13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

இலங்கை அரசியலில் தமிழர் போராட்டங்களை 4 காலங்களாக பிரித்து விளக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறார். அத்துடன் எமது அடுத்த கட்டப் போராட்டங்கள் 13வது அரசியலமைப்பு மாற்றத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றாவது கோரவேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

ஜேவிபியின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் அதன் தொடர்ச்சியாக, ஜேவிபியின் சில குழப்பமான கொள்கைகள் எவ்வாறான சிக்கலுக்குள் அந்தக் கட்சியை வைத்திருக்கிறது என்பது குறித்து விபரிக்கிறார்.

மேலும்

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

பெரியார் ஈ.வே இராமசாமி அவர்களைப் பற்றிய இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்த வாரம் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகிறார்கள். அதனூடாக அவர் மக்களுக்காக சாதித்த பல விடயங்களையும் அவர்கள் ஆராய்கிறார்கள்.

மேலும்

முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஜெனிவா சென்றிருக்கும் நிலையில் எமது மனித உரிமைப் பார்வைகள் குறித்தும், அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் குறித்தும் விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

த.தே.கூ : கோப்பிசம் இல்லாத வீடு (காலக்கண்ணாடி — 24)

தலைமையில்லா அரசியல் கட்சிகளை கோப்பிசம் இல்லா வீடுகளுக்கு ஒப்பிடும் அழகு குணசீலன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை தற்போது அதுதான் என்கிறார். அந்தக்கட்சியில் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்த அளவுக்கு கட்சியை பாதித்துள்ளது என்பதை அவர் விளக்குகிறார்.

மேலும்

‘குழப்பத்தால் இரு இடங்களில் முடிந்த பேரணி’ – (சொல்லத் துணிந்தேன் – 60)

‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ பேரணி குறித்த தனது விமர்சனங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், ஆரம்பம் முதல் இறுதி வரை அது குழப்பங்களும், தடுமாற்றங்களும் நிறைந்ததாகவே இருந்தது என்று வாதிடுகிறார். சில கட்சிகளும் அதன் தலைவர்களும் மக்கள் போராட்டத்தை தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த முனைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்

ஜே வி பி : கோட்பாடுகளும், அரசியலும்

தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் ஆராய்ந்துவரும் சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் இலங்கையில் மூன்றாவது கட்சியாக இருக்கும் ஜே வி பி பற்றி ஆராய்கிறார். அதன் கட்டுமானம், செயற்பாடு ஆகியவற்றை தமிழர் விவகாரத்திலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் பொருத்தி அவர் ஆராய முயலுகிறார்.

மேலும்

இலங்கையில் பெரியார்

பெரியார் பற்றிய தமது இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் அவரது இலங்கைப் பயணம் பற்றியும், குறிப்பாக அவர் இலங்கையில் ஆற்றிய சிறப்பு மிகு உரை பற்றியும் விபரிக்கின்றனர்.

மேலும்

‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலை பேசிய அரசியல்’- (சொல்லத் துணிந்தேன்—59)

நடந்து முடிந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” ஊர்வலத்தின் பின்னணி குறித்து தனது பாணியில் ஆராய்கிறார் பத்தி எழுத்தாளர் த. கோபாலகிருஸ்ணன். 1956 இல் தமிழரசுக் கட்சி நடத்திய “திருமலை யாத்திரை” என்ற ஊர்வலத்துடன் அதனை அவர் ஒப்பிடுகிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (18)

தனது சொந்த மண்ணை நினைத்துப்பார்க்கும் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள், ஒரு பொது விடயத்தை நடத்த தாம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்குகிறார். ஊரின் சிறு பிரிவினர் தமது நாடக முயற்சியை எதிர்த்த நிகழ்வு அது.

மேலும்

1 73 74 75 76 77 86