முள்ளிவாய்க்காலுக்கு உரிமை கோருகிறது ஷூரா..? (மூன்றாவது கண்:XX.)

வடக்கு, கிழக்கில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மெல்ல மெல்ல மீண்டும் புரிந்துணர்வு பெறுகின்ற நிலையில், தமிழரசுக்கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே ஒரு இணக்க அரசியல் உருவாகி வருகின்ற நிலையில், என்.பி.பி . இன உறவு மற்றும் சமத்துவம் பற்றி பேசுகின்ற நிலையில் கொழும்பு மைய ஷூரா அமைப்பின் இந்த அறிக்கை உண்மையிலேயே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், பிராந்திய, சர்வதேச இராஜதந்திர அரசியல் நடுநிலைமைக்கும் விழுந்த பலத்த அடியாகும்.”

மேலும்

புலம்பெயர் சமூகத்தின் ஆபத்தான நினைவேக்கம்

ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்போம்.
இலங்கைத் தமிழரின் அடையாளம் என்ன?
அது வெறும் தமிழ் மொழி மட்டுமா? அப்படியானால் தமிழகத்தவர்களிடமிருந்து நாம் எப்படி வேறுபடுகிறோம்? நம்முடைய உச்சரிப்பா? உணவா? வறண்ட நகைச்சுவையா? யாழ்ப்பாணத்தின் திமிரா? வன்னியின் மீள் எழுச்சியா? மட்டக்களப்பின் பாடல்களா? கல்வியின் மீதான மோகமா?
நம் பிள்ளைகளுக்குப் பால் புட்டு, ஒடியல் கூழ், பனை, குமுளமுனை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை பற்றித் தெரியுமா? அல்லது அவர்களுக்குக் கொடியைப் பற்றி மட்டும்தான் தெரியுமா?
கொடியை ஏந்துவது எளிது. கலாச்சாரம் என்பது கடினமானது.
ஒரு கையால் கொடியை ஏந்திக்கொண்டு, மறு கையால் உங்கள் பாட்டியின் மொழியை மறந்துவிட முடியும்.
அதுதான் பாசாங்குத்தனம்.

மேலும்

உண்மையைக் காணமறுக்காத ஒரு பத்திரிகையாளர் (டி.பி.எஸ். ஜெயராஜுக்கு  (1954–2026) ஒரு அஞ்சலி)

‘அவர் ‘துரோகியாக முத்திரை குத்துதல்’ (traitorisation) என்று தான் அழைத்த அந்தப் போக்கின் பின்னணியைக் கண்டறிந்து எழுதினார். அதனை ஒரு ‘கொடிய கொயபெல்சியப் பிரச்சாரச் செயல்முறை’ (terrible Goebbelsian process) என்றும் அவர் வர்ணித்தார். அதாவது, எவ்வித ஆதாரங்களுமின்றி, வெறும் அரசியல் எதிரிகளைப் பிரச்சார பலத்தின் மூலமாகவே துரோகிகளாகப் பொய் முத்திரை குத்தும் ஒரு செயல்முறையே அதுவாகும்.

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் காலம் தொட்டு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின்  எழுச்சி ஊடாகவும், பின்னர் மாற்று அரசியல் பாதையை முன்வைத்த எவரையும் திட்டமிட்டு அழித்தொழித்த விடுதலைப் புலிகளின் காலம் வரையிலும் இச்செயல்முறை எவ்வாறு பரிணமித்தது என்பதை அவர் துல்லியமாகத் தேடிக் கண்டறிந்தார்.’

மேலும்

இம்முறை நடைபெற்ற  கோவில் சடங்குகள்:  சில அவதானங்களும் ஆலோசனைகளும்

மட்டக்களப்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வருடம் நடந்த சடங்குகளில் பல மாற்றங்கள் தென்பட்டதாக விமர்சிக்கும் பேராசிரியர் சி. மௌனகுரு, இவை குறித்த தனது அவதானங்களை இங்கு பகிர்கிறார்.
அத்தோடு, இவைகுறித்த மேலதிக ஆய்வுகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

மேலும்

பூநகரியில் வள அபகரிப்பும் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களும்

“விவசாயம், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் திட்டங்கள் (கடலரிப்பு, நச்சுக்கழிவு கலப்பு) நிச்சயமாக ஏற்கப்படக்கூடியவை அல்ல. மக்கள் திட்டங்களை எதிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று, திட்டங்களின் நோக்கம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம், அவற்றின் சாதக பாதக விளைவுகளைக் குறித்து பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படாமை மற்றும் சமூக பங்கேற்பு இன்மை ஆகும். கூடவே இயற்கை வளங்களை அழித்தல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் மற்றும் இயற்கை வளங்களைச் சட்டவிரோதமாக அகழ்தல் போன்றனவும் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.”

