இலங்கை அரசியலில் ராஜபக்ஷக்களின் கடந்த கால வரலாறு கூறும் பாடம் என்ன என்பதை கட்டுரையாசிரியர் ஆராய்கிறார். இது ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்கிறார் அவர்.
Category: கட்டுரைகள்
கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் கிடைத்துவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் நிலமை சரியாகிவிட்டது என்று எவரும் நினைத்துவிடக்கூடாது. இனிமேல்தான் நாம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சிவப்புக் கட்சியெல்லாம் தமிழர் ஆதரவானவை அல்ல (வாக்குமூலம்-29)
இலங்கையின் அண்மைய விவகாரங்கள் சிலவற்றை முன்வைத்து விவாதிக்கின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையில் உள்ள எல்லா இடதுசாரிக் கட்சிகளையும் தமிழர் ஆதரவு போக்குடையவை என்று கொள்ள முடியாது என்று கூறுகின்றார். அதற்கான சில உதாரணங்களை அவர் முன்வைக்கிறார்.
கோர்பச்சேவ் : சோவியத் சிதைவின் நினைவுச்சின்னம்…! (காலக்கண்ணாடியின் நிறைவுப்பகுதி)
அண்மையில் மறைந்த சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் கோர்பச்சேவ் குறித்து, அவரது செயற்பாடு மற்றும் மறுசீரமைப்பு குறித்து உலக அரங்கில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. அவற்றை அலசுகிறார் அழகு குணசீலன் தனது நூறாவதும் இறுதியானதுமான காலக்கண்ணாடியில்.
இத்துடன் அழகு குணசீலனின் “காலக்கண்ணாடி” என்ற பெயரிலான பத்தித்தொடர் நிறைவு பெறுகிறது. அவருக்கு அரங்கத்தின் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
அதேவேளை, சர்வதேச, சமூக, பண்பாட்டு விடயங்களை அலசும் இன்னுமொரு பத்தித்தொடருடன் அவர் அரங்கத்தில் தொடர்வார்.
இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்கள் வரவேண்டும்!
இலங்கையில் சில தரப்பினர் மத்தியில் இருக்கும் எதிர்ப்பையும் மீறி, வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களை அங்கு அனுமதிப்பது பலவிதமான நன்மைகளை இலங்கைக்கு தரும் என்கிறார் அழகு குணசீலன். அவருடைய வாதங்கள் இங்கே.
இலங்கை அரகலய போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதா?
இலங்கையில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அரகலய போராட்டம் தோல்வியின் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பும் செய்தியாளர் கருணாகரன், அந்தப் போராட்டத்தின் இன்றைய நிலைமைக்கான காரணம் என்ன என்று ஆராய்கிறார்.
பன்றிகளுக்கு முன்னால் போடப்பட்ட முத்துகள் (வாக்குமூலம் -28)
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தின் அமலாக்கலின் அவசியம் குறித்த அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்களின் உரையை வரவேற்றுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், ஏனைய தமிழ் தேசியக் கட்சிகள் அதனை மையப்படுத்தி தமிழ் மக்களுக்காக மீண்டும் உருவாகியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
“காக்கா கத்திது ஆரோ வரப்போறாங்க…..”! (காலக்கண்ணாடி- 98)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வரும் சூழ்நிலையில், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
‘இலங்கை – திக்கற்ற பார்வதி’
இலங்கையின் நிலைமையை மிகவும் மோசமான திக்கற்ற நிலை என்று வர்ணிக்கும் செய்தியாளர் கருணாகரன், ரணில் இவற்றை சமாளிப்பாரா என்பது குறித்து ஆராய்கிறார்.
காலிமுகத்திடலில் “கறுப்பு ஆடுகள்” ஊடுருவல்? (காலக்கண்ணாடி 97)
காலிமுகத்திடல் போராட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக விமர்சனம் செய்யும் அழகு குணசீலன், அங்கு பல ஊடுருவல்கள் நடந்துள்ளதாக சந்தேகப்பட நேர்ந்துள்ளதாக கூறுகிறார். இது ஒரு புரட்சி அல்ல எதிர்ப்புரட்சி என்கிறார் அவர்.