இலங்கையில் Lockdown கால நிலவரங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக சாமான்ய மக்கள் பெரும் அழுத்தங்களுக்குள் வாழும் நிலை. அதேவேளை, அரச நிர்வாக மட்டங்களில் விடப்படுகின்ற நடைமுறைத்தவறுகள் சாமான்ய மக்களை மேலும் சிக்கல்களுக்குள் தள்ளுகின்றன. இவை குறித்த தனது கவனத்தை பிரதிபலிக்கிறார் பத்தியின் எழுத்தாளர்.
Category: கட்டுரைகள்
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 02
“பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற தலைப்பில் சிவலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கான தனது பதில் கருத்தை தொடர்ச்சியாக பதிந்துவரும் எழுவான் வேலன், தனது இரண்டாவது பகுதியாக இதனை பதிகிறார். இரு பிரதேசங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் அவர், காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் யாழ். மேலாதிக்கவாதிகளால் கிழக்கு பாதிக்கப்பட்டதாக வாதாடுகிறார்.
தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள் (சொல்லத் துணிந்தேன்-77)
தோழர் பத்மநாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ஆளுமையை நினைவுகூருகிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.
வீரமும்- விவேகமும்- தன்னல மறுப்பும்- தத்துவார்த்தத் தெளிவும்- தியாகமும்- மானுட நேயமும் நிறைந்த உண்மையான மக்கள் தலைவனாகவே தோழர் பத்மநாபாவை வரலாறு அடையாளப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஜோர்ஜ் கபிரியேல்! (காலக்கண்ணாடி – 42)
அமெரிக்காவின் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஒன்றுக்கு மட்டக்களப்பு வாகரையை பிறப்பிடமாகக் கொண்ட ஜோர்ஜ் கபிரியல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.
50 ஆண்டுகளாக மாறாத ஆட்டம்: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை…
தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவை இன்றுவரை பெற்றுவரும் தமிழ் தேசியவாதிகளின் போக்கு இன்னமும் மாறவில்லை என்பது தேசம்நெட் ஆசிரியர் ஜெயபாலனின் கருத்து. அவர்கள் அன்று ஆடிய “தோற்றுப்போன ஆட்டமுறையையே” இன்றும் தொடர்வதாக தனது காட்டமான பாணியில் அவர் விமர்சிக்கிறார்.
சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (25)
தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஶ்ரீகந்தராசா அவர்கள், இந்தப் பகுதியில் 70களின் இறுதி வருடங்களில் அரசியல் ரீதியாக நடந்த சில நிகழ்வுகள் ஏற்படுத்திய விளைவுகளை நினைவு கூர்கிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 01
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ என்ற தலைப்பில் வி.சிவலிங்கம் அவர்கள் அரங்கம் பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரைகள் குறித்த கருத்தாடல் இது. எழுவான்வேலனின் கருத்துகளின் முதல் பகுதி.
சொல்லத் துணிந்தேன் – 76
அதிகாரப்பகிர்வு குறித்த சீரிய சிந்தனை தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பதாக விமர்சிக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் நடவடிக்கைகள் குறித்தும் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.
மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்
ஆடைகளின் பாணியும் தோற்றமும் மாறுவது காலம் காலமாக நடந்து வருவதுதான். இந்த ஆடை ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா என்ற நியதியும் இருந்து பின்னர் அவை மாறிய வரலாறும் நாம் கண்டதுதான். அவற்றில் சில குறித்து தனது நினைவலைகளை மீட்டுகிறார் தபேந்திரன்.
போர்ட் சிட்டியும் பொருளாதார அறிவும்! ஏட்டுச்சுரக்காயும், நாட்டுச்சுரக்காயும்! — (காலக்கண்ணாடி 41)
கொழும்பில் அமையவுள்ள போர்ட்சிட்டியின் பொருளாதார அனுகூலங்கள் நேரடியாக மாத்திரமன்றி மறைமுகமாகவும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு உதவும் வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகிறார் அழகு குணசீலன். தனது வாத்துக்கான சில ஆதாரங்களையும் அவர் கடந்த கால நிலைமைகளில் இருந்து காண்பிக்க முனைகிறார்.