அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வெறுமனே பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் மாத்திரம் நின்றுபோக கிழக்கில் சிவில் சமூக அமைப்புகள் பிரச்சினைகளுக்கு எதிராக போராட முனைந்ததை வரவேற்கிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
Category: அரசியல்
சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்ட இந்தப் பத்தியில் அதன் பின்னணியையும், வியாக்கியானங்களையும் ஆராய்கிறார் அழகு குணசீலன்.
இலங்கையின் தேசிய கீதமும் தமிழ் மொழி பெயர்ப்பும்
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடலாமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்ற கேள்வியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மாங்குளம் மாநகர் – கருகிய கனவு
வடமாகாணத்தின் மைய நகராக மாங்குளம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது முன்னர் விடுதலைப்புலிகளின் ஒரு திட்டமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இத்தனைக்கும் அந்த முடிவு யதார்த்த ரீதியான ஒன்றே. ஆனால், இன்று அந்த மாங்குளம் திட்டம் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் வெளியிடுகிறார் இந்த பத்தி எழுத்தாளர்.
பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)
இலங்கை தமிழ் மக்களால் பெரிதாக புரிந்துகொள்ளப்படாத பெரியார் குறித்த இந்தத் தொடரில் இன்று பெரியாருக்கும் காங்கிரஸ் மற்றும் காந்திக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகின்றனர் விஜி மற்றும் ஸ்டாலின்.
அபிவிருத்தியா – உரிமையா?
இலங்கை தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தியா அல்லது உரிமையா என்பது இங்கு பரவலாக எல்லாராலும் விவாதிக்கப்படும் ஒரு விடயம். ஆனால், இந்த இரு கருத்துக்கும் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட சரிசமனான ஆதரவு இருக்கிறது போலத்தெரிகிறது. அப்படியாயின்…?
சொல்லத் துணிந்தேன்—56
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலைசெய்யப்பட்டமை குறித்த விமர்சனங்களை தவறானவை என்று வாதிடுகிறார் கோபாலகிருஸ்ணன்.
கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரம விரோதியாகக் கருதப்பட்ட கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் அந்தக் கட்சிக்குமான ஊடாட்டங்கள் என்று அண்மையில் வெளியான சில செய்திகள் குறித்து ஆராய்கிறார் அழகு குணசீலன்.
சொல்லத் துணிந்தேன்—55
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இதுவரை காலமும் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமனதுடன் செயற்படவில்லை என்று விமர்சிக்கும் இந்தப் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன், இந்த இழுபறியில் இருந்து விடுபடுவதற்கான இரு வழிகளையும் பரிந்துரைக்கிறார்.
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)
இந்தியாவின் மூத்த சமூக விடுதலைப்போராளியான “பெரியார்” ஈ.வே.இராமசாமி அவர்கள் பற்றிய புரிதல் இலங்கை தமிழர் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது என்பது பலரது அவதானம். இலங்கைத் தமிழருக்கு புரியாத பெரியாரை இங்கு தொடராக பேச முயல்கின்றனர் விஜி/ஸ்டாலின்.