இலங்கையில் கடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோர் எண்ணிக்கையில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு அதிகரிப்பை காட்டியுள்ளதாக கட்டுரையாளர் கூறுகிறார். இலங்கையின் ஏனைய மாவட்ட நிலைமைகளையும் அவர் ஆராய்கிறார்.
Category: கட்டுரைகள்
சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் கனடா நாட்டில் ஆற்றிய உரை ஒன்று குறித்த தனது கருத்தை இங்கு காத்திரமாக முன்வைக்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் இரண்டாவது பகுதி.
இலங்கைக் கல்விமுறை பற்றிய முறைப்பாடுகள்: தொட்டிலோடு பிள்ளையை எறியச் சொல்லும் அறிவுரை!
அழகு குணசீலனின் “மௌன உடைவுகள்” பத்தித்தொடரின் முதல் அங்கமாக வெளியான இலங்கையின் கல்விமுறை குறித்த கருத்துகள் நல்ல கலந்துரையாடலுக்கு வழி செய்துள்ளது. அழகு குணசீலனின் கருத்துகள் குறித்து தேசம்நெற் ஆசிரியர் ஜெயபாலன் முன்வைத்த சில கருத்துக்களுடன் முரண்படுகிறார் இங்கு ஜஸ்ரின்.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-32)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் தமிழரசுக் கட்சியின் ஊர்திப் போராட்டத்தை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கத்தையும் அந்த போராட்டம் சேர்த்து வலியுறுத்த வேண்டும் என்று கோருகிறார்.
பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம்
அரசியல், பொருளாதாரம், பண்பாட்டில் பின்னடையும் தமிழர் நிலைக்கு தமிழ்க் கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று சாடும் செய்தியாளர் கருணாகரன், இதனைக் கண்டுகொள்ளாத தமிழர் போக்கு ஒரு “மந்தைப்போக்கு” என்கிறார். தனது அதிருப்தியை காட்டமாக அவர் இங்கு வெளிப்படுத்துகிறார்.
இலங்கைக் கல்வி முறைமை மௌனமாக அல்ல ஓங்கித் தகர்க்கப்பட வேண்டியது
அழகு குணசீலனின் மௌன உடைவுகளின் முதல் பகுதியில் பேசப்பட்ட இலங்கையின் கல்வி முறைமை குறித்த விடயத்துக்கான ஜெயபாலனின் எதிர்வினை இது. குணசீலனின் கருத்த ஏற்கும் அவர், ஆனால், இலங்கை கல்வி முறையில் பெரும் மாற்றம் வேண்டும் என்கிறார்.
அமைச்சர் டக்ளஸுக்கு ஒரு கோரிக்கை! (வாக்குமூலம்-31)
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மையை கோரிக்கையை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் அவர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
மௌன உடைவுகள்…! (அழகு குணசீலனின் புதிய பத்தித்தொடர்)
எமது சமூகத்தில் பேசப்படாத, பேசமறந்த, பேசத்தயங்கும் சில முக்கிய விடயங்களைப் பேசும் அழகு குணசீலனின் முயற்சி இந்த “மௌன உடைவுகள்” என்னும் புதிய பத்தித்தொடர். கட்டுப்பெட்டித்தனம் காக்கும் கனவான்களை அவர் சமூக விரோதிகள் என்கிறார். முதலில் அவர் பேச முனைவது கல்விச்சோதனைகள் குறித்த விவகாரம்.
தமிழ் அரசியற் கைதிகள்: ஒரு தொடர் கதை
தமிழ் அரசியற்கைதிகள் விவகாரத்தில் மீண்டும் ஏமாற்ற நிலையே ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அவர்களை கைதிகளாக குற்றவாளிகளாக பார்ப்பதும், அவர்கள் விவகாரத்தை ஒரு அரசியல் விவகாரமாக பார்க்காமல், சட்ட விவகாரமாக மாத்திரம் பார்ப்பதும் தவறு என்கிறார் அவர்.
இரு தேசம், ஒரு நாடு???
இரு தேசம் ஒரு நாடு என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் கோபாலகிருஸ்ணன். இது ஒரு போலிக்கோசம் என்கிறார் அவர்.