தை வரவேற்கிறார் குணசீலன். செல்வராஜா அவர்களின் அனுபவமும், கல்வியறிவும் கிழக்குப் பல்கலைக்கழகத்த்தின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும் என்பது அவரது கருத்து.
Category: தொடர்கள்
தமிழ் இளைஞர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை புறக்கணித்து அரசியல் விளையாடும் தமிழ் தலைமைகள் (வாக்குமூலம்-17)
தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இளைஞர்கள் ஆகியோர் தமிழர் உரிமைகளுக்காக செய்த தியாகங்களை புறக்கணித்துக்கொண்டு, தமது சுய அரசியல் லாபங்களுக்காக சித்து விளையாட்டுக்களை செய்வதை தமிழ் தலைமைகள் இன்னமும் தொடர்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆய்வாளர் கோபாலகிருஸ்ணன்.
வைகாசு – “நாங்கள் சொல்வதைத் கேட்காவிட்டால், எங்கள் ஏகபோகத்தை ஏற்காதுவிட்டால் அவர்களின் ஆயுளை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்” (காலக்கண்ணாடி 88)
வைகாசி மாதம் இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமானது. பல முக்கிய சம்பவங்கள் அந்த மாதத்திலேயே நடந்துள்ளன. ஆனால், பெரும்பாலானவை படுகொலைகள். அவை இலங்கை தமிழர் அரசியலில் பெருத்த பின்னடைவுக்கு காரணமாகியுள்ளன. ஆராய்கிறார் அழகு குணசீலன்.
கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்!
மாஸ்டர் சிவலிங்கம் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் தலைசிறந்த சிறார் கதை சொல்லி மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். அண்மையில் காலமான அவர், வில்லுப்பாட்டுக்கலையை இலங்கையில் அறிமுகம் செய்தவர். பல்துறைக் கலைஞரான அவர் பற்றி செங்கதிரோன் எழுதும் நினைவுக்குறிப்பு இது.
நேட்டோ விரிவாக்கம்! ஐரோப்பாவில் ஒரு மத்தியகிழக்கு! (?) (காலக்கண்ணாடி 87)
உக்ரைன் மீதான ரஸ்ய போரை அடுத்து உலக அரங்கில் பல மாற்றங்கள் வெளிப்படையாகவே நடந்து வருகின்றன. அவற்றில் சில முக்கிய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவை நோக்கி நகர்வதையும் குறிப்பிட முடியும். இவை உலக ஒழுங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சம்பந்தனிடம் சில கேள்விகள் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-16)
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் நிலைப்பாடுகள் ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடுவதாகக் குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அவை குறித்து அந்த அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறார்.
ரணிலின் மறுபக்கம்..! (காலக்கண்ணாடி- 86)
இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னணி குறித்து இலங்கையிலும் உலக மட்டத்திலும் தற்போது அதிகமாக பேசப்படுகின்றது. அவரவர் சாதகமாகவும், பாதகமாகவும் தமது பார்வைக்கு ஏற்ப பேசுகின்றனர். இது அழகு குணசீலனின் ரணில் குறித்த சமநிலையான பார்வை.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-15)
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையை சூழ்ந்துள்ள விவகாரங்கள் குறித்துப் பேசுகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் மக்கள் உள்ளூர் அரசியல் சூழலில் சிக்காமல், பிராந்திய அரசியலின் திசையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்று கூறுகிறார்.
ஒரு தரப்பு வன்முறைமாத்திரமல்ல அனைத்து வன்முறைகளும் கண்டனத்துக்குரியவையே (காலக்கண்ணாடி 85)
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான் வன்முறைத் தாக்குதல்களும் மற்றும் ஏனைய இடங்களில் நடந்த தாக்குதல்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. ஆனால், சிலரோ ஒரு தரப்பு தாக்குதல்களை மாத்திரம் கண்டித்து, அடுத்தவற்றை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க போக்கு.
மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! (காலக்கண்ணாடி 84)
ராஜபக்ஷக்களை பதவி விலகக்கோரி போராட்டங்களை நடத்தியவர்கள் தாக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்த நிகழ்வுகளும் எதனைச் சொல்கின்றன, அண்மைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் எங்கு செல்கின்றன என்பவற்றை ஆராய்கிறார் அழகு குணசீலன்.