அதிகாரப்பகிர்வு: ‘நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்….!’

அதிகாரப்பகிர்வு விடயத்தில் தாம்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தமிழ் தேசியக்கட்சிகள் சில குழப்பம் செய்வதாகக்கூறும் அழகு குணசீலன், ‘தமிழ் மக்களை “பிச்சை “எடுக்க வைத்தது சிங்கள பேரினவாத அரசு மட்டுமா…….?  இதில் தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்கு உண்டு’ என்கிறார்.

மேலும்

13 படும்பாடு

இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கமாகக்கொண்ட அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அவற்றின் தோல்விகள் குறித்துப்பேசும் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம், இந்த விடயத்தில் தமிழர் பலவீனப்பட்டு பிளவுண்டு இருப்பது குறித்தும் கவலையை வெளிப்படுத்துகிறார்.

மேலும்

ஜனா காட்டும் வழி!மட்டக்களப்பின் இன்றைய தேவை அரசியல் பக்குவம்.

மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளன. குறிப்பாக வன்செயல்களுக்கு பேர் போனதாக சிலரால் கடந்தகாலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்த ரெலோ அமைப்பின் போராளியாக, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜனாவின் தற்போதைய செயற்பாடுகள் ஒரு அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவராக அவரை அடையாளம் காட்டுவதாக கருத்துகள் வருகின்றன. இது அவர் சார்ந்த அமைப்புக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடியவை.

மேலும்

வாக்குமூலம்-71. (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

இந்தியாவை புறக்கணித்துவிட்டு, இலங்கை அரசாங்கத்துடன் மட்டும்பேசி தமிழர் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்ற வகையில் சில அரசியல்வாதிகள் பேசிவருவதை கண்டிக்கும் கோபாலகிருஸ்ணன், இப்படியான தலைவர்களின் வாய்ப்பேச்சில் மக்கள் மயங்கக்கூடாது என்கிறார்.

மேலும்

தயாமோகனின் பதவி பறிப்பின் பின்னணி என்ன?

போர் முடிவு காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தயாமோகனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறத்த அழகு குணசீலனின் பார்வை.

மேலும்

இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமலாக்கப்படாமைக்கு புலிகள் முக்கிய காரணம் (வாக்குமூலம் – 70)

இந்திய- இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமலாக்கப்படாமைக்கான காரணங்களை சில தமிழ்க்கட்சிகள் பூசி மெழுகுவதாகக் கூறும் கோபாலகிருஸ்ணன், அவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்கிறார்.

மேலும்

நியாயப்பாட்டை இழந்த பாராளுமன்றத்தின் மூலம்  ஜனநாயக விரோத செயல்களை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டும் அரசாங்கம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பின்போடுவதுடன், கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு பார்வை.

மேலும்

புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, கல்லையும்…..? (மௌன உடைவுகள் – 36)

விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக தம்மை கூறிக்கொள்ளும் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் பிரதிநிதி ஒருவரின் அண்மைய கருத்து வெளிப்பாடு ஒன்றை விமர்சிக்கும் அழகு குணசீலன், “அடியாதது  படியாது” என்று கூறுவதுபோன்று காலம் கடந்த ஞானத்தை இந்தியாவும், சர்வதேசமும்  கொடுத்த அடி  வழங்கியிருக்கிறது” என்கிறார். கிழக்கை இவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார்.

மேலும்

வாக்குமூலம்-69 (‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)

அரைகுறை மனதுடன் 13 வது திருத்தத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழர் தரப்பினர் மீண்டும் அதன் அமலாக்கலை தடுத்துவிடக்கூடாது என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

1 36 37 38 39 40 86