கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்

கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை வடக்கு நிலைமைகளுடன் சேர்த்துப் பார்க்க முடியாது என்று வாதிடும் செய்தியாளர் கருணாகரன், அம்பாறையில் கருணா வென்று, திருகோணமலையில் சம்பந்தர் தோற்றிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சில விடயங்களை எதிர்வுகூற முயலுகிறார்.

மேலும்

என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)

உரிய விடயங்களை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் மக்கள் பெருந்திரள், காலங்கடந்து அதனை ஏற்க முன்வரும் போது எதுவும் கிடைக்காத நிலையே கடந்தகால அனுபவம் என்று கூறும் கருணாகரன், அதனை மாற்ற தமிழ் தலைமைகள் யதார்த்தத்தை உணர்ந்து மக்களை வழிநடத்த வேண்டும் என்கிறார்.

மேலும்

பாராளுமன்றத்தில் ! நாயும், புலியும் விளையாட்டு! (காலக்கண்ணாடி – 38)

அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலக
விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் எம்பிக்கள் இடையே நடந்த விவாதங்களை நாயும், புலியும் விளையாட்டாக விமர்சிக்கும் அழகு குணசீலன், பிரச்சினைகளை தீர்க்க இவர்கள் பக்குவம் பெறவேண்டும் என்கிறார். சொந்த நலனை முன்வைத்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 71

இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழு அமைக்கும்போது தாம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று இரா. சம்பந்தன் கூறியதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி குறித்த பத்தியாளரின் பார்வை இது.

மேலும்

கிளிநொச்சி : விற்க முடியா பூசணிக்காய்கள்

கிளிநொச்சியில் சில விவசாய உற்பத்திகளை விற்கமுடியாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையை விபரிக்கும் பத்தியாளர், அவற்றை கையாள உரிய அமைப்புக்கள் இல்லாமை போன்றநிலைமையும் சுட்டிக்காட்டுகிறார். விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தல், விலை நிர்ணயம் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் இவை.

மேலும்

சாணக்கியனின் அசாணக்கிய அரசியல்

கல்முனை விவகாரம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அண்மைய நாடாளுமன்ற உரை இன நல்லுறவுக்கு பதிலாக இனப் பகைமையை வளர்த்துவிடும் என்று இந்தப் பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளார். இன ஐக்கியத்தில் கிழக்கு அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் அவரது கருத்து.

மேலும்

மாகாணசபை குறித்த பொறுப்புணர்வின்றி தேர்தலுக்கு தயாராகும் தரப்புகள்

பலநூறு போராளிகளின் தியாகத்தில் உருவான மாகாண சபையை மக்களுக்கு பயன் உள்ளதாக்குவதற்கான எந்தவிதமான பொறுப்பும் அற்றவையாக வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டும் செய்தியாளர் கருணாகரன், ஆனால், தமது சொந்த நன்மைக்காக மாத்திரம் அவை இப்போது தேர்தலுக்கு தயாராவதாகவும் கூறுகிறார்.

மேலும்

‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’

காடழிப்பு, மண் அகழ்வு, நீர்த் திட்டமின்மை போன்ற பல காரணங்களால் யாழ்ப்பாணம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனமாக மாறிவருவதாக சூழலியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவற்றுக்கு நாமே காரணமாக இருக்கிறோம். பாலையில் சோலை காண அவசர நடவடிக்கை அவசியம் என்கிறார் இந்த பத்தி எழுத்தாளர்.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 70

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தே கோபாலகிருஸ்ணன் அவர்கள் இந்த சொல்லத்துணிந்தேன் 70 இலும் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கல்முனை விவகாரத்தை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த எவரும் முயலக்கூடாது என்பது அவரது வாதம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 69

மீண்டும் சூடுபிடித்திருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்த கடந்தகால நிகழ்வுகள் சிலவற்றை விளக்கியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன்வைக்கிறார்.

மேலும்