கீழைத்தேய ஆன்மீகம் சில வேளைகளில் மேற்கத்தைய உறவுகளின் கெட்ட பழங்கங்களை அகற்ற உதவுகின்றது. சிலவேளை அவை உணர்விழந்த உறவுகளை மீட்கவும் வேண்டும். இவனுக்கும் இப்போது அது தேவைப்படுகின்றது. காதலால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துபோட. அகரனின் சிறுகதை.
Category: சிறுகதைகள்
ஒன்லைன் வகுப்பு (சிறுகதை)
கொவிட் 19 புதிது புதிதான தேவைகளை மக்களுக்கு உருவாக்கியிருக்கிறது. அந்த தேவைகள் காரணமாக சில எதிர்பாரா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவற்றை கையாளத்தெரியாமல் அவர்கள் தவிப்பதும் உண்டும். அப்படியான ஒரு கதை இது.
கூடாத சேர்க்கை (சிறுகதை)
போதை மருந்து விவகாரம் எதிர்கால இளைஞர்களைக் காவுகொண்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இதனைக் கடத்துவதில் பல முக்கிய பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் கொடுமை. இதனால், வரும் பிரச்சினைகளில் சிலவற்றை கோடிகாட்டும் ஒரு சிறுகதை. சபீனா சோமசுந்தரம் எழுதியது.
குற்றமும்- தண்டனையும் (சிறுகதை)
ஒழுக்கமாக இருக்க நினைப்பவர்களைக் கூட சில வேளைகளில் சந்தர்ப்பங்கள் குற்றவாளிகளாக மாற்றிவிடுகின்றன. மனதில் இருக்கும் வக்கிரம் சில நேரங்களில் தலைகாட்டி விடுகின்றது என்றும் இதனைச் சொல்லலாமோ? அகரனின் சிறுகதை.
தேடிவர யாருமில்லை ! (சிறுகதை)
நெஞ்சில் ஆடிய நிலவு மேகத்தில் பயணத்தை தொடங்கியிருக்கும். கனவில் நின்ற முகம் கனவாக ஆகிவிடுமா? உறவுகள் எப்போதும் தொடர்கதையா? இது அகரனின் சிறுகதை.
மாஸ்க் (சிறுகதை)
கொரொனா நிறைய மோசமான கனவுகளையும் தருமாம். சிலவேளை தூங்காமலே கனவு கண்டால் என்ன செய்வது சபீனாவின் ஒரு புனைவு இது.
இளம்சிங்க பண்டாரம் (சிறுகதை)
நீண்ட சிறை பெரும் கொடுமை. அதுவும் நாட்டைப் பறிகொடுத்து சிறையிருத்தல் அதனிலும் கொடுமை. அதனை அனுபவித்த ஒரு யாழ் மண்ணின் அரச வாரிசின் உணர்வு இது. புனைந்தவர் அகரன்.
பெருநாள் உடுப்பு (சிறுகதை)
நோன்பும், அதனைத்தொடர்ந்த பெருநாளும் புனிதமானவை. சிலவேளைகளில் எதிர்பாராதவர்களிடம் இருந்து கிடைக்கும் பெருநாள் பரிசும் புனிதமாகிவிடுவதுண்டு. நிம்மதியையும், சுகந்தத்தையும் அவை தந்துவிடும்.
ஓய்வுபெற்ற ஒற்றன்? (சிறுகதை)
‘நானே அரசன்’ என்று சுயபட்டம் கட்டுபவர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டாத சில பரம்பரைகளும் மறைந்திருப்பது இந்த உலகத்தின் புதுமை. புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் மிகச்சிலருக்கு இப்படியான புதுமையான அனுபவங்கள் இன்ப அதிர்ச்சியை தருவதும் உண்டு. அகரனின் சிறுகதை.
கெட்ட பழக்கம் (சிறுகதை)
புலம்பெயர் மண்ணில் சிலவேளை குடும்ப உறவுகள் பிரிவதற்கு பலவிதமான காரணங்கள் அமைந்துவிடுகின்றன. இதைத்தான் விதி என்பதோ? வெளியில் துணிச்சலாய் தெரியும் பலருக்குள் எத்தனை வேதனைகள். அதில் இதுவும் ஒன்று. அகரனின் சிறுகதை.
