‘கடந்த கால அனர்த்தங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியல் வர்க்கம் இன்னமும் கூட தயாரில்லாமல் இருப்பது ஒரு வெட்கக்கேடாகும். இது கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு.’
Category: செய்திகள்
சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் -சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி:7.)
“பொய்யும், புரளியும் நிறைந்த, உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட, திரிவுபடுத்தப்பட்ட, தனிநபர் வழிபாடு சார்ந்த, தேசபக்தி வரலாறு ஒன்றே கடந்த முப்பதாண்டுகளில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆயுத அதிகாரம் துணைபோனது. போர்க்கால கலை, இலக்கியங்கள் என்பவற்றை மறுவாசிப்பு செய்யும் எந்த ஒரு ஆய்வாளரும் இந்த அதிகார பக்தியை அறிந்து கொள்ள முடியும். மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது வாய்ப்பூட்டு போட்டு, அதிகாரம் தன்நிலை சார்ந்ததாக அந்த வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.“
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 43)
“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில், தான் கட்சிக்கு எதிராக வாக்களித்தமை, தன்னைச்சுட்டவர்கள் பற்றிய தனது உணர்வலைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெட்ணம் பேசுகிறார்.
பனாகொடயும் – படுவான்கரையும்: பொன்னார் மேனியனுக்கு புலித்தோலா…! (மௌன உடைவுகள்-98)
அண்மையில் காலமான ஈழ விடுதலை மூத்த போராளி தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கான அழகு குணசீலனின் அஞ்சலிக்குறிப்பு இது. ஏனையோரில் இருந்து அவர் எவ்வாறு வேறுபட்டார் என்பதை இது மதிப்பிடுகிறது.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்
ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சாகசமான நடவடிக்கைகளுக்கு பேர்போன மிகச்சிலரில் ஒருவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். அவர் அண்மையில் காலமானார். அவர் பற்றிய செய்தியாளர் கருணாகரனின் அஞ்சலிக்குறிப்பு.
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 42)
“கனகர் கிராமம்” தொடர் நாவலின் இந்தப்பகுதியில், கனகரட்ணம் எம்பி, வரவு செலவுத்திட்டத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை, அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமை போன்ற விசயங்கள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி தேர்தல் படும்பாடு
இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் என்ன, அடுத்த தேர்தலை எப்போது நடத்தவேண்டும் என்பவை போன்று அண்மையில் சூடுபிடித்த விவகாரங்கள், இவை குறித்த வழக்கு ஆகியவற்றின் பின்னணியை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
‘தமிழ்த் தேசியத்தை எவரும் குத்தகைக்கு எடுக்கத் தேவையில்லை’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-13)
காலம் முழுவதும் தமிழ் மக்களை வஞ்சித்து அரசியல் செய்தவர்களையெல்லாம் இரவோடு இரவாகப் புனிதராக மாற்றும் ‘இரசவாதம்’ இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ என்ற வார்த்தைக்கு உண்டு.
அதேபோல காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துச் செயல்பட்டவர்களைச் சடுதியாகத் ‘தமிழ்த் தேசியத் துரோகி’ எனப் பட்டம் வழங்குவதும் இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ எனும் வார்த்தையைச் சொல்லித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
எதிரும் புதிரும்: இரு தேசியங்களின் கருத்தியல் மோதல்….! (மௌன உடைவுகள்-97)
கடந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஜே.வி.பி. சிறுபான்மை மக்கள் மீது தனது அக்கறையை வெளிப்படுத்தவில்லை. அதை வெளிப்படுத்துவதற்கான,போராட்டங்களை நடாத்துவதற்கான வாய்ப்பும், வளங்களும் அவர்களுக்கு இருந்தும் அதை அவர்கள் செய்யவில்லை. இதனால்தான் வடக்கு கிழக்கு தொல்பொருள் ஆராய்ச்சி, காணிப்பிரச்சினைகள், பௌத்த தலங்கள் அமைப்பு, மேய்ச்சல் தரை விவகாரங்களில் , நினைவேந்தல் நிகழ்வுகள், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் எல்லைப்புற பிரச்சினைகளில் ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ , அல்லது அதற்கான ஒரு தீர்வை முன்வைக்கவோ, சிறாபான்மை பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் செயற்படவோவில்லை.
பிரிட்டன்: இது கடவுளற்ற நாடாளுமன்றமா?
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களில் கணிசமானோர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். கணிசமானோர் தமது பதவிப்பிரமாணத்தை எந்த மதப்புத்தகத்தின் மீதும் செய்யவில்லை. பிரிட்டன் கடவுளில் இருந்து விலகி வருகிறதா?
