கனகர்கிராமம்: கிழக்கு கரைவாழ்வியலின் நீள்வெட்டுமுகம்.! (பகுதி ஒன்று) (மூன்றாவது கண்: XIII)

இலங்கையின் கிழக்கு மாகாண சமூகப்பின்னணியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் எழுதி, “அரங்கம்” பத்திரிகையில் தொடராக வந்த “கனகர் கிராமம்” அரசியல்-சமூக-வரலாற்று நாவலின் நூல் வடிவ வெளியீடு அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில், வரும் சனிக்கிழமை (28/03/2026) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்ட அழகு குணசீலனின் விமர்சனத்தொடர் இது. முதல் பகுதி.

“ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நாவல் இலக்கிய தாக்கம் எங்கள் கரங்களில் சமூக, அரசியல் ஜதார்த்தத்தை மட்டும் அல்ல புனைவுகளில் –  பொய் அழகில், மிகைப்படுத்தலில் கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து இலங்கையின் கிழக்கு கரையின் சமூக, பொருளாதார, அரசிரசியல் வாழ்வியலை, போர்வைகளை அகற்றி அம்மணமாக  பேசும்  “கனகர்கிராமத்தை” தந்திருக்கிறது. ஈழத்து நாவல் இலக்கிய மக்கள் மன்றத்தில் “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்  செங்கதிரோன் – கோபால கிருஷ்ணன்.  “கனகர் கிராமம்”. ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு “கோகுலன் சரித்திரம்”….

மேலும்

‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’- பகிர்வுகள் (பகிர்வு – 10)

“எழுத்தாளர் அமரர். ‘வ.அ’ வின் பிறப்பின் நூற்றாண்டு நினைவாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் அலைஓசை பதிப்பகமும் இணைந்து நடாத்திய வ.அ இராசரெத்தினத்தின் ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு குறித்த விபரமும் அதற்கான செங்கதிரோனின் உரையும்..”

மேலும்

உலகின் கரையோர மக்களின் வாழ்வு கூறும் காவியங்களின் பின்னணியில் “அந்தோனி” திரைப்படம் (பகுதி 3)

“அந்தோனி” என்னும் திரைப்படம் பற்றி பேசும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக்கட்டுரையின் இந்த மூன்றாம் பகுதி முடிப்பு.
இத் தலைப்பின் கீழ் வரும் மூன்றாவது தொடர்ச்சி “அந்தோனி” திரைப்பட நெறியாக்கம், படம் சார்ந்த அனுபவம், எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது.”

மேலும்

உலகின் கரையோர   மக்களின் வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம். (பகுதி 2)

“அந்தோனி” என்னும் திரைப்படம் பற்றி பேசும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக்கட்டுரையின் இந்த
இரண்டாம்  பகுதி தொடுப்பு.
இத் தலைப்பின் கீழ் அமையும் இந்தக்கட்டுரை அந்தோனியின் படக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதம் அதன் சிறப்புகள் பற்றியும் கூறுகிறது.

மேலும்

உலகின் கரையோர   மக்களின்  வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம்

அந்தோனி என்னும் திரைப்படம் பற்றி பேசும் மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக்கட்டுரையின் இந்த முதற்பகுதி “அந்தோனி” திரைப்படத்திற்கு  முன்னர் உலகிலும் தமிழகத்திலும் வந்த கடல் வாழ் மக்களின் கதை கூறும் சில நாவல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் பற்றிக் கூறுகிறது.

மேலும்

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் 

“பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிமுறைக்காக குரல்கொடுத்துப் போராடியிருந்தால் இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும்.

சிங்களவர்களினால் முன்மொழியப்பட்டபோது சமஷ்டிமுறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள்.  தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறையை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சகல சாத்தியப்பாடுகளும் அன்று இருந்தன.”

மேலும்

உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா?

பேரரசு நிறுத்திய ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர்’ என்பது பொய்யல்ல,
உலகுக்கு அச்சுறுத்தலாகும் அமெரிக்காவின் அடாவடித்தனங்கள்.
உலக ஒழுங்கை மாற்ற முனைவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது நியாயமா?

மேலும்

போரில் வெற்றியும் தோல்வியும்! (மூன்றாவது கண்:XII)

“இந்த போரில் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்களோ, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களோ, ஈரான் அதி உயர் மதத்தலைவர் கொமேய்னியின் இழப்போ, கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் தொகையோ போரின் முடிவை தீர்மானிக்க போதுமானவை அல்ல. மாறாக ஹர்முஸ் பாதை யாரின் கட்டுப்பாட்டில், எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது என்பதும், தரை வழியாக படை நகர்வு மேற்கொள்ளப்பட்டால்  அது ஈரானிய கிளர்ச்சியாளருக்கு வழங்குகின்ற நம்பிக்கை மற்றும் உத்வேகமுமே தீர்மானிக்கும் சக்திகளாக அமையும். இதில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானியர்களின் புரட்சிகர சிந்தனைக்கு வழங்குகின்ற புதிய ஜனநாயக, புதிய கலாச்சார ….. மாற்றீடு என்ன என்பதும் முக்கியமானது.”

மேலும்

தமிழர் அரசியல்: பதிலில்லாத கேள்விகள்!

“சிங்கள மொழியைப் படிக்க மாட்டோம் என்று தொடங்கிய வேலை இழப்பு பின்னர், வீடுகளை இழப்பதாக, ஊர்களை இழப்பதாக, உறவுகளை இழப்பதாக, உடல் உறுப்புகளை இழப்பதாக, உயிரை இழப்பதாக என மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் உருக்குலைத்தது.

விடுதலைப்போராட்டத்தில் – அதுவும் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அப்படியென்றால், அந்த இழப்புகளுக்கான பெறுமானமாக விடுதலை – உரிமை கிட்டியிருக்க வேண்டும். அதுதான் சாத்தியப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும்? சிதைந்தும் அழிந்தும் போயிருக்கும் மக்களின் – சமூகத்தின் வாழ்வையும் அரசியலையும் எப்படி முன்னெடுப்பது என்று நிதானமாகச் சிந்தித்திருக்க வேண்டும். அது நடந்ததா? இல்லையே!”

மேலும்

ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன?

“இந்திய மத்திய அரசின் முடிவுகள் – தீர்மானங்கள்-  இந்திய வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நிலவரம், இந்தியப் பாதுகாப்பு, இந்திய நலன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த அடிப்படையை மனதிற்கொண்டே மத்திய அரசின் தீர்மானங்கள் அமையும். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. பா.ஜ.க மட்டுமல்ல எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இதுதான் நிலவரம்.
 
இதெல்லாம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கும் அறிவுபூர்வமாக அரசியல் பகுப்பாய்வைச் செய்வோருக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியாது என்றில்லை. பலரும் இதைத் தெரிந்து கொண்டே விளையாடுகிறார்கள். சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற உண்மைக்கு மதிப்பில்லை. பொய்யை, கற்பனையை நம்புகின்ற மக்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் இதுதான் நிலவரம். ஈழத்திலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களே விலையைக் கொடுக்கிறார்கள்.”

மேலும்

1 5 6 7 8 9 164