விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.