காலம் முழுவதும் தமிழ் மக்களை வஞ்சித்து அரசியல் செய்தவர்களையெல்லாம் இரவோடு இரவாகப் புனிதராக மாற்றும் ‘இரசவாதம்’ இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ என்ற வார்த்தைக்கு உண்டு.
அதேபோல காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்துச் செயல்பட்டவர்களைச் சடுதியாகத் ‘தமிழ்த் தேசியத் துரோகி’ எனப் பட்டம் வழங்குவதும் இந்தத் ‘தமிழ்த் தேசியம்’ எனும் வார்த்தையைச் சொல்லித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
Category: தொடர்கள்
எதிரும் புதிரும்: இரு தேசியங்களின் கருத்தியல் மோதல்….! (மௌன உடைவுகள்-97)
கடந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஜே.வி.பி. சிறுபான்மை மக்கள் மீது தனது அக்கறையை வெளிப்படுத்தவில்லை. அதை வெளிப்படுத்துவதற்கான,போராட்டங்களை நடாத்துவதற்கான வாய்ப்பும், வளங்களும் அவர்களுக்கு இருந்தும் அதை அவர்கள் செய்யவில்லை. இதனால்தான் வடக்கு கிழக்கு தொல்பொருள் ஆராய்ச்சி, காணிப்பிரச்சினைகள், பௌத்த தலங்கள் அமைப்பு, மேய்ச்சல் தரை விவகாரங்களில் , நினைவேந்தல் நிகழ்வுகள், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் எல்லைப்புற பிரச்சினைகளில் ஜே.வி.பி. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ , அல்லது அதற்கான ஒரு தீர்வை முன்வைக்கவோ, சிறாபான்மை பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் செயற்படவோவில்லை.
கவிஞர் சடாட்சரன்
அண்மையில் கிழக்கின் பெரியநீலாவணையில் காலமான மூத்த இலக்கியவாதியான மு. சடாட்சரன் பற்றிய செங்கதிரோனின் அஞ்சலிக்குறிப்பு இது.
இலங்கையில் நிகழ வேண்டியது
கடந்த 75 ஆண்டுகளிலும் தலைமைகளும் அவற்றின் தரப்புகளும் (கட்சிகளும்) வெற்றியடைந்திருக்கின்றனவே தவிர, மக்கள் வெற்றியடையவில்லை. ஒரு உதாரணத்துக்குத் தமிழரின் அரசியலை நோக்கலாம். தமிழ் மக்கள் எப்போதும் – எத்தகைய இடரின்போதும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே நின்றுள்ளனர். அது யுத்த காலமாயினும் சரி, யுத்தத்துக்கு முந்திய காலத்திலும்சரி, யுத்தத்திற்குப் பிந்திய சூழலிலும் சரி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த தலைமைகளையும் தரப்புகளையுமே (கட்சிகளையும் இயக்கங்களையும்) ஆதரித்துள்ளனர். அவற்றையே வெற்றியடைய வைத்துள்ளனர்.
இப்படியெல்லாம் ஓர்மமாக நின்ற மக்களுக்கு இந்தத் தலைமைகளால் விளைந்த நன்மைகள் என்ன?
“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 41)
“கனகர் கிராமம்” தொடர்நாவலின் இந்தப்பகுதி, 1977 இல் நடந்த இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் அகதிகளாக வந்தமை பற்றியும் அவர்களை பாதுகாப்பாக தமிழர் பகுதியில் குடியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பற்றியும் பேசுகின்றது.
பாராளுமன்ற குழுத்தலைவர் யார்?: சவம் எடுக்கவில்லை… சாவீட்டில்.. (மௌன உடைவுகள்: 96.)
தமிழ்த்தேசிய அரசியலில் காய்கள் எப்படி நகர்த்தப்பட்டாலும் விரும்பியோ-விரும்பாமலோ , சரியோ – பிழையோ, தமிழ்த்தேசிய இணக்க அரசியலை கொழும்போடு இணைந்து முன்னெடுக்க , சுமந்திரன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால் இன்றைய அரசியலில் சுமந்திரனே தேவைப்படுகிறார். அதில் ஒன்றுதான் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி.
சம்மாந்(ன்)துறை -வீர(ர்) முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…! பகுதி:5
இங்கு சம்மாந்துறை, வீரமுனை உட்பட மட்டக்களப்பின் நிர்வாகம் கண்டிய ஆட்சியின் கீழ் இருந்த காலப்பகுதி பற்றி அழகு குணசீலன் பேசுகிறார். தமிழர் மற்றும் முஸ்லிம்கள் இடையில் காணப்பட்ட குடிப்பிரிவுகள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் மக்களுக்கான பொதுவேட்பாளர் விடயம் பலன் தராது என்கிறது இலங்கை தமிழர் நலன் விரும்பும் அமைப்பு
தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் “இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு, (WTSL)” எனும் புலம்பெயர் தமிழர் அமைப்பு தமது உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற தீவிர கருத்தாடலின்
பின் வெளியிட்ட ஊடக அறிக்கை இது.
அவுஸ்திரேலியாவில் இருந்து அதன் சர்வதேச இணைப்பாளர் ராஐ்சிவநாதன், இதனை வெளியிட்டுள்ளார்.
சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும்
மரணத்துக்குப் பிறகு சம்மந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பை அவதானிக்கும்போது தமிழ்த்தேசிய அரசியலில் பின்பற்றப் பட்டுவரும் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தலின் விசித்திரம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்னர் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டு, எதிர்நிலையில் நிறுத்தப்பட்டவர்கள் பின்னர் ஏற்பு நிலைக்கு உயர்த்தப்படும் விநோத நிகழ்வு நிகழ்வதுண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் தராகி சிவராம் போல. அவ்வாறான ஒருவராகச் சம்மந்தன் அவர்கள் இன்று பெருந்தலைவராகப் போற்றப்படுகிறார். ஊடகங்களும் தமிழ் அரசியற் கட்சிகளும் அப்படித்தான் விழிக்கின்றன.
‘தமிழர்கள் தாமே தமக்குள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-12)
ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நிபந்தனைகளை முன்வைத்துப் பேரம் பேசும் விடயம் வெற்றியளிக்கப் போவதுமில்லை. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ வாய்ப்பாடும் எந்த அற்புதத்தையும் நிகழ்த்திவிடப் போவதுமில்லை. இந்த அரசியல் யதார்த்தத்தின் ஊடாகத்தான் தமிழர்கள் பயணிக்க முடியுமே தவிர அதனை விடுத்துப் பெரிதாகப் பேசுவது எல்லாமே முடிவில் ‘ஏட்டுச் சுரக்காய்’கள்தான்.