அழகு குணசீலனின் “கறுப்பு நட்சத்திரங்கள்”

அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும்.

மேலும்

வாழும் இலக்கியங்கள்!

ஒரு சினிமாவில் நாம் காட்சியை பார்த்து, ரசித்து விட்டுவந்தால் அது சினிமாவுக்கு வெற்றியல்ல.  அது வெறும்பொழுது போக்கு விடயமாகிறது . நாம் சினிமாவையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தை படித்துவிட்டோ அதையிட்டு நமது மனம் சிந்தித்து கிளரும்போது அதுவே அந்தச் சினிமாவை, நாடகத்தை, புத்தகத்தை படைத்தவனது வெற்றிக்கு அடையாளமாகிறது.

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல் (அங்கம் – 62)

உண்மை நிலவரங்களை உள்ளடக்கிய, ஆனால் நாவலாகத் தொடர்ந்த “கனகர் கிராமம்” அம்பாறை தமிழ் மக்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் மீள்குடியேற்றக் கனவுடன் இன்று நிறைவுபெறுகின்றது. ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் துயர் இன்னமும் தொடர்கிறது.

மேலும்

 ‘கலைத் தேனீ’ அந்தனிஜீவா மலையக கலை இலக்கிய உலகின் ‘முதுசொம்’

“தனது முதுமையான வயதிலும்கூட தேனீபோல் பறந்துபறந்து பணியாற்றி எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதிலும் அவர்களுடன் எளிமையாகவும் அன்னியோன்னியமாகவும் அன்பாகவும் பழகுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் அந்தனி ஜீவா காட்டும் ஆர்வம் பிரமிக்கவைப்பன.

  அதே வேளை அநீதி கண்டு கொதிக்கும்- மானுடத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் குணாம்சம் கொண்ட ஓர் இலக்கியப் போராளி அந்தனி ஜீவா.”

மேலும்

அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல் 

பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் எழுத்தாளரான அகரன் எழுதிய “துரோகன்” என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றிய ஒரு விமர்சனம் இது.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 60)

இன்றைய “கனகர் கிராமம்” தொடர் நாவலின் அங்கத்தில் கனகரட்ணம் அவர்களின் மறைவுக்குப்பின்னர் அம்பாறையில் நடந்த சில விடயங்கள் குறித்துப்பேசும் செங்கதிரோன், முக்கிய கதாபாத்திரமான கோகுலன் எதிர்கொண்ட சில அரசியல் அழுத்தங்கள் குறித்தும் விபரிக்கிறார்.

மேலும்

“கனகர் கிராமம்”. அரசியல் – சமூக – வரலாற்று நாவல். (அங்கம் – 59)

“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில் அமைச்சர் கனகரட்ணம் அவர்களின் மரணம், இறுதி நிகழ்வுகள் ஆகியவை குறித்து செங்கதிரோன் நினைவு கூர்கிறார்.

மேலும்

செங்கதிரோனின் “யாவும் கற்பனையல்ல”  சிறுகதைத் தொகுப்பு – ஒரு புதிய பரிமாணம்!

“இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும், வழமையான சிறுகதைக்குரிய மரபு வழிவந்த வாய்ப்பாடுகளை மீறி அல்லது கட்டுடைத்து உருவம், உள்ளடக்கம், உத்தி என்பவற்றில் ஒரு வித்தியாசமான திசையைக் காட்டுவதன் மூலம் இந்நூலின் வரவு ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியுள்ளது. ​​“

மேலும்

மட்டக்களப்பில் எஸ்.பொன்னுத்துரையின் ‘முதல் முழக்கம்’                        நாடகமும் பின்னணிக் கதையாடல்களும் 

“இலங்கையின் தமிழ் நாடக வரலாறுகளை எழுதியோர் எஸ்.பொன்னுத்துரையின் நாடக அக்கறைகளையும் ‘முதல் முழக்கம்’ போன்ற நாடகத்தின் திணிவுகளையும் பேசாமல் இருட்டடிப்புச் செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாடகத்தின்மீதான எஸ்பொவின் ஊழியம் மேற்கிளம்பிவரும் காலம் அண்மித்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.”

மேலும்

மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த  “சிலப்பதிகாரம்” !

“அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது.
இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு,  வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச்  சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம்.”

மேலும்