இறந்த காலம் நினைவு கூரப்படவேண்டும் என்பதில் இருகருத்துக்களுக்கு இடமில்லை. போரால் சிதைக்கப்பட்ட இன,மத நல்லிணக்கம் புரிந்துணர்வுடன், ஒருதரப்பை மறு தரப்பு அங்கீகரிப்பதன் ஊடாக கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர அங்கீகாரத்தின் அடையாளமாக கஞ்சியும்,ஐஸ்கிறீமும் அமைய வேண்டும். அதுவே இருண்ட இறந்த காலத்தில் இருந்து , வெளிச்சத்திற்கு வருவதற்காக இறந்த காலத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கின்ற நிகழ்கால, எதிர்கால பாடமாகும்.
Category: தொடர்கள்
தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்!
‘தமிழ்த்தேசிய அரசியலில் எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா?’
பொதுவேட்பாளர் என்ற ‘மாயமான்’
60 ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள், சவால்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இழப்புகள், அலைச்சல்களின் மத்தியிலும் தங்கள் விடுதலை வேட்கையையும் அரசியல் உணர்வையும் தமிழ் மக்கள் விட்டு விடவில்லை. (இதைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுக் கண்ணை இன்று சிலர் இழந்து விட்டனர் போலும்).
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 34)
1977 இல் பொத்துவில் தொகுதிக்கான தேர்தலில் கனகரட்ணம் அவர்களுக்கு வாக்களிப்பது என்று காரைதீவு மக்கள் ஊர்கூடி தீர்மானம் எடுத்தது குறித்து விபரிக்கிறார் செங்கதிரோன்.
ஞானசாரவை மன்னித்து விடுதலை செய்தால் ஆபத்தான செய்தி சமூகத்தைச் சென்றடையும்
அரசியல் அனுசரணை இல்லாவிட்டால் ஞானசார போன்ற பிக்குமார் முழு இலங்கைச் சமூகத்துக்குமே அவமதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அடாவடித்தனமாகச் செயற்பட்டிருக்கமுடியாது. இலங்கைச் சமுதாயம் அரசியலில் இருந்து மதத்தை பிரிக்காவிட்டால் நாட்டுக்கு எதிர்காலமே கிடையாது. ஆனால் அதற்கான எந்த நம்பிக்கையையும் வளர்க்கக்கூடியதாக இலங்கையில் நிலைவரங்கள் இல்லை என்பது பெரும் கவலைக்குரியது.
“வடக்குச் சட்டியும்- கிழக்குச் சட்டியும்.!” யாழில் மீன் கரைந்தால் சட்டிக்குள் தானாம், மட்டக்களப்பில்.? (மௌன உடைவுகள்-88)
‘கிழக்கில் முஸ்லீம்கள், சிங்களவர்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று விடுவார்கள் என்று காட்டுகின்ற வங்குரோத்து அரசியல் ஒரு பக்கம். யாழ்ப்பாணத்தில் வீணை,கை, தொலைபேசி, யானை எல்லாவற்றையும் கூட ஒரே சட்டிக்குள் பார்க்கின்ற உங்களால் கிழக்கில் -மட்டக்களப்பில் படகு, கப்பல், மரம், மொட்டு, யானை இவற்றை ஏன் ஒரே சட்டிக்குள் பார்க்க முடியவில்லை. வடக்கில் வெவ்வேறு தமிழ்த்தேசிய கட்சிகள், தமிழ்த்தேசிய எதிரணி இணக்க அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஒரு சட்டிக்குள் கரையலாம் ஆனால் கிழக்கில் அது நடக்கக்கூடாது. ‘
இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமை என்பது யாது? (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-06)
‘தமிழ் மக்கள் ‘வாக்குப்பெட்டி’ யை மையமாக வைத்து ஒற்றுமைப்படுவது என்பது உண்மையான ஒற்றுமையாகமாட்டாது. பண்பு மாற்ற அரசியலை மையமாக வைத்து நேரடியாகக் கூறப்போனால் ‘புலி நீக்க’ அரசியலை மையமாக வைத்து ஒற்றுமைப்படுதலே இன்றைய தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலுக்குப் பொருத்தமானது.’
எதிர்ப்பரசியலின் காலம் முடிந்தது (02)
‘எஸ்.ஜே.வி. செல்வநாயத்தைச் சொல்லியே தமிழரசுக் கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. அப்படித்தான் பத்மநாபாவைச் சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் சிறி சபாரத்தினத்தைச் சொல்லி ரெலோவும் உமா மகேஸ்வரனை வைத்து புளொட்டும் செயற்படுகின்றன. இப்படித்தான் பிரபாகரனை (புலிகளை) வைத்துப் பல தரப்புகளும் பிழைத்துக் கொள்கின்றன. எவையும் தமது தொடக்க நிலைத் தலைவர்களைக் கடந்து, புத்தடையாளமாக எழுச்சியடையவில்லை.’
தமிழ்ப் பாசிசத்துக்கு பலியான சாம் மற்றும் கலா தம்பிமுத்து தம்பதி!
அமரர்கள் சாம் தம்பிமுத்து – கலா மாணிக்கம் ஆகியோரின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு 16.05.2024 அன்று புளியந்தீவு, மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றபோது செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆற்றிய நினைவேந்தல் உரை இது.
எஸ்.பொ. வின் காமசூத்திரம்
சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல், திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். தமிழ் இலக்கிய விஞ்ஞானியாக கருதப்பட வேண்டியவர் எஸ்.பொ. என அறியப்பட்ட எஸ். பொன்னுத்துரை. அவரது 92 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தக்குறிப்பு பதியப்படுகிறது.