என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)

அரச எதிர்ப்பு, அரச ஆதரவு அரசியல் இங்கு தமிழர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், சரியானதை ஏற்று, பிழையானதை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்து அதனூடாக ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

‘மழுப்பவேண்டாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!’ – (காலக்கண்ணாடி – 33)

சமகால அரசியல் சந்திப்புக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தியபோது, அங்கு இளைஞர்கள் கேட்ட கேள்விகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்குக்கும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்தியதாக கூறுகிறார் அழகு குணசீலன். தமிழ் இளைஞர்களை ஏமாற்ற வேண்டாம் என்று வாதிடுகிறார் அவர்.

மேலும்

மட்டு நகர் வாவியிலே கொட்டமிடும் மீனினங்காள்!

பாடும் மீன்கள் என்றால் என்ன? அவை என்னென்ன செய்யும். ஆய்வாளர்களின், கலைஞர்களின், ஓவியர்களின், கூத்தர்களின் கைகளில், நெஞ்சில் அவை எப்படியெல்லாம் ஆடுகின்றன. பேராசிரியர் சி. மௌனகுருவின் நினைவில் பாடி ஆடும் மீன்களின் கொண்டாட்டம் இது.

மேலும்

தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா?

நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மாகாண சபைத்தேர்தல் குறித்த பேச்சுக்களும் எழுந்துள்ளன. இங்கு கிடப்பில் போடப்பட்ட அந்த வாக்குறுதிகள் சில குறித்து ஞாபகமூட்டும் எழுவான் வேலன், மக்களுக்காக பேசுகின்றார்.

மேலும்

‘சோபியின் உலகம்’ – யொஸ்டையின் கார்டெர் – ஒரு பார்வை

தான் படித்த நூல்கள் பற்றி அரங்கம் வாசகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வரும் “அகரன்” ஒரு அறிமுக எழுத்தாளர்தான். ஆனால், அவரது தரவுகள் ஆழமானவை. உலக அனுபவத்தை தனது வாசகர்களுடன் பகிர அவர் முனைகிறார் இங்கு.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 67

விடுதலைப்புலிகளின் வேட்டும், தமிழரசுக்கட்சியின் வோட்டுமே தமிழ் தேசிய அரசியலை குழப்பியதாக கூறும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு, நிலைமையை மேலும் குழப்பாமல், 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முனைவதே வழி என்கிறார்.

மேலும்

கெட்ட பழக்கம் (சிறுகதை)

புலம்பெயர் மண்ணில் சிலவேளை குடும்ப உறவுகள் பிரிவதற்கு பலவிதமான காரணங்கள் அமைந்துவிடுகின்றன. இதைத்தான் விதி என்பதோ? வெளியில் துணிச்சலாய் தெரியும் பலருக்குள் எத்தனை வேதனைகள். அதில் இதுவும் ஒன்று. அகரனின் சிறுகதை.

மேலும்

கிழக்குப் பல்கலைக் கழகமும் மீள் நியமன விண்ணப்பங்களும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மேனாள் முதன்மையர்களில் ஒருவராக இருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து புலம்பெயர்ந்த பால சுகுமார் அவர்கள், கிழக்கு மண் கண்ட ஒரு புத்திஜீவி. ஆனால், அவர் அங்கு திரும்பச் சென்று தனது பணிகளில் மீள இணைய எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக பெரும் வேதனைப்பட்டிருக்கிறார். அனைத்து மக்களின் பார்வைக்காக அவரது இந்தக் கருத்தை இங்கு முன்வைக்கிறோம். கிழக்கு பல்கலைக்கழகமோ, உரிய வேறு யாருமோ இதற்கு பதிலளித்தால், அதனை பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

மேலும்

அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்!

அண்மைக்காலமாக, குறிப்பாக ஜெனிவா மாநாட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் கையாழும் விதம் குறித்து விசனம் வெளியிடுகிறார் தெய்வீகன். அதனைப்புரிந்தும் இலங்கை தமிழர் தரப்பு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அவரது கவலை.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் 3

சாதி அறிய ஊர் கேட்பது புலம்பெயர் தேசத்தில் யுக்தி. ஆனால், தனது சாதியை மறைக்க விரும்புவோர் அதனால் படும் அவதி சொல்லி முடியாதது. மறைக்காமல் நேரடியாக சொல்ல நினைக்கும் போது ஏற்படும் விளைவுகளும் வித்தியாசமானவையே. சாதி மறுப்புத்திருமணங்கள் கொஞ்சம் அதிகமாகவே புலம்பெயர் தேசத்தில் நடக்கின்றன. காரணம் ஆராய்கிறார் தேவதாசன்.

மேலும்

1 95 96 97 98 99 129