இலங்கையின் கிழக்கு மாகாண சமூகப்பின்னணியில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் எழுதி, “அரங்கம்” பத்திரிகையில் தொடராக வந்த “கனகர் கிராமம்” அரசியல்-சமூக-வரலாற்று நாவலின் நூல் வடிவ வெளியீடு அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில், வரும் சனிக்கிழமை (28/03/2026) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்ட அழகு குணசீலனின் விமர்சனத்தொடர் இது. முதல் பகுதி.
“ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நாவல் இலக்கிய தாக்கம் எங்கள் கரங்களில் சமூக, அரசியல் ஜதார்த்தத்தை மட்டும் அல்ல புனைவுகளில் – பொய் அழகில், மிகைப்படுத்தலில் கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து இலங்கையின் கிழக்கு கரையின் சமூக, பொருளாதார, அரசிரசியல் வாழ்வியலை, போர்வைகளை அகற்றி அம்மணமாக பேசும் “கனகர்கிராமத்தை” தந்திருக்கிறது. ஈழத்து நாவல் இலக்கிய மக்கள் மன்றத்தில் “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் செங்கதிரோன் – கோபால கிருஷ்ணன். “கனகர் கிராமம்”. ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு “கோகுலன் சரித்திரம்”….
