இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அங்கு வித்தியாசமான பொருளாதார திட்டங்களை முயற்சித்துப்பார்க்கும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளியுள்ளது. அதிகளவு நாணயத்தை அச்சிட்டு அதனை உள்ளூரில் முதலீடு செய்யும் வகையிலான நவீன நாணயக்கோட்பாடு என்னும் முறையை நோக்கி இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகின்றது. சில நாடுகளில் பலன் தந்த இந்த முறை இலங்கைக்கு பயந்தருமா? ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.
Category: கட்டுரைகள்
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01
இலங்கையில் இடதுசாரிகளின் கடந்த காலம், அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். ‘இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர்’ என்கிறார் அவர்.
சொல்லத் துணிந்தேன் – 83
அண்மையில் தமிழர் வட்டாரங்களில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்துக்காட்டி தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆய்வாளர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தனை காலந்தான் தமிழர்களை ஏமாற்றுவார்? என்று கேள்வியெழுப்புகிறார்.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 06
‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா?’ என்னும் சிவலிங்கம் அவர்களின் பதிவுக்கு தனது பதில் கருத்துக்களை முன்வைத்துவரும் எழுவான் வேலன், யாழ் மேலாதிக்கத் தலைவர்களின் யதார்த்தத்துக்கு புறம்பான, உணர்ச்சியூட்டும் போராட்டங்கள் சாதாரண தமிழ் மக்களை எவ்வாறு சிரமத்தில் தள்ளியது என்று விளக்க முயலுகிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 02
தென்னிலங்கை வன்செயல்களால் இடம்பெயர்ந்து வடக்கே தமிழர் பகுதி நோக்கி வந்த மலையக மக்கள் அங்கு ஏமாற்றமடைந்த நிலையை பதிவு செய்யும் செய்தியாளர் கருணாகரன், அவர்கள் நம்பி ஏமாந்தது, இயந்திரங்கள் போல் மேலும் பல தலைமுறைகள் வாழ்ந்ததை இங்கு பேசுகிறார்.
‘விபுலானந்த இயல்’ எனும் கல்விசார் துறை தேவை
விபுலானந்த அடிகளாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இங்கு பதியப்படும் கட்டுரை 11 ஆண்டுகளுக்கு முன்னதாக அருள் செல்வநாயகம் அவர்களின் “விபுலானந்த இலக்கியம்” நூல் வெளியீட்டில் “செங்கதிரோன்” ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ‘விபுலானந்த இயல்’ என்னும் கல்விசார் துறையொன்று எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் இங்கு வலியுறுத்துகிறார்.
நெஞ்சம் இருண்டிருக்கிறது! உதடு அசைகிறது! அல்லது- ‘புதிய மொந்தையில் பழைய கள்’
ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களின் சாதியும் பிரதேசவாதமும் குறித்த பதிவு மற்றும் அதற்கு பதிலாக எழுவான் வேலனால் முன்வைக்கப்படும் கருத்துகள் ஆகியவை குறித்து தனது கருத்துக்களை இங்கு முன்வைக்கிறார் “தூ” இணையத்தின் ஆசிரியர் அசுரா. முன்கூறியர்வர்களின் பதிவுகளை வாசகர்கள் அரங்கம் இணையத்தில் பார்வையிட முடியும். (arangamnews.com)
WHO IS THIS LADY….? கிழக்கில் பெண் அரசியல் தலைமைத்துவம்…..! (காலக்கண்ணாடி 47)
தமிழ் தேசிய அரசியல் இன்னமும் பெண்களை, அவர்கள் உரிமைகளை மதிப்பதில்லை என்று சாடுகிறார் பத்தியின் ஆசிரியர் அழகு குணசீலன். முழுமையாக அரசியலில் ஈடுபட முனையும் பெண்களைக் கூட அது ஒதுக்கி வைக்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு. பெண்கள் புறக்கணிப்பை தமிழர் அரசியல் கைவிட வேண்டும் என்கிறார் அவர். ஆனால், மாதர் தம்மை இழிவு செய்யும் போக்கு அதன் தலைவர்கள் மத்தியில் இன்னமும் தொடர்கிறது…
புலம் பெயர்ந்த சாதியம் 11
போரால் புலம்பெயர்ந்த தமிழர் தாம் புகுந்த இடங்களிலும் சாதி பேணும் அவலம் குறித்து எழுதி வருகின்ற தேவதாசன், காலங்காலமாக கேள்விகள் மறுக்கப்பட்ட இளைஞர் மத்தியில் தமிழ் தேசியவாதம் ஒரு நச்சு போல ஊடுருவி விட்டதாக கவலை கொள்கிறார்.
பஷிலின் வருகை: அரசாங்கத்தின் செல்நெறியில் மாற்றத்தைக் காட்டும் ஒரு குறியீடு?
இலங்கை அரசியலின் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தின் மற்றுமொரு முக்கியஸ்தரான பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு திரும்பி வருவது குறித்து பலவிதமாக கருத்துகள் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மூத்த ஆய்வாளரான எம்.எல்.எம். மன்சூர் அவர்களின் கருத்து இது.