மண்டூர் அசோகாவின் ‘எழுதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு:  ஒரு பார்வை

இந்தத் தொகுப்பில் கோர்த்தெடுக்கப்பட்டிருக்கும் பத்து சிறுகதைகளில் ஐந்து சிறுவர்களின் கல்வி, அவர்களின் பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு, ஆசா பாசங்கள், சிறுவர் கல்வி, உரிமை மீறல்கள் ஆகியன உணர்வு பூர்வமாகப் பேசப்படுகின்றன. மூன்று சிறுகதைகளில் பெண்களின் திருமணத்துக்குப் பின்னரான பிறழ்வான பாலியல் நடத்தை, மனவெழுச்சிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புகள், உறவுச் சிக்கல்கள் என்பவை உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுகதை போர்க்கால இழப்புக்களையும் அவல வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாக விபரிக்கின்றது. ‘வேட்டை’ சிறுகதை இரு நண்பர்களின் இணைபிரியாத நட்புறவினையும் ஒருவரின் இழப்பு, மற்றவர் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வதும் வாசகரின் உணர்வுகளை உறைய வைப்பனவாக அமைகின்றது.  
இத்தொகுதியிலுள்ள கதைகளின் தெரிவு என்பது கதை ஆசிரியர் வாழ்ந்த பிரதேசத்தில் ஊடாடிய மாந்தர்களுக்கு நேர்ந்த அவலங்கள், துன்ப, துயரங்கள், வாழ்க்கைப் போராட்டங்களில் அவர் உள்ளத்தை நெகிழ வைத்த உண்மைச் சம்பவங்கள் கதைத் தெரிவுகளாகவும் பொருளாகவும் கருவாகவும் அமைந்திருக்க வேண்டும்.”

மேலும்

‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்: பகிர்வுகள்

2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. காலம் கடந்து வந்தடைந்த இது, செங்கதிரோனின் குறிப்புடன் ‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும்.

மேலும்

புண்ணியபுரம்-வரலாற்று நாவல்

‘ஈழத்தைப் பொறுத்தவரை 1895 இலிருந்து ஆரம்பித்து இன்று 2025 வரையிலான 130 வருடகாலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்று நாவல்களே படைக்கப்பட்டுள்ளன எனும் பகைப்புலத்தில் இப் ‘புண்ணியபுரம்’ நாவலின் வரவு முக்கியத்துவம் மட்டுமல்ல இதன் உருவம் உள்ளடக்கம் மற்றும் உத்தி காரணமாக முன் வரிசையில் வைக்கப்பட வேண்டியதொன்றுமாகும். ​‘

மேலும்

“இன்னும் கன்னியாக..”

கதைகளைப் பின்னியிருக்கும் புனைவு மொழி சிற்றாறு ஒன்று வளைந்தும் நெளிந்தும் ஆரவாரமில்லாமல் அமைதியாக ஓடுகின்ற ஒயிலாட்டம் இயல்பாகவும் – எளிமையாகவும் – சிக்கல்களில்லாமலும் மொழியின் ஓட்டம் அமைந்துள்ளது. வாசகனை வசீகரிக்கின்ற மொழிநடை நூலாசிரியருக்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளது.

மேலும்

உயிரின் கண்ணீர்த்துளி உலகின் இரத்தத் துளி

“1980 களின் முற்பகுதியில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த ‘பலஸ்தீனக் கவிதைகள்‘ தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியதையும் விடக் கூடிய கனத்தை, வலியை, வலிமையை இந்த மரித்தோர் பாடல்களில் காணலாம். இங்கே உள்ளவை ஒவ்வொன்றும் நம்முடைய உயிரில் அதிர்வை உண்டாக்குவன. அத்தனையும் சாட்சியமானவை.ஒவ்வொருவருடைய இறுதிக்கணச் சாட்சியங்கள். நிகழ் உண்மைகள். பலஸ்தீனக் கவிதைகள் அன்றைய நிலையில், போராட்டத்துக்கான பெரும் பங்களிப்பென்றால், இது இன்றைய சூழலில், மக்களின் மீதான அழிவுத் தாக்குதலில் பெரும் சான்றுத்துணையாகும்.”

மேலும்

ஜனாதிபதியின் உரைகளும், சுமந்திரனின் சாவால்களும்!(வெளிச்சம்:053)

“பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமக்குள்ள சிறப்புரிமையை பயன்படுத்தி இல்லாத, பொல்லாத பொய்களை பேசி வருகின்றனர். அந்த பாணியில் தான் ஜனாதிபதியும் தனது வழக்கு விடுபாட்டு சிறப்புரிமையை பயன்படுத்தி வாய்க்கு வந்தவாறு பேசி வருகிறார். இந்த போக்குகளை எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிழித்து தொங்கவிட்ட அநுரகுமார திசாநாயக்கவும், தோழர்களும் அதிகாரத்திற்கு  வந்த பின்னர் அதையே செய்கிறார்கள். இதற்கு  பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தல், புதிய அரசியல் கலாச்சாரம் என்ற வெள்ளையடிப்புக்கள் வேறு.”

மேலும்

அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’-செங்கதிரோன் பார்வையில்

(அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.)

மேலும்

மகளிர் தினம்…. (கறுப்பு நட்சத்திரங்களில் இருந்து  ஒரு நட்சத்திரம்..!)

அரபு மொழியில் ‘மகளிர் தினம் ‘ எனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட இக்கதை பிரபல அரபுலகப் படைப்பாளி சல்பா பக்கிரால் எழுதப்பட்டது. ‘மௌனத்தின் உண்மையான முக்ககாடு’ என்ற தொகுப்பில் வெளிவந்துள்ள இச் சிறு கதையை ஜேர்மன் மொழிக்கு மாற்றம் செய்தவர் சுலேமான் தௌபிக்.  அண்மையில் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட அழகு.குணசீலனின் ” கறுப்பு நட்சத்திரங்கள்” மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுப்பில் உள்ள பதினான்கு கதைகளில் இதுவும் ஒன்று.

மேலும்

“பேய்க்கு கால் இல்லை”

பேய்க்கும் சாமிக்கும் என்ன வித்தியாசம்? சாமி நல்லதா அல்லது பேய் நல்லதா? அல்லது இரண்டும் ஒன்றா? இரண்டும் நல்லவையா?, இல்லை இரண்டும் கெட்டவையா? குழம்புபவர்களுக்கு ஒரு கதை.

மேலும்

ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’ 

“புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.”

மேலும்