— கருணாகரன் —
கொஞ்சமாவது சிந்திப்போம்….!
அண்மைக்காலமாக கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் எமது மலையகத்தவர்கள் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் எம்மை போன்றவர்கள் இறுமாப்பு அடைவதுண்டு…!
அதனடியாக இலத்திரனியல் ஊடகங்களில் இந்த விடயம் நம்வர்களினால் கிலாகித்து
செய்திகளாக ஏன் தலைப்பு செய்தியாகவும் வந்துவிட்டது.
எம் பிள்ளைகள் இவ்வாறு தங்களது பட்டப்படிப்பில் நல்ல முறையில் திறமை சித்தி பெற்று (First or second class) அவ்வவ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவது வரவேற்க வேண்டியதே..
ஆனால், இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் பின்னர் நிரந்தரமாக உள்வாங்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா..?
பொதுவாகவே, பல்கலைக்கழகங்கள் காலத்துக்கு காலம் இவ்வாறு தங்களது மாணவர்களை திறமை அடிப்படையிலும் தேவை கருதியும் நியமிப்பது உண்டு.
அது வழமை..!
நிரந்தரம் என்பதே இங்கே நோக்கப்பட வேண்டும்..
நிரந்தரமாக ஒருவர் விரிவுரையாளராக உள்வாங்கப்பட்டால் அதுவே கணிசமான மகிழ்ச்சியை கொணரும்..!
இன்னொன்று..
உதவி விரிவுரையாளர் என்பது
ஒருவருடமோ அல்லது ஆறு மாதம்
மட்டுமே நிரந்தரம்..
பின்னர்…!
தாங்கள் பிரதேசவாதம் பேசவில்லை.
நாங்கள் தேசிய பல்கலைக்கழகம்
என்ற கோதாவில் பலரை இப்படி உள்வாங்கி குறித்த தரப்பினரை திருப்திபடுத்தியதன் பின்னர்
கழட்டி விடப்படும் கைங்கரியம்
நடக்காமல் இருந்தால் சரிதான்..
பி.கு..
நியமிக்கப்பட்டவர்களில் எவராவது
முகாமைத்துவம், சட்டம், பொறியில், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறை பீடங்களில் உள்ளனரா..
அதையும் கொஞ்சம் கவனியுங்கள்..!
00
கொஞ்சமாவது அறிந்துக் கொள்வோம்…!
அண்மைக்காலமாக பலர் பட்ட மேற்படிப்பு முடித்து இலத்திரனியல் ஊடாக தமது பட்டத்தை படத்துடனும் இல்லாமலும் அறிய தருகிறார்கள்.
இன்னும் பலர் தாங்கள் ஏதோ சந்திரமண்டலதுக்கு போகப் போகிறோம் என்ற நினைப்பில் பட்டமேற்படிப்பு படிக்கபோகிறேன் என விளம்பரப்படுத்தல் செய்கிறார்கள். சிலரோ பொது மேடைகளில் கூட தன் பட்டமேற்படிப்பில் இந்த ஆய்வைச் செய்தேன் என்று பிதற்றுகிறார்கள்.( செய்தது ,
ஒருவருட படிப்பில் சும்மா ( Report)
போல எழுதி கொடுத்தமையே..)
இதை பார்த்தும் வாசித்தும் நாம் புளகாங்கிதம் அடைகிறோம்.
பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னர் ஒருவர் இலங்கை தேசிய பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமேற்படிப்பு (postgraduate)
படிப்பதும் அதிலே சித்தி பெறுவதும் பெரும் வரம்..!
பலர் இவ்வாறு பட்டமேற்படிப்பை நிறைவு செய்ய குறைந்தது இரண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்கள்.
அத்துணை சிரமம் அது..!
பரீட்சைகள் என்பதுடன் முறையான ஆய்வை கொண்டதாக
(Research compound) பாட திட்டம் இருந்தது.
ஒருவர் நுழைவு பரீட்சையில் சித்தி எய்தி, நேரடி தேர்வுக்கும் (interview)
அழைக்கப்படுவார்.
விண்ணப்பதாரர் குறித்த படிப்பை கற்பதற்கு தகுந்த காரணங்கள்
சமர்பிக்க வேண்டும்.
சும்மா ..
