“அரசியல் சூழ்ச்சிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிடமாகவுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் பதவியை நிரந்தரமாக நிரப்ப பொதுநிதி நிர்வாகத்தில் நிருபிக்கப்பட்ட நிபுணத்துவம், பொருத்தமான தகுதி, சேவை மூப்பு போன்றவற்றைக்கொண்ட சுயாதீன நிபுணர் ஒருவரை நியமிக்குமாறு PNF ஜனாதிபதியை கோருகிறது.”
Category: அறிவித்தல்கள்
வடக்கு, கிழக்கில் குடியேறுமாறு மலையக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மூளவைத்திருக்கும் விவாதம்
மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.
தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனையவசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்.
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – (பகுதி 111) (சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-48)
“யாழ் மாவட்டத் தமிழ் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர் எனும் ஒரே காரணத்திற்காகத் தமிழரசுக் கட்சியும் அதனைச் சார்ந்த தமிழ் மாணவ இளைஞர் அமைப்புகளும் தரப்படுத்தல் முறைமைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போதைய அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலஞ்சென்ற பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்குக் கொடும்பாவி கட்டி எரிக்கும் அளவுக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்களும் தமிழ்த் தேசியம் எனும் போர்வையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டக்களப்பிலும் விஸ்த்தரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி, தமது கண்ணைத் தாமே தமது கைகளினால் குத்த வைக்கப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த நிலைமை கிழக்கிலே தமிழ் முஸ்லிம் நல்லுறவு கெடுவதற்கு ஊக்கியாகவும் அமைந்தது.”
தவித்தமுயல் அடித்தல் : மலையில் பிடுங்கி தரையில் நாட்டுதல் (வெளிச்சம்:096)
“தமிழர்களின் நலனுக்காக சர்வதேச அளவில், குறிப்பாக இந்தியர்களின் ஆதரவைத்திரட்டுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), மற்றும் பல்வேறு போராளி அமைப்புக்களின் தலைவர்கள் இலங்கையின் தமிழ் மக்களை அடுத்தடுத்து சிங்கள ஆதிக்க அரசாங்கங்களால் கடுமையான பாகுபாட்டிற்கு ஆளான ஒருமைப்பாட்டு குழுவாக சித்தரித்தனர்…
இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒருமைப்பாட்டு குழுவாக இல்லை என்பதை அவர்கள் வேண்டுமென்றே மறைத்தனர். உண்மையில் அவர்கள் இலங்கைத்தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் எனப்பிரிக்கப்பட்டுள்ளனர்…
அவர்களின் குறைகள், அபிலாஷைகள், அவர்கள் தேடும் தீர்வுகள் மற்றும் அவர்களின் போராட்ட முறைகள் அனைத்தும் வேறுபட்டவை. மேலும் இலங்கைத் தமிழர்களிடையே கூட யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள் இடையே வேறுபாடுகள் உள்ளன…. “
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக குறும்பட – திரைப்படத் தயாரிப்புகளின் முனைப்பு (பகிர்வுகள்)
ஈழத்தின் திரைப்பட முயற்சியில் கிழக்கிலிருந்து உருவான முக்கிய ஒரு திரைப்படமாகவும் ‘சாவடி’யைப் பார்க்கலாம்.
‘சாவடி’ 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்டது.
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்
வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.”
மட்டுநகர் முதல்வர், இராசதுரை அவர்களின், மகத்தான பணி, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்!
“திரு. செ.இராசதுரை அவர்கள், பிரதேச அபிவிருத்தி அமைச்சராகியிருக்காவிட்டால் மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரி அமைக்கப்பட்டிருக்க மாட்டாது. அப்படியொரு அமைச்சு எப்போதாவது அமைக்கப்பட்டு அதற்கு வேறு யார் அமைச்சராகி இருந்தாலும் இசைநடனக் கல்லூரி வந்திருக்காது. அதேவேளை, அவருக்கு வேறு எந்த அமைச்சைக் கொடுத்திருந்தாலும் அந்த அமைச்சின் கீழ் இந்த இசை நடனக்கல்லூரியை அவர் அமைத்திருப்பார். அல்லதுகல்வி, கலாசார அமைச்சின் கீழ் இசைநடனக்கல்லூரியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பார். எனவே இசை நடனக் கல்லூரியை, அமைச்சின் செயலாகவல்ல, அரசின் செயலாகவும் அல்ல, அமைச்சராக இருந்த, செ. இராசதுரை அவர்களின்செயலாகவே கொள்ள வேண்டும்.”
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அணையா தீபமாக ஒளியூட்டும் சொல்லின் செல்வர் இராசதுரை
“10ம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நூலகத்தோடு ஆரம்பித்தவர் அமைச்சரானபோது ஒரு கல்லூரியை ஆரம்பித்து இன்று பலஆயிரக்கணக்கானவர்களுடைய வாழ்க்கைக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறியது போல் அவர் என்ன நோக்கத்துக்காக போராடினாரோ மக்களிடம் வாக்குக் கேட்டாரோ அந்த சொல்லில் இருந்து விலகாது மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஒளி தீபமாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.”
பெருந்தலைவர் இராஜதுரையை கொண்டாடுவோம்..!(வெளிச்சம்: 095)
“பேராசிரியர் மௌனகுரு கூறியதுபோன்று, சொல்லின் செல்வர், செ. இராசதுரையின்
இறப்பு இரங்குதற்குரியதன்று. அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்கல் வேண்டாம், கொண்டாடுவோம்.”
தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு
“இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன.”
