கஞ்சி ஒரு ஆகாரம். அடிப்படை உணவு. உயிர் வளர்க்க உதவுவது. உயிர் வாழ்ந்தவர்களின் நினைவு அது. உயிரோடும் உணர்வோடும் ஒன்றியது. இது ஆச்சி கொடுத்து வளர்த்த கஞ்சி. உயிரின் எல்லைவரை நினைவிருக்கும் கஞ்சி. அகரனின் இந்தக் கதையும் கஞ்சி பற்றியது.
Category: சிறுகதைகள்
கள்ள வீசா – ஒரு கனவு
புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து பெறுவதற்காக ஆடும் ஆட்டங்கள், போடும் வேசங்கள் கலையும் நாள் அந்த அந்தஸ்து கிடைக்கும் நாளே. ஆனால், அதற்கான காத்திருப்பும், கனவும் நீண்டவை. இது ஒரு அகதியின் கனவு. அகரனின் கதை.
அம்மாவைச் சொல்லி என்ன செய்ய?
புலம்பெயர் தமிழனின் அன்றாட வாழ்க்கையை இலங்கையின் இன்றைய நெருக்கடி எப்படி பாதித்திருக்கின்றது என்பதை பேசுகிறது இந்தக் கதை. உண்மையில் இன்று இலங்கை பற்றி அதிகம் புலம்புபவர்கள் இவர்கள்தான்.
மண்ணெண்ணை வரிசை
பொருட்களுக்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது இலங்கையில் புது விடயம் அல்ல. எழுபதுகளிலும் பலர் இந்தச் சூழ்நிலையை அனுபவித்தனர். அப்போது பத்திரிகைகளில் அவை குறித்து பல கட்டுரைகள் கதைகள் எல்லாம் வந்தன. இப்போது மீண்டும் அந்த நிலையை நினைவுபடுத்தும் ஒரு கதை.
பாடையேறினான்
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்திலும் பெருமளவு தங்கியுள்ளது. ஆனால், வெளிநாட்டில் வேலைகளுக்கு செல்லும் பலரது குடும்பங்கள் தினமும் பல சோகச் சம்பவங்களை எதிர்கொண்டு நிற்கின்றன. அப்படியான ஒரு குடும்பத்தின் கதை இது.
கணக்கில்லை- வாழ்வு இல்லை
ஆசிரியர்களின் விநியோகம் சரியாகச் செய்யப்படாததால் வாழ்விழந்த மாணவர்கள் பலர். கணிதம் கற்பிக்க ஆளில்லாமல் பல்கலை நுழைவை இழந்தவர்களும் உண்டு. இது அப்படியான ஒரு இளைஞனின் கதை. படுவான்கரையின் வழமையான கதை.
திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)
கிழக்கின் 100 சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் வரும் கதைகள் குறித்து விமர்சனம் செய்துவரும் செங்கதிரோன் அவர்கள் இங்கு ஆரையம்பதி “நவம்” அவர்கள் எழுதிய “நந்தாவதி” என்ற சிறுகதையை விமர்சிக்கிறார். அருமையான சிறுகதை இது என்பது அவரது கருத்து.
‘தை பிறக்கட்டும்’
மட்டக்களப்பின் படுவான்கரை வாழ்க்கை பல சங்கடங்களைத் தாண்டியது. ஊருக்கு உணவு படைக்கும் அந்த மக்களுக்கு தமது சொந்த வாழ்க்கை எல்லா நாட்களிலும் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சமூக, பொருளாதார பாதிப்புகளே அவற்றுக்கு காரணம். ஆனால், நாளை விடியும் என்ற அவர்களது நம்பிக்கையும், உழைப்பும் குறைவதில்லை. இது ஒரு பெண்ணின் கதை. படுவான் பாலகன் எழுதியது.
சகோதரத்துவம் (சிறுகதை)
இலங்கையில், குறிப்பாக கிழக்கில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் கற்பனை பண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு குலைந்து போயிருக்கின்றன. ஆனால், இப்படியும் அந்தச் சமூகங்களுக்கு இடையில் நெருக்கமான ஒரு உறவு இருந்ததா என்று இன்றைய தலைமுறை கேட்கும் அளவுக்கு உன்னதமான உறவும் அங்கு மிக அண்மைவரை இருந்திருக்கிறது. அப்படியான ஒரு உன்னத உறவு சங்கடத்துக்கு உள்ளான தருணம் இது. செங்கதிரோனின் சிறுகதை.
உலக இயக்கம் (சிறுகதை)
உலக அழிவுகள், ஊரில் நடந்தவை அனைத்தையும் கடந்து உலகில் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இது வேறு மாதிரியான மனிதம். மனித மனம். அகரன் எழுதிய தஞ்சம் மறுக்கப்பட்ட ஒரு அகதியின் கதை இது..