தோழர் பத்மநாபா பற்றிய தனது உரை ஒன்றை ஒட்டி இந்த வாரப் பத்தியை எழுதும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதிகாரப்பரவல் ஒன்றே தமிழர் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்றும், ஆனால், அந்த விடயத்தில் அக்கறையற்ற போக்கை தமிழ் கட்சிகள் காண்பிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். ஆகவே அனைத்து தரப்பும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் இணைந்து, ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ ஒன்றினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
Category: கட்டுரைகள்
சாதி என்பது தமிழர் மத்தியில் பழங்கதை அல்ல! (சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 03 )
சாதி என்பது பழங்கதை, வர்க்க ரீதியிலேயே தமிழர் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும் என்று இடதுசாரிகளால் பார்க்கப்படுவது குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் எழுவான் வேலன். சாதியும் சேர்ந்தே இன்றுவரை தமிழர் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் வாதிடுகிறார்.
நவ தாராளவாத அரசியல் பொருளாதார தோல்வி: அடுத்த நகர்வு என்ன?
நவதராளவாத பொருளாதார தோல்வியை அடுத்து எப்படியான நகர்வுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவலாம் என்று ஆராயும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், தனியார் துறையுடன் அரசதுறையும் வணிகத்தில் போட்டியிடும் “சீன முன்மாதிரி” மீதும் கவனம் செலுத்துகிறார்.
கிழக்கு அரசியல்: பிரதேசவாதமா? (காலக்கண்ணாடி 44)
தமிழர் தாயகத்தில் சமூக பொருளாதார அரசியலில் மட்டுமன்றி கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களிலும் வேறுபட்டு நிற்கின்ற கிழக்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கானது அப்பட்டமான ஒடுக்குமுறையும், ஜனநாயகப் பற்றாக்குறையுமாகும் என்று வாதிடும் அழகு குணசீலன் அவற்றின் விளைவே கிழக்கின் தனித்துவ அரசியல் உணர்வு என்று கூறுகிறார்.
தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம்
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் சில அரசியல் தலைவர்களின் சொந்த அனுபவமும் மன்னிக்கும் மனப்பாங்கும் சில நன்மைகளை கோடிகாட்டியுள்ளன. ஆகவே இந்த விடயத்தை பேசிக் குழப்பாமல், புத்திசாலித்தனமாகக் கையாண்டு ஏனைய கைதிகளின் விடுதலைக்கும் வழி செய்ய வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
புலம் பெயர்ந்த சாதியம் 10
இலங்கையில் ஆரம்பத்தில் தமிழர் மத்தியில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓரளவு நடந்த போதிலும் 80களில் சிங்கள அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகள் அனைத்தையும் பேரினவாதத்துக்கு எதிரான திசையில் மாத்திரம் திருப்பி விட்டதாக கூறுகிறார் தேவதாசன்.
தலைமை மாடு முன்னால்……. பட்டி பின்னால்…….! (காலக்கண்ணாடி – 43)
இலங்கை விடயத்தில் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றன. ஆனால், சர்வதேச சமூகத்தை உரிய வகையில் அணுகத்தெரியாமல் தமிழர் தரப்பு எல்லாவற்றையும் கடந்த காலம் போல குழப்பிக்கொள்வதாக விமர்சிக்கிறார் அழக் குணசீலன்.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 4
மட்டக்களப்பில் ஒரு நூலகம் அமைக்கப்படும் சூழ்நிலையில், ஒரு நூலகம் அமைய வேண்டிய விதம் குறித்த தனது அவதானங்களை தொடர்ச்சியாக எழுதிவரும், நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், இந்தப்பகுதியில் கட்டட அமைப்பு பிரத்தியேகமான பிரிவுகளுக்கு எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்
அதிகார பகிர்வின் மூலம் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பறிக்கும் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக தொடரும் நிலையில், அவற்றை தமிழ் தலைமைகள் கண்டும் காணாததுபோல இருப்பதாக பத்தியின் ஆசிரியர் கவலை தெரிவிக்கின்றார். உரிய புத்திசாலித்தனத்துடன் பதில் நடவடிக்கை எடுக்க தமிழ் தலைமைகள் தவறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘கங்கா மாதா பொய் சொல்வதில்லை’ – (மறைக்கப்பட்ட இந்திய கொவிட் மரணங்கள்)
கொவிட் தாக்கம் பற்றிய செய்திகளை இந்திய மத்திய அரசாங்கம் மறைப்பதாக பல தரப்பாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதனை அந்த நாட்டின் மோடி அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், இந்தியாவின் புனித நதிகளில் முக்கியமான கங்கா நதி இந்தத்தடவை மோடியை காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறுகிறார் இந்தக் கட்டுரையாசிரியர்.