அரைத்த மாவையே தொடர்ந்து அரைக்கும் பாங்கில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ்ச் சமூகம் இருப்பது குறித்த தனது விமர்சனத்தை முன்வைக்கிறார் செய்தியாளர் கருணாகரன். தமிழர் தமது சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலமிது என்கிறார் அவர்.
Category: அரசியல்
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 19)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்த தனது தொடரில் கடந்த வாரம் இலங்கையின் அடுத்த வரவு செலவுத்திட்டம் குறித்துப் பேசிய ஆய்வாளர் வரதராஜா பெருமாள் அவர்கள், இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் வரவுள்ள ஒரு கற்பனை அறிக்கையே ஒழிய அதில் யதார்த்தமாக சாதிக்க எதுவும் தென்படவில்லை என்கிறார்.
பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் புதிய வரவு செலவுத்திட்டம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. பல விடயங்கள் குறித்தும் அவர் தனது விமர்சனங்களை முன்வைக்கிறார்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிலை குறித்து எழுதி வருகின்ற பொருளாதார நிபுணர் வரதராஜா பெருமாள் அவர்கள், இலங்கையின் அடுத்து வரவுள்ள வரவு- செலவுத்திட்டத்தின் குறைகள் குறித்து விமர்சிக்கிறார். ‘எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையில் இப்போது சக்கடத்தார்?’ என்பது அவர் கேள்வி.
மாதன முத்தாக்களின் கும்மாளம்
பானைக்குள் தலையை விட்ட ஆட்டை மீட்ட அறிவிலிகளின் நிலையில் ராஜபக்ஸக்களும், அவர்களுக்கு வாக்களித்த சிங்கள பெரும்பான்மையின மக்களும் இருப்பதாக கூறுகிறார் பத்தியின் ஆசிரியர். அரசாங்கம் தனது நுட்பமற்ற நடவடிக்கைகளால் நாட்டை சீரழித்திருப்பதாகவும், அவர்களுக்கு சிங்கள பேரினவாத நோக்கில் வாக்களித்த மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழரசுக்கட்சியும் அகிம்சையும் (சொல்லத் துணிந்தேன்—98)
தமிழரசுக் கட்சியின் போலியான அகிம்சைப் போராட்டங்கள் இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பல பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் த.கோபாலகிருஸ்ணன். சில சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் அதனை விபரிக்கிறார்.
தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!
தமிழருக்கு என்று ஒரு தனியான குணமுண்டு என்று சொல்லப்படுவது ஒரு பெருமையான வாக்கியம். ஆனால், உண்மையில் தமிழரிடம், குறிப்பாக இலங்கைத் தமிழரின் சில குணாதிசயங்கள், அந்த இனத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. செய்தியாளர் கருணாகரனின் பார்வை.
சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !
அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் சுமந்திரனின் அமெரிக்க விஜயம் குறித்த பின்னணிகளை ஆராய்கிறார் ஆய்வாளர் வி.சிவலிங்கம். அரங்கம் பத்திரிகையில் இருந்து.
ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)
அண்மைக்கால ஆசிரியர் போராட்டம் குறித்த ஒரு பார்வை இது. இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மை, அதற்கான காலம் உட்பட பல விடயங்களை இங்கு ஆராய்கிறார் அழகு குணசீலன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
இலங்கையின் உணவு உற்பத்தித்திறனின் போதாமை குறித்து கடந்த வாரங்களில் பேசிய பொருளாதார வல்லுனர் வரதராஜா பெருமாள் அவர்கள், முன்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் பாதிப்புகளை வர்ணிப்பதுடன், அதேவேளை, அண்மைக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதியால் அமுல்படுத்தப்படும் இயற்கை விவசாய முயற்சியின் குறைபாடுகளையும் மதிப்பிடுகிறார்.
