இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் அவ்வப்போது சூடு பிடித்தாலும் பின்னர் அணைந்துபோகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற அகதிகள், அங்கு வதிவிட அந்தஸ்தை பெறுகின்ற போதிலும் பல தசாப்தகாலமாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் நிலை “திரிசங்கு சொர்க்கம்” தான். அவை குறித்த அழகு குணசீலனின் ஒரு பார்வை.
Category: கட்டுரைகள்
தமிழறிஞர் மர்ஹும் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணிகளும்
இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெருமை சேர்த்த தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீனின் நினைவுதினம் இன்று. தமிழ் இலக்கியத்துறை, முஸ்லிம்களின் சமூகப் படைப்புகள், இலங்கை தமிழ் நூலகத்துறை ஆகியவற்றுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது. இவரது பல மாணவர்களே இலங்கை நூலகவியல் துறையில் இன்று முன்னோடிகளாக இருக்கின்றனர். அவரைப்பற்றி மூத்த நூலகவியலாளரும் அவரது மாணவனுமான என்.செல்வராஜா அவர்களின் குறிப்பு இது.
சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 08
தமிழ் தேசியத்தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்கள் கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவ நலன்களுக்கு எதிராக மேற்கொண்ட சில விடயங்களை இங்கு விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றார் எழுவான் வேலன்.
அண்ணை, அண்ணா, அண்ணாச்சி
அண்ணன் என்பது தமையனை, தனக்கு மூத்தவனைக் குறிக்கும் சொல். தனக்கு மேலானவன் என்ற அர்த்தத்தில் அண்ணன் என்கிறார்கள். “அண்ணன்” என்ற சொல் படும்பாட்டை இங்கு கொஞ்சம் சுவாரஸியமாக விபரிக்கிறார் வேதநாயகம் தபேந்திரன்.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – (பகுதி – 4)
இலங்கையில் சாதாரண மக்களின் வருமானம் அவர்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட போதாமல் இருப்பதாக சுட்டிக்காட்டும் வரதராஜா பெருமாள் அவர்கள், அவை குறித்து அரசாங்கம் வெளியிடும் கணிப்பீடுகளும் ஏமாற்றுகள் என்று கண்டிக்கிறார்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — 05
தென்னிலங்கை வன்செயல்களால் வடக்கு நோக்கி வந்தமலையக தமிழர்கள் அங்கும் புறக்கணிப்புக்கு உள்ளாகினர். புறக்கணிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுத்தனர்.
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)
தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் வலதுசாரிகளின் அதிகாரத்தின் கீழ் அழிந்துகொண்டிருக்கும் இலங்கையை மீட்க வேண்டுமானால், நாட்டின் மீது பற்றுக்கொண்ட மாற்றுக்கருத்தாளர்கள் முன்வந்து, இணைந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் இந்தப் பத்தியின் ஆசிரியர்.
துயரத்தின் படிக்கட்டில் விளைந்த பகடி அரசியல்
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, அரசியலமைப்பு மாற்ற முயற்சி மற்றும் தேர்தல் சட்ட மாற்ற முயற்சி என்ற அடிப்படையில் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்பான காலப்பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் இவை குறித்த ஒரு ஏளன உணர்வை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டும் செய்தியாளர் கருணாகரன் அவர்கள், அவற்றால் நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் குறித்தும் கவலை கொள்கிறார்.
மாத்தளைக் கார்த்திகேசு நினைவுகள்! நாடக நண்பன் நமை விட்டுப் பிரிந்தான்
இலங்கை இலக்கிய உலகின் முக்கியமான ஒருவராக கணிக்கப்படும் மாத்தளை கார்த்திகேசு அவர்கள் மறைந்ததை முன்னிட்டு பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் எழுதும் நினைவுக்குறிப்பு. கார்த்திகேசு அவர்களின் நாடகப்பணி பற்றி பேராசிரியர் இங்கு பேசுகிறார்.
சொல்லத் துணிந்தேன் – 85
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிகளின் பலம் பலவீனம் ஆகியவை குறித்து விமர்சிக்கிறார் பத்தியின் எழுத்தாளர் கோபாலகிருஸ்ணன். இந்த ஒற்றுமை முயற்சி ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கருத்து.