அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலக
விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பிக்கள் இடையே நடந்த விவாதங்களை நாயும், புலியும் விளையாட்டாக விமர்சிக்கும் அழகு குணசீலன், பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் பக்குவம் பெறவேண்டும் என்கிறார். சொந்த நலனை முன்வைத்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
Category: கட்டுரைகள்
சொல்லத் துணிந்தேன் – 71
இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு அமைக்கும்போது தாம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று இரா. சம்பந்தன் கூறியதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்த பத்தியாளரின் பார்வை இது.
கிளிநொச்சி : விற்க முடியா பூசணிக்காய்கள்
கிளிநொச்சியில் சில விவசாய உற்பத்திகளை விற்கமுடியாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையை விபரிக்கும் பத்தியாளர், அவற்றை கையாள உரிய அமைப்புக்கள் இல்லாமை போன்றநிலைமையும் சுட்டிக்காட்டுகிறார். விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தல், விலை நிர்ணயம் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் இவை.
சாணக்கியனின் அசாணக்கிய அரசியல்
கல்முனை விவகாரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அண்மைய நாடாளுமன்ற உரை இன நல்லுறவுக்கு பதிலாக இனப் பகைமையை வளர்த்துவிடும் என்று இந்தப் பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளார். இன ஐக்கியத்தில் கிழக்கு அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவரது கருத்து.
மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 2
மட்டக்களப்பில் வளர்ந்துவரும் புதிய நூலகக் கட்டிடம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வகையில் தனது கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் மூத்த நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்கள், இந்தப் பகுதியில் நூலீட்டல் குறித்து ஆராய்கிறார்.
புலம் பெயர்ந்த சாதியம் – 6
இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்கள் மத்தியில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசும் தேவதாசன், இந்த பகுதியில் இங்கு கலாச்சாரம் என்ற போர்வையில் சாதியமும் பெண்ணொடுக்கு முறையும் பேணப்படுவதாக விமர்சிக்கிறார். அவரது அனுபவம் தொடர்கிறது.
பிராங்கோய் க்ரோஸ்! தமிழ்த்தாய் தத்தெடுத்த தற்கால வீரமாமுனிவர்! (காலக்கண்ணாடி 37)
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த வெளிநாட்டு அறிஞர்களில் இருவரது பெயர் என்றும் மறக்க முடியாதவை. அவர்களில் பிராங்கோய் க்ரோஸ் அவர்களின் பணிகள் பற்றி நினைவுகூருகிறார் அழகு குணசீலன்.
மாகாணசபை குறித்த பொறுப்புணர்வின்றி தேர்தலுக்கு தயாராகும் தரப்புகள்
பலநூறு போராளிகளின் தியாகத்தில் உருவான மாகாண சபையை மக்களுக்கு பயன் உள்ளதாக்குவதற்கான எந்தவிதமான பொறுப்பும் அற்றவையாக வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டும் செய்தியாளர் கருணாகரன், ஆனால், தமது சொந்த நன்மைக்காக மாத்திரம் அவை இப்போது தேர்தலுக்கு தயாராவதாகவும் கூறுகிறார்.
‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’
காடழிப்பு, மண் அகழ்வு, நீர்த் திட்டமின்மை போன்ற பல காரணங்களால் யாழ்ப்பாணம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனமாக மாறிவருவதாக சூழலியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவற்றுக்கு நாமே காரணமாக இருக்கிறோம். பாலையில் சோலை காண அவசர நடவடிக்கை அவசியம் என்கிறார் இந்த பத்தி எழுத்தாளர்.
ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும்
புதிதாகப் பதிப்பிக்கப்படும் நூல்களைக் கூட பிடிஎஃவ் வடிவில் பலர் இலவசமாக பகிருவதால் தமிழ் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் துயரம், அதன் பின்னணியில் உள்ள சட்டச் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராய்கிறார் மூத்த நூலகவியலாளர் என். செல்வராஜா.