பானைக்குள் தலையை விட்ட ஆட்டை மீட்ட அறிவிலிகளின் நிலையில் ராஜபக்ஸக்களும், அவர்களுக்கு வாக்களித்த சிங்கள பெரும்பான்மையின மக்களும் இருப்பதாக கூறுகிறார் பத்தியின் ஆசிரியர். அரசாங்கம் தனது நுட்பமற்ற நடவடிக்கைகளால் நாட்டை சீரழித்திருப்பதாகவும், அவர்களுக்கு சிங்கள பேரினவாத நோக்கில் வாக்களித்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவதாகவும் அவர் கூறுகிறார்.
Category: அரசியல்
தமிழரசுக்கட்சியும் அகிம்சையும் (சொல்லத் துணிந்தேன்—98)
தமிழரசுக் கட்சியின் போலியான அகிம்சைப் போராட்டங்கள் இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பல பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் த.கோபாலகிருஸ்ணன். சில சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் அதனை விபரிக்கிறார்.
தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!
தமிழருக்கு என்று ஒரு தனியான குணமுண்டு என்று சொல்லப்படுவது ஒரு பெருமையான வாக்கியம். ஆனால், உண்மையில் தமிழரிடம், குறிப்பாக இலங்கைத் தமிழரின் சில குணாதிசயங்கள், அந்த இனத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. செய்தியாளர் கருணாகரனின் பார்வை.
சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !
அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் சுமந்திரனின் அமெரிக்க விஜயம் குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். அரங்கம் பத்திரிகையில் இருந்து.
ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)
அண்மைக்கால ஆசிரியர் போராட்டம் குறித்த ஒரு பார்வை இது. இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை, அதற்கான காலம் உட்பட பல விடயங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
இலங்கையின் உணவு உற்பத்தித்திறனின் போதாமை குறித்து கடந்த வாரங்களில் பேசிய பொருளாதார வல்லுனர் வரதராஜா பெருமாள் அவர்கள், முன்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் பாதிப்புகளை வர்ணிப்பதுடன், அதேவேளை, அண்மைக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதியால் அமுல்படுத்தப்படும் இயற்கை விவசாய முயற்சியின் குறைபாடுகளையும் மதிப்பிடுகிறார்.
இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!! (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்! (பாகம் 15))
புளொட் அமைப்பில் தனது அனுபவங்கள் குறித்து விபரித்துவரும் யோகன் கண்ணமுத்து (அசோக்) அவர்கள், அந்த அமைப்பின் கட்டமைப்பு செயற்பட்ட விதம் அதன் குறைபாடுகள் குறித்து விபரிக்கிறார்.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி: என்ன பிரச்சினை?
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது குறித்த ஜனாதிபதி செயலணி நியமனம் குறித்து பல தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தக் கண்டனங்களில் பெரும்பாலானவை, அந்தச் செயலணிக்கான தலைவர் நியமனம் குறித்ததே ஒழிய அந்த ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற சித்தாந்தத்துக்கு எதிரானவை அல்ல என்கிறார் ஆய்வாளர் எம் எல் எம் மன்சூர். அந்தச் செயலணி நியமனம் குறித்த விடயங்களை அவர் இங்கு ஆராய்கிறார்.
சொல்லத் துணிந்தேன் – 97
தாம் இணக்க அரசியலில் ஈடுபட்டு, அரச பதவிகளை அனுபவித்த காலங்களில் கூட தமிழ் தேசியக்கட்சியான தமிழரசுக்கட்சி உள்ளிட்டவை தமிழ் மக்களுக்காக எதனையும் வினைத்திறனுடன் பெற்றுத்தரவில்லை என்கிறார் கோபாலகிருஸ்ணன். மறைந்த அமைச்சர் அஸ்ரப் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணக்க அரசியல் மூலம் சாதித்ததில் ஒரு சிறிய அளவைக்கூட தமிழ் தேசியக்கட்சிகளால் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 12
தென்பகுதி வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் அங்கும் புறக்கணிக்கப்பட்டமை குறித்த இந்த தொடரை எழுதி வருகின்ற கருணாகரன், இந்த மக்களுக்கு உதவியவர்கள் என்று பார்த்தால் அவர்கள் கிறிஸ்தவ குழுக்களும், தமிழ் இயக்கங்களுமே என்கிறார்.