மேலும்

அட்டமஸ்தானாதிபதி விவகாரமும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டின் கதியும்

“இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அட்டமஸ்தானாதிபதி போன்ற உயர் நிலை மதகுருமார் சம்பந்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சாதிக்கும் மௌனம் உணர்ச்சிபூர்வமான விவாதத்துக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் சுரண்டல்களுக்கும் எதிராக மகாநாயக்கர்கள் உறுதியாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். சமூகத்தில்  ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிப் போதனைகளைச் செய்கின்ற தலைவர்கள என்ற வகையில் அது அவர்களின் தலையாய கடமையாகும். இந்த மௌனம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதூகாப்பதில் நிறுவன மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வியாகவே நோக்கப்படுகிறது.”

மேலும்

‘பாராளுமன்ற அரசியல் பாதை மூலமாகத் தனிநாட்டை அடையமுடியாது’. (சொல்லித்தான் ஆக வேண்டும்! -சொல் – 55)

“தந்தை செல்வா தனது அந்திமக்காலத்தில் மூப்பினால் ஏற்பட்ட உடல்தளர்வு – அவரைப் பீடித்திருந்த ‘பார்கின்சன்’ நோயின் தாக்கம் – பலவீனமுற்றிருந்த செவிப்புலன் ஆகிய காரணங்களால் தனது தமிழரசுத் தனயன்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ‘இயலாமை’யில் இருந்தாரா?

ஏனெனில், ‘தமிழர் விடுதலைக்கூட்டணி’ யின் உருவாக்கமும் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானமும் தேர்தல் அரசியலை மையமாகக்கொண்டே நிகழ்ந்தன என்பதையே வரலாறு எண்பித்திருக்கிறது. மேலும், தனிநாட்டுத் தீர்மானத்தின் இறுதி விளைவு தமிழ் மக்களுக்கு உயிரழிவு – சொத்தழிவு – உளவியல் சிக்கல்கள் – கலாசாரச் சீரழிவு எனப் பலவகைப் பேரழிவுகளை ஏற்படுத்தி முடிவில் இருந்ததையும் இல்லாமற்செய்து தமிழ் மக்களை இன்று அரசியல் கையறு நிலையிலேயே – கடவுளும் காப்பாற்ற முடியாத நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளது.”

மேலும்

தர்மசக்கரம் தர்மசங்கடம்..!(மூன்றாவது கண்: XIX)

“கௌதம புத்தர் இல்லற வாழ்வையும், அனைத்தையும் அனுபவித்தபின்னர் ஞானம் பெற்று நிர்வாணம் அடைந்தார். அதுதான் சரியென்றால்  தற்போதைய பிக்குகளின் நிலைக்கு பௌத்த பீடமே பொறுப்பு ஏற்கவேண்டும். புத்தர் அனுபவித்த பின்னர் பின்நோக்கி நடந்தார் இவர்கள் அனுபவியாமல் முன்னோக்கி நடக்கின்றனர். இதுதான் அடிப்படையில் மனித உணர்வுகளை கேள்விக்கு உட்படுத்துகிறதா? 

அப்படியானால் அந்த இடத்தில் சீர்திருத்தம் தேவை..”

மேலும்

‘கனகர் கிராமம்’ – ஒரு விமர்சனம்(பகுதி 1)

மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் 26.04.2026 அன்று நடைபெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் அறிமுக விழாவில் விமர்சகர் ஜெகன் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட நயவுரை.

மேலும்

தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….? (மூன்றாவது கண்: XXIII)

“பண்டாரநாயக்காவின் சமஷ்டியை  ஒரு காலத்தில் நிராகரித்து பண்டாரநாயக்காவையே இனவாதி என்றார்கள், இந்திய -இலங்கை உடன்படிக்கையை நிராகரித்து இந்தியாவின் துரோகம் என்றார்கள். சந்திரிகாவின்  தீர்வுப்பொதியை நிராகரித்து  நீலன் திருச்செல்வம் துரோகி என்றார்கள். இலங்கை அரசு -நோர்வே சமஷ்டி யோசனையையும் நிராகரித்து  கருணாவை துரோகி என்றார்கள் . 2009 வரை தீர்வுகளை நிராகரித்து புலிகளுக்கு பின்னால் அரசியல் செய்த தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இப்போது சமஷ்டி கேட்டு ஜே.வி.பி.யிடம் மண்டியிடுகிறது“

மேலும்

1 2 3 60