தமிழ்த்தேசியக்கட்சிகளின் முயற்சிகளும் இணக்க அரசியலில் இதுவரை ஈடுபட்ட கட்சிகளின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், இவர்கள் அனைவரும் இணைந்து மாற்று அரசியல் முயற்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்கிறார்.
Category: அரசியல்
தவராஜா: மட்டக்களப்பின் நாடக ஆளுமை
காலஞ்சென்ற வெ. தவராஜாவின் மறைவு கிழக்கு மண்ணுக்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது. பன்முக ஆளுமையான அவர் நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து ஆராய்கிறார் கலாநிதி சு. சிவரெத்தினம்.
ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர்?
‘தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பயனுறுதியுடைய முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு வழிகாட்டத்தெரியாத இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தன்னகம்பாவத்துக்கு வடிகால் தேடுமுகமாக விபரீதமான அரசியல் விளையாட்டில் இறங்காமல் தமிழ் மக்களை அவர்கள் விரும்புகிற முறையில் வாக்களிக்க அனுமதிப்பதே சிறந்தது. தமிழ் அரசியலை உலகில் நகைப்புக்கிடமானதாக்காமல் இருந்தால் அதுவே போதும்.’
வரிவலி….! வளர்ச்சிக்கு வாய்க்கரிசி போட்ட மக்களும், மன்னர்களும்.!(மௌனஉடைவுகள் -64)
இலங்கையின் இன்றைய பொருளாதார வலியானது பல்வேறு அரசாங்கங்களின் தவறான முடிவுகளின் விளைவு என்று கூறும் அழகு குணசீலன், மானியங்களுக்கு பழகிப்போன மக்களுக்கும் இதில் பொறுப்புண்டு என்கிறார்.
“கனகர் கிராமம்” (அங்கம் -15) அரசியல் – சமுக – வரலாற்று நாவல்
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு அவர்களது சொந்த மண் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு உதாரணம் இந்த ‘கனகர் கிராமம்’. அதுபற்றிய தனது அனுபவங்களை இங்கு ஒரு நாவலாக பகிர்கிறார் செங்கதிரோன். பகுதி 15.
யாரோடு சேர்ந்து குற்றும் அரிசி சமைக்க உதவும்? (வாக்கு மூலம்-95)
இமாலய பிரகடனத்தை முன்வைத்த முயற்சிகளை எதிர்க்கும் கோபாலகிருஸ்ணன், அந்த முயற்சியில் இந்தியாவை வெட்டி ஓடும் போக்கு இருப்பதாகக்கூறி அது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இனவாதமும் காரணம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டமாக வரிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள புத்தாண்டுப்பரிசு என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
மகிந்தவின் கனவு மெய்ப்படுமா?
‘தங்களது ஆட்சிக்காலத்தில் தங்களைப் பற்றி கட்டமைத்த பிரமாண்டமான பிம்பம் எவ்வாறு குறுகிய காலத்திற்குள் தகர்ந்துபோனது என்பதில் இருந்து ராஜபக்சாக்கள் பாடம் படிக்கவில்லை. மக்கள் தங்களைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு கனவு காண்கிறார்கள்.’
இலங்கைத் தமிழ்த் தேசியப் பிரச்சனையைக் கையாளும் ‘மாதனமுத்தா’க்கள் (வாக்குமூலம்-94)
இலங்கை அரசாங்கத்தரப்பு இந்தியாவை இராஜதந்திரத்துடன் கையாண்ட அளவுக்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகளால் கையாள முடிந்திருக்கவில்லை என்று கூறும் கோபாலகிருஸ்ணன், தமிழ் மக்களின் அபிலாசைகள் இன்னமும் நிறைவேறாமைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்.
ஈழ இலக்கியம்: அ.ராமசாமியின் தனிநோக்கு
பல்துறை இலக்கிய விமர்சகரான பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழர் படைப்புகளின் மீதான விமர்சனங்களில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஈழ அரசியல் மற்றும் போராட்டம் குறித்த ஆழமான புரிதல் கொண்டவர். அவர் பற்றிய கருணாகரனின் பார்வை இது.