இலங்கையை பொறுத்தவரை மத நம்பிக்கை கொண்டவர்களும், மதத் தலைவர்களும், விடுதலை விரும்பியாக தம்மை காண்பித்துக்கொள்வோரும் ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களாகவே செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் செய்தியாளர் கருணாகரன். இதுவே பெரும்பாலும் ஏனைய தெற்காசிய சமூகங்களைப் போல் இலங்கையை படு பாதாளத்தில் தள்ளுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
Category: கட்டுரைகள்
புலம் பெயர்ந்த சாதியம்- 9
புலம்பெயர் தமிழர் மத்தியிலான சாதிய அடக்குமுறைகள் பற்றி இத்தொடரில் பேசிவரும் தேவதாசன் அவர்கள், வெள்ளாளியக் கருத்தியல் என்று கூறப்படும் விடயம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அது மனித நேயத்துக்கு புறம்பானது என்று அவர் வாதிடுகிறார்.
தமிழரின் இந்தியா குறித்த அணுகுமுறை – தொடரும் தவறுகள் (சொல்லத் துணிந்தேன்-75)
கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர் தரப்பு இந்தியாவை அணுகிய முறைகளை கடுமையாக விமர்சிக்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர் கோபாலகிருஸ்ணன். இன்றும் கூட தமிழர் தரப்பு சில “மாயமான்களை” நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறதே ஒழிய இந்த விடயத்தில் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பது அவரது கவலை.
இலங்கையின் தேவை போரைவிட இலகுவானது, பாதுகாப்பானது
பன்முகத்தன்மை நிராகரிக்கப்படுவதும் சமாதான முனைப்பு இல்லாமல் இருப்பதுமே இலங்கையின் முக்கிய பிரச்சினைகள் என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அவற்றின் மீது ஒட்டுமொத்த சமூகத்துக்கே அக்கறை இல்லை என்கிறார். ஆனால், அவற்றுக்கான பாதை போரைவிடப் பாதுகாப்பானது, இலகுவானது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
கூத்துக்கலையின் பிரமாண்டத்திற்கும் அப்பால் எஸ்.மௌனகுருவின் படைப்பு முகம்
கூத்துக்கலைக்கு அப்பாலான பேராசிரியர். சி. மௌனகுரு அவர்களின் இலக்கிய பங்களிப்புகள் சில குறித்து இங்கு ஆராய முனைகிறார் ஏ. பீர் முகம்மது.
வாழைச்சேனை ..! மற்றொரு கல்முனையா…..? (வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…) – காலக்கண்ணாடி -40
வாழைச்சேனை பிரதேச சபையில் அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் அங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாதிடுகிறார் அழகு குணசீலன். மக்களுக்கான இரு வளர்ச்சித்திட்டங்கள் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் தடுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
நூலகப் பண்பாட்டை மறந்த தமிழர்
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 40 ஆண்டுகளின் பின்னரும், தொடர்ந்து புலம்புவதைத்தவிர, புதிய நூலகங்களை உருவாக்கும் நோக்கமும், நூலகப் பயன்பாட்டை அதிகரிக்கும் போக்கும் தமிழர் சமூகத்தில் மிகவும் மோசமாகக் குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். அதில் எவருக்கும் அக்கறை இல்லை என்பது அவரது கருத்து.
பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? – (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள் முரண்பாடுகள்)
தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் முதல் பேசிவரும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் கிழக்கு தமிழர்கள் நிலை குறித்துப் பேசுகின்றார். குறிப்பாக கிழக்கில் அரசியல் போக்கு குறித்து பேசும் அவர், அங்கு பிரச்சினை பிரதேசவாதமா அல்லது ஜனநாயகப் பற்றாக்குறையா என்று கேள்வி எழுப்புகிறார்.
இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?
இலங்கையில் சமாதானச் சிந்தனை மற்றும் அதனை நோக்கி நகர்வதற்கான எத்தனம் என்பவை எந்தத் தரப்பிடமும் கிடையாது என்று விசனம் தெரிவிக்கிறார் செய்தியாளர் கருணாகரன். அனைத்து இன மக்களும் அழிவுப்பாதையில் இருந்து விலகுவதற்கான முனைப்பைக் காண்பிக்கவில்லை என்பது அவர் கவலை.
கொவிட் சிகிச்சை எப்படி? – ஒருவரின் அனுபவம்
கொவிட் 19 தொற்று அபாய எச்சரிக்கையும் பயமும் ஒரு பக்கம் என்றால் அதற்கான சிகிச்சை இலங்கையில் எப்படி? அதுவும் வடக்கில் கிளிநொச்சியில் எப்படி என்ற கலக்கம் பலருக்குண்டு. இங்கே அதைப்பற்றிய உண்மை விவரங்களை எழுதுகிறார், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி, கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் கொரோனா விசேட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எழுத்தாளரும் ஆசிரியருமான ப. தயாளன்.