இலங்கையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்த அண்மைய சில முயற்சிகள் குறித்து டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் முதல் பகுதி. தமிழில் தருகிறார் வி. சிவலிங்கம்.
Category: அரசியல்
சாணக்கியனின் தமிழ்த்தேசிய “விதி”. (மௌன உடைவுகள்…! – 02)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் கனடா நாட்டில் ஆற்றிய உரை ஒன்று குறித்த தனது கருத்தை இங்கு காத்திரமாக முன்வைக்கிறார் அழகு குணசீலன். இது அவரது மௌன உடைவுகளின் இரண்டாவது பகுதி.
‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-32)
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் தமிழரசுக் கட்சியின் ஊர்திப் போராட்டத்தை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இனப்பிரச்சினை தீர்வுக்கான 13வது அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கத்தையும் அந்த போராட்டம் சேர்த்து வலியுறுத்த வேண்டும் என்று கோருகிறார்.
பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம்
அரசியல், பொருளாதாரம், பண்பாட்டில் பின்னடையும் தமிழர் நிலைக்கு தமிழ்க் கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று சாடும் செய்தியாளர் கருணாகரன், இதனைக் கண்டுகொள்ளாத தமிழர் போக்கு ஒரு “மந்தைப்போக்கு” என்கிறார். தனது அதிருப்தியை காட்டமாக அவர் இங்கு வெளிப்படுத்துகிறார்.
அமைச்சர் டக்ளஸுக்கு ஒரு கோரிக்கை! (வாக்குமூலம்-31)
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மையை கோரிக்கையை வரவேற்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் அவர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
தமிழ் அரசியற் கைதிகள்: ஒரு தொடர் கதை
தமிழ் அரசியற்கைதிகள் விவகாரத்தில் மீண்டும் ஏமாற்ற நிலையே ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் செய்தியாளர் கருணாகரன். அவர்களை கைதிகளாக குற்றவாளிகளாக பார்ப்பதும், அவர்கள் விவகாரத்தை ஒரு அரசியல் விவகாரமாக பார்க்காமல், சட்ட விவகாரமாக மாத்திரம் பார்ப்பதும் தவறு என்கிறார் அவர்.
இரு தேசம், ஒரு நாடு???
இரு தேசம் ஒரு நாடு என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் கோபாலகிருஸ்ணன். இது ஒரு போலிக்கோசம் என்கிறார் அவர்.
கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும்
இலங்கை அரசியலில் ராஜபக்ஷக்களின் கடந்த கால வரலாறு கூறும் பாடம் என்ன என்பதை கட்டுரையாசிரியர் ஆராய்கிறார். இது ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்கிறார் அவர்.
கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் கிடைத்துவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் நிலமை சரியாகிவிட்டது என்று எவரும் நினைத்துவிடக்கூடாது. இனிமேல்தான் நாம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.
சிவப்புக் கட்சியெல்லாம் தமிழர் ஆதரவானவை அல்ல (வாக்குமூலம்-29)
இலங்கையின் அண்மைய விவகாரங்கள் சிலவற்றை முன்வைத்து விவாதிக்கின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், இலங்கையில் உள்ள எல்லா இடதுசாரிக் கட்சிகளையும் தமிழர் ஆதரவு போக்குடையவை என்று கொள்ள முடியாது என்று கூறுகின்றார். அதற்கான சில உதாரணங்களை அவர் முன்வைக்கிறார்.
