“முன்னைய எந்தவொரு அரசாங்கத்துக்கும் கிடைத்திராத பாராளுமன்றப் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி. தலைவர்கள் தங்களுக்கு சுமுகமாக அரசாங்கத்தை நடத்தக் கூடிய பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் போதுமானது என்று வெளிப்படையாகக் கூறியபோதிலும், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கினார்கள்.
அத்தகைய பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்ற அதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்னென்றுமில்லாத அளவுக்கு பலவீனப்பட்டிருப்பது ஒரு கட்சி ஆட்சியில் அரசாங்கம் நாட்டம் காட்டக்கூடும் என்ற பீதிக்கு முக்கியமான ஒரு காரணம். ஆனால், அத்தகைய எந்த முயற்சியிலும் அரசாங்கம் இறங்கக் கூடிய சாத்தியம் இல்லை. என்றாலும், அவ்வாறான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படுமானால் இலங்கைக்கு பல ‘அறகலய’ க்கள் தேவைப்படலாம்.”
