தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் குறித்து கடந்த வாரம் முதல் பேசிவரும் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள், இந்தப் பகுதியில் கிழக்கு தமிழர்கள் நிலை குறித்துப் பேசுகின்றார். குறிப்பாக கிழக்கில் அரசியல் போக்கு குறித்து பேசும் அவர், அங்கு பிரச்சினை பிரதேசவாதமா அல்லது ஜனநாயகப் பற்றாக்குறையா என்று கேள்வி எழுப்புகிறார்.
Category: அரசியல்
இலங்கையை அழிவுப்பாதயில் கொண்டு செல்லும் சக்தி?
இலங்கையில் சமாதானச் சிந்தனை மற்றும் அதனை நோக்கி நகர்வதற்கான எத்தனம் என்பவை எந்தத் தரப்பிடமும் கிடையாது என்று விசனம் தெரிவிக்கிறார் செய்தியாளர் கருணாகரன். அனைத்து இன மக்களும் அழிவுப்பாதையில் இருந்து விலகுவதற்கான முனைப்பைக் காண்பிக்கவில்லை என்பது அவர் கவலை.
வன்முறைகள், ஊடுருவல்கள், ஆலய அழிப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட கல்முனைத் தமிழர்: (சொல