“தில்லை” யின் “விடாய்”

படுவான்கரை மட்டக்களப்பு தமிழகத்தின் ஒரு பாரம்பரிய பிரதேசம். அங்கிருந்து பல அற்புதங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. அதில் ஒரு அதிசயம் “தில்லை” என்ற இந்தக் கவிதாயினி. அவரது “விடாய்” என்ற கவிதைத்தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது. அது குறித்த பிரான்ஸ் விஜியின் அறிமுகம்.

மேலும்

‘உலக மக்களின் வரலாறு’ (நூல் அறிமுகம்)

உலக வரலாற்றை, உலக மக்களின் வரலாற்றை ஆண்டவர்களின் நோக்கில் அல்லாமல் பொதுமக்களின் பார்வையில் கூறமுயலும் ஒரு நூல் “உலக மக்களின் வரலாறு”. கிறிஸ் கார்மனின் நூலை தமிழில் தந்தவர் ச. சுப்பாராவ். அது குறித்த அகரனின் பார்வை இது.

மேலும்

13வது திருத்த அமலாக்கலை கோரவேண்டிய பேரணிகள் (சொல்லத் துணிந்தேன் – 61)

இலங்கை அரசியலில் தமிழர் போராட்டங்களை 4 காலங்களாக பிரித்து விளக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதன் தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறார். அத்துடன் எமது அடுத்த கட்டப் போராட்டங்கள் 13வது அரசியலமைப்பு மாற்றத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றாவது கோரவேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

மேலும்

தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை

தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நீண்ட பட்டியலை முன்வைக்கும் கட்டுரையாளர் அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதேவேளை, அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் அவர் எதிர்வுகூறுகிறார்.

மேலும்

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜே வி பி இன் பங்கும், சிக்கல்களும்

ஜேவிபியின் அரசியல் மற்றும் கோட்பாடுகள் குறித்து கடந்த வாரம் பேசிய ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் அதன் தொடர்ச்சியாக, ஜேவிபியின் சில குழப்பமான கொள்கைகள் எவ்வாறான சிக்கலுக்குள் அந்தக் கட்சியை வைத்திருக்கிறது என்பது குறித்து விபரிக்கிறார்.

மேலும்

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

பெரியார் ஈ.வே இராமசாமி அவர்களைப் பற்றிய இந்தத் தொடரில் விஜி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இந்த வாரம் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்குமான தொடர்புகள் குறித்துப் பேசுகிறார்கள். அதனூடாக அவர் மக்களுக்காக சாதித்த பல விடயங்களையும் அவர்கள் ஆராய்கிறார்கள்.

மேலும்

முறிந்த பனையும் உடைந்த கதிரையும் (காலக்கண்ணாடி 25)

இலங்கை மனித உரிமைகள் விவகாரம் ஜெனிவா சென்றிருக்கும் நிலையில் எமது மனித உரிமைப் பார்வைகள் குறித்தும், அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் குறித்தும் விமர்சிக்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

இதெல்லாம் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியன்றி வேறென்ன?

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அனைத்து இன மக்களும் காரணம் என்கிறார் செய்தியாளர் கருணாகரன். எல்லோரும் இலங்கையை ஒரு பொறிக்குள் அகப்படுத்தவே முயலுகிறார்கள் என்பது அவரது வாதம். அதுவும் ஒரு கூட்டுத்தண்டனையை நோக்கி.

மேலும்

தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!!

மக்களின் உரிமைப் போராட்டங்களுக்காக இணைபவர்கள் தங்கள் கடந்தகால எச்சங்களை முடிந்த வரை தவிர்ப்பது பயன் தரும் என்கிறார் இந்த கட்டுரையாளர். புலம்பெயர் தமிழரும் இலங்கை மக்களுக்கான தமது போராட்டங்களை மிகுந்த கவனத்துடனும் நடத்த வேண்டும் என்கிறார் அவர். போராட்ட வடிவம் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது அவர் வாதம்.

மேலும்

சமூக நீதிக்காக போராட இனங்கள் இணைய வேண்டும்

இலங்கையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் இன, மத பாகுபாட்டாலேயே தோல்வியடைவதாக வாதிடுகின்றார் ஸர்மிளா ஸெய்யித். சிறுபான்மைத் தேசியவாதங்களே இனப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இயலாததாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்