இப்படி ஒரு முடிவு எதிரிக்கும் வரக்கூடாது. ஆனால், பலருக்கு நமது மண்ணில் அது முடிந்தது. பூமியில் அமைதி மலர வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கட்டும். புத்தம் புதிய பூமி எமக்கு வேண்டும். அகரனின் மனதில் நின்றுபோன சில எஞ்சிய உணர்வுகள், ஒரு புனைவாக…
Category: சிறுகதைகள்
மேன்முறையீடு (சிறுகதை)
வரைபடத்தில் இலகுவில் தெரியாத ஒரு நாட்டில் இருந்துவந்து தஞ்சம் கோருவது ஒரு கொடுமைதான். அதிலும், அடுத்தவர் பற்றிய அக்கறையே இல்லாமல் இயங்கும் அதிகாரிகள் முன்பாக படும் அவஸ்தை இருக்கிறதே, அது ஒரு அவமானம். ஒரு இலங்கை அகதியின் மேன்முறையீட்டு அனுபவம் இது. நடந்தது பிரான்ஸில். அகரனின் சிறுகதை.
துரோகி(சிறுகதை)
உள்ளங்கள் பலவிதம். அவற்றில் சில இவ்விதம். இன, மதவாதம் எவ்வளவு படித்தாலும் மாறுவதில்லை. இங்கு இவர்களின் கல்வி விழலுக்கு இறைத்த நீர். இதுவும் ஒரு முற்றிலும் பொய்யல்லாத ஒரு கதை. எழுதியவர் செங்கதிரோன்.
அங்கிருந்து வந்தவர்கள் (சிறுகதை)
போர் மற்றும் அதன் அழிவுகளை மையப்படுத்தி பல இலக்கிய படைப்புக்களை பலரும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஆக்கங்களில் பேசப்படாத இப்படியான பக்கங்களும் போரில் நடந்திருக்கின்றன. அதனால், பாதிக்கப்பட்ட அப்பாவி இதயங்களும் அமைதியாக அழுதுகொண்டிருக்கின்றன. செங்கதிரோனின் முற்றிலும் கற்பனை என்று சொல்ல முடியாத ஒரு கதை இது.
குதிரைக்காறியும்- அகதிக்கனவானும்
பல மேற்கு நாட்டவருக்கு இலங்கை ஒரு அதிசயத்தீவு. அழகு கொஞ்சும் நாடு. ஆனால், அதன் இன்றைய நிலை அவர்களுக்கு புரிவதில்லை. இன்றைய எமது இளைய தலைமுறைக்கும் அன்று அவர்கள் பார்த்த அதிசயத்தீவு புரிவதில்லை. குதிரை பழகப்போன அகதிக்கனவான் ஒருவரின் அனுபவக் கதை இது. அகரனின் புனைகதை இது. ஆனால், மெய் உணர்வு.
விம்பம் (சிறுகதை)
சந்தர்ப்பம் சூழ்நிலை மனித குண இயல்புகளுக்கு காரணமாவதும் உண்டுதான். ஆனால், அதனையும் கடந்து கஸ்ட சூழ்நிலையிலும் குணம் மாறாத மனித மனங்களும் உண்டு. அப்படியான இனிமையான மனங்களின் இயல்புகள் சிறுவயதிலேயே வெளித்தெரியத் தொடங்கிவிடுவதும் உண்டு. சிலவேளைகளில் அவை ஆசிரியருக்கே பாடம் சொல்லித்தருவதும் உண்டு. பியாஸா தாஹிரின் சிறுகதை.
ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்
தமிழ் இனத்தைப் போல பல ஆதி இனங்கள் இன்று ஆபத்தில் இருக்கின்றன. அங்கு துயரமான கதைகள் பல இருக்கின்றன உலகுக்குச் சொல்ல. அழிவில் தப்பிய சில எச்ச சொச்சங்கள் உலகுக்கு கதையாகலாம். ஆனால், அவை சிக்கலான கதைகள். எமக்கும் சில இடங்களில் பொருந்திப்போகும் கதை. இதுவும் சிக்கலானது. ஆனால், இது ஒரு கதை, ஆனால், இது மெய். மெய்யான கதை. அகரன் கேட்டுப் பகிர முயலுகிறார்.
‘எல்லோருக்கும் பிடித்தவன்’ (சிறுகதை)
கீழைத்தேய ஆன்மீகம் சில வேளைகளில் மேற்கத்தைய உறவுகளின் கெட்ட பழங்கங்களை அகற்ற உதவுகின்றது. சிலவேளை அவை உணர்விழந்த உறவுகளை மீட்கவும் வேண்டும். இவனுக்கும் இப்போது அது தேவைப்படுகின்றது. காதலால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துபோட. அகரனின் சிறுகதை.
ஒன்லைன் வகுப்பு (சிறுகதை)
கொவிட் 19 புதிது புதிதான தேவைகளை மக்களுக்கு உருவாக்கியிருக்கிறது. அந்த தேவைகள் காரணமாக சில எதிர்பாரா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவற்றை கையாளத்தெரியாமல் அவர்கள் தவிப்பதும் உண்டும். அப்படியான ஒரு கதை இது.
கூடாத சேர்க்கை (சிறுகதை)
போதை மருந்து விவகாரம் எதிர்கால இளைஞர்களைக் காவுகொண்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதனைக் கடத்துவதில் பல முக்கிய பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் கொடுமை. இதனால், வரும் பிரச்சினைகளில் சிலவற்றை கோடிகாட்டும் ஒரு சிறுகதை. சபீனா சோமசுந்தரம் எழுதியது.