‘13 வது திருத்தம் ஒன்றே இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கும் சட்டரீதியான ஏற்பாடாகும். இந்தியாவின் படைபலத்துடன் கூடிய நேரடித்தலையீடு தான் அதைச் சாத்தியமாக்கியது என்பதை விளங்கிக் கொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானம் படிக்கவேண்டியதில்லை.
உள்நாட்டுச் செயன்முறைகள் மூலமாக அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாற்று அனுபவம் எம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
என்றாவது ஒரு நாள் இலங்கை அரசாங்கம் ஒன்று 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் உள்நாட்டுச் செயன்முறையின் மூலமாக அத்தகைய ஒரு ஏற்பாட்டை மீண்டும் கொண்டுவரமுடியுமா?
அந்த திருத்தத்தின் பல்வேறு போதாமைகளுக்கு அப்பால் இந்த கேள்வி குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா? அவர்கள் சிந்திக்காவிட்டாலும் தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது.’
