நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மாகாண சபைத்தேர்தல் குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ளன. இங்கு கிடப்பில் போடப்பட்ட அந்த வாக்குறுதிகள் சில குறித்து ஞாபகமூட்டும் எழுவான் வேலன், மக்களுக்காக பேசுகின்றார்.
Category: கட்டுரைகள்
‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை
தான் படித்த நூல்கள் பற்றி அரங்கம் வாசகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வரும் “அகரன்” ஒரு அறிமுக எழுத்தாளர்தான். ஆனால், அவரது தரவுகள் ஆழமானவை. உலக அனுபவத்தை தனது வாசகர்களுடன் பகிர அவர் முனைகிறார் இங்கு.
சொல்லத் துணிந்தேன் – 67
விடுதலைப்புலிகளின் வேட்டும், தமிழரசுக்கட்சியின் வோட்டுமே தமிழ் தேசிய அரசியலை குழப்பியதாக கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு, நிலைமையை மேலும் குழப்பாமல், 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முனைவதே வழி என்கிறார்.
கெட்ட பழக்கம் (சிறுகதை)
புலம்பெயர் மண்ணில் சிலவேளை குடும்ப உறவுகள் பிரிவதற்கு பலவிதமான காரணங்கள் அமைந்துவிடுகின்றன. இதைத்தான் விதி என்பதோ? வெளியில் துணிச்சலாய் தெரியும் பலருக்குள் எத்தனை வேதனைகள். அதில் இதுவும் ஒன்று. அகரனின் சிறுகதை.
கிழக்குப் பல்கலைக் கழகமும் மீள் நியமன விண்ணப்பங்களும்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மேனாள் முதன்மையர்களில் ஒருவராக இருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து புலம்பெயர்ந்த பால சுகுமார் அவர்கள், கிழக்கு மண் கண்ட ஒரு புத்திஜீவி. ஆனால், அவர் அங்கு திரும்பச் சென்று தனது பணிகளில் மீள இணைய எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக பெரும் வேதனைப்பட்டிருக்கிறார். அனைத்து மக்களின் பார்வைக்காக அவரது இந்தக் கருத்தை இங்கு முன்வைக்கிறோம். கிழக்கு பல்கலைக்கழகமோ, உரிய வேறு யாருமோ இதற்கு பதிலளித்தால், அதனை பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.
அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!
அண்மைக்காலமாக, குறிப்பாக ஜெனிவா மாநாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் கையாழும் விதம் குறித்து விசனம் வெளியிடுகிறார் தெய்வீகன். அதனைப்புரிந்தும் இலங்கை தமிழர் தரப்பு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அவரது கவலை.
புலம் பெயர்ந்த சாதியம் 3
சாதி அறிய ஊர் கேட்பது புலம்பெயர் தேசத்தில் யுக்தி. ஆனால், தனது சாதியை மறைக்க விரும்புவோர் அதனால் படும் அவதி சொல்லி முடியாதது. மறைக்காமல் நேரடியாக சொல்ல நினைக்கும் போது ஏற்படும் விளைவுகளும் வித்தியாசமானவையே. சாதி மறுப்புத்திருமணங்கள் கொஞ்சம் அதிகமாகவே புலம்பெயர் தேசத்தில் நடக்கின்றன. காரணம் ஆராய்கிறார் தேவதாசன்.
இருக்கும் அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான முயற்சி
இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர் அ. வரதராஜ பெருமாள். ஸ்தம்பித நிலையை அடைந்துள்ள இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு என்பது அதிகாரப் பகிர்வின் மூலமே சாத்தியம் என்கிறார் அவர். ‘எதிர்பார்க்கிற அளவுதூரம் போகாவிட்டாலும் பாதகமொன்றில்லை. உருப்படியான அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து ஆற்றல் மிக்க ஒரு மாகாண சபை ஏற்பட்டு அது காத்திரமாக செயற்படுமானால் அதுவே இலங்கையின் ஒட்டு மொத்த தேசிய அரசியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாகும்’ என்கிறார் அவர்.
இலங்கையில் மதரசாக் கல்வி: ஒரு சமநிலைப் பாடத்திட்டத்துக்கான தேவை
இலங்கையில் மதரசாக் கல்வி குறித்த கருத்தாடல்கள் அண்மைக்காலமாக கொஞ்சம் அதிகமாகவே எழுந்துள்ளன. இந்த நிலையில் மதரசாக்களில் ஒரு சமநிலைப்பாடத்திட்டத்துக்கான அவசியத்தை வலியுறுத்துகிறார் ஜிஃப்ரி ஹாசன்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 21)
புலம்பெயர்ந்த நிலையில் சொந்த மண்ணை திரும்பிப்பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், சமுக பணிகளில் முனைப்புக் காட்டும்போது ஏற்படும் சில சங்கடங்களை பேசுகிறார்.
