புலம்பெயர் தமிழர், தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவுவது போதாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களில் சிலராவது பெருமளவு உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டே வருகின்றனர். ஆனால், இவர்களை ஒருங்குணைப்பதற்கு தாயகத்தில் போதுமான முதற்சிகள் இல்லை என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இவை குறித்த தொடரின் முதல் பகுதி.
Category: அரசியல்
வேட்டியா….? கோவணமா…..? 13: இருப்பதையாவது இழக்காமல் இருப்பதே சாணக்கியம்..!
விடுதலைப்புலிகள் செய்த தமிழ் தேசியத்தவற்றை தமிழ்க்கட்சிகள் மீண்டும் செய்தால், தமிழ் மக்களின் சாபத்தை அவை ஏற்க நேரிடும் என்கிறார் அழகு குணசீலன்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள்
13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்று கூறி, அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை குறைக்கும் வகையில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.
வாக்குமூலம்-72
அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்து குறித்த கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.
அதிகாரப்பகிர்வு: ‘நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்….!’
அதிகாரப்பகிர்வு விடயத்தில் தாம்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தமிழ் தேசியக்கட்சிகள் சில குழப்பம் செய்வதாகக்கூறும் அழகு குணசீலன், ‘தமிழ் மக்களை “பிச்சை “எடுக்க வைத்தது சிங்கள பேரினவாத அரசு மட்டுமா…….? இதில் தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்கு உண்டு’ என்கிறார்.
13 படும்பாடு
இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கமாகக்கொண்ட அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அவற்றின் தோல்விகள் குறித்துப்பேசும் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம், இந்த விடயத்தில் தமிழர் பலவீனப்பட்டு பிளவுண்டு இருப்பது குறித்தும் கவலையை வெளிப்படுத்துகிறார்.
ஜனா காட்டும் வழி!மட்டக்களப்பின் இன்றைய தேவை அரசியல் பக்குவம்.
மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளன. குறிப்பாக வன்செயல்களுக்கு பேர் போனதாக சிலரால் கடந்தகாலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்த ரெலோ அமைப்பின் போராளியாக, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜனாவின் தற்போதைய செயற்பாடுகள் ஒரு அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவராக அவரை அடையாளம் காட்டுவதாக கருத்துகள் வருகின்றன. இது அவர் சார்ந்த அமைப்புக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடியவை.
வாக்குமூலம்-71. (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
இந்தியாவை புறக்கணித்துவிட்டு, இலங்கை அரசாங்கத்துடன் மட்டும்பேசி தமிழர் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் பேசிவருவதை கண்டிக்கும் கோபாலகிருஸ்ணன், இப்படியான தலைவர்களின் வாய்ப்பேச்சில் மக்கள் மயங்கக்கூடாது என்கிறார்.
ஆடி ஆட்டுமா, ஆடியடங்குமா?
ஆடிக்கும் இலங்கைக்கும் மிக நெருக்கமோ அல்லது நெருக்குவாரமோ என்று குழம்பும் அளவுக்கு ஆடி மாதம் இலங்கையின் முக்கிய நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அரசியல், பண்பாட்டு, கலாச்சார ரீதியாகவும் அத்தனை பிணைவு. இது குறித்து செய்தியாளர் கருணாகரன்.
சில்லறைச் சிதறல்.!அரியநேந்திரன் உடைத்த உண்டியல் ….!!
தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு வாந்தி எடுக்கவும் , வயிற்றால போகவும் அரங்கம் வைத்தியம் செய்கிறது. கொஞ்சமாவது ஊத்தையை ஊத்திக் கழுவ முடிந்தால் அது ஊடகம் ஒன்றின் பணி. அப்படி இல்லையேல் தமிழ்த்தேசியம் விரும்புவதை அரங்கத்தில் எழுதுவதற்கு அரங்கம் பத்தியாளர்கள் எதற்கு ? எங்காவது இருக்கும் ஒரு அச்சகத்தை தூக்கி கொண்டு போய் அதை நீங்களே செய்துவிட்டு போகலாமே…!