பொழுது போக்காக அல்லது
ஒரு பட்ட மேற்படிப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்பதெல்லாம்
ஏற்றுக் கொள்ளப்படாத நிலை இருந்தது.
ஏனெனில் அன்று தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது காசுக்கு பட்டம் வழங்கும் ஸ்தாபனங்கள் இல்லை.
அதேபோல் இவ்வாறு பட்டமேற்படிப்பை பெற்றவர் உண்மையிலேயே நல்ல ஆளுமை மிக்கவராகவும் தனது படிப்பில் புலமை பெற்றவராகவும் பொதுவாக திகழ்ந்தார்.
அவர் மிகவும் ஆழமான உழைப்பை தனது ஆய்வுக்கு செலவழித்து உள்ளமையே பிரதான காரணமாக அமைந்தது.
இன்று…!
காசு இருந்தால் பட்ட மேற்படிப்பு
சான்றிதழ் பெறலாம்..
ஓரிரு தனியார் பல்கலைக்கழகங்கள் தவிர ஏனையவை, பெயருக்கு நாலு சுவர்கள் உடைய ஒரு கட்டடம், மினிக்கி கொண்டு
உதட்டு சாய்த்துடன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் ஓரிரு இளம் பெண்களுடன் பல்கலைக்கழகத்தின் பதாகையும் இருந்தால் போதும் என்றாகிவிட்டது..
இலங்கையின் படிப்பார்கள்..
ஆனால் இங்கிலாந்து பட்டம்..
நன்றாக எழுதினாலும் இல்லாவிட்டாலும் Hons என்று பட்டத்தின் பின்னால் தொற்றிக் கொள்ளும்…..
ஆனாலும் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் இந்த விளையாட்டு அநேகமாக நடை பெறுவதில்லை.
எவ்வாறாயினும் இன்று அரச பல்கலைக்கழகங்களும் தனியார் பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் ஓரிரு அம்சங்களை உள்வாங்கி உள்ளன.
இவற்றில் முக்கியமானது பட்டமேற்படிப்பு இரண்டு வருடம் என்பதை ஒரு வருடமாக குறைத்து சான்றிதழ் வழங்குதல் ஆகும்.
இவ்வாறு வழங்கும் சான்றிதழ் MA, MSc,MBA, M .Pl,…LL M என்று பல வகையான துறைகளில் இருப்பினும் இவை இலங்கை பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைக்கு அமைய தரப்படுத்தலில் ஒன்பதாவது மட்டத்தை (SLQF) உடையதாக கணிக்கபடுகிறது. மேலும் பட்டப்படிப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு வரை முப்பது பாடங்களின்( credits) திறமை சித்திகள் வேண்டப்படுகிறது.
மேலும் இத்தகைய மேற்படிப்பு
With a course work only என்று வரைவிலக்கணம் செய்யப்படுகிறது.
ஆக, இத்தகைய படிப்பு சும்மா பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வோம் என விரும்புபவர்கள், ஏதாவது கம்பனி வேலைக்கு போக ஆசைபட்டவர்கள், இருக்கும் தனியார் தொழில்களில் பதவி உயர்வு வேண்டி நிற்பவர்கள் அநேகமாக இந்த குறுக்கு வழியை செவ்வனே பயன்படுத்துகின்றனர்.
முறையாக ஆய்வுடன் பட்டமேற்படிப்பை அரச பல்கலைக்கழகங்களில் மேற்கொள்பவர்கள் கட்டாயம் இரண்டு வருட படிப்பை மேற் கொள்ள வேண்டும். இத்தகைய படிப்பை ஆங்கிலத்தில் Masters with course work and a research component என அழைப்பர்.
இந்த படிப்பு பத்தாவது மட்டம் ( SLQF-10) என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 திறமை சித்திகளை பெறவேண்டும்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்..!
பட்டமேற்படிப்பு என்றால் SLQF மட்டத்தை கேட்டு வையுங்கள்.. ( two years program)
பத்து என்றால் பாராட்டும் மதிப்பும் அதிகமாக இருக்கட்டும்..
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியுடன் சம்மந்தப்பட்டவர்களே மட்டம் 10 என்பதை தங்கள் பட்டமேற்படிப்பாக பொதுவாக கொள்கிறார்கள்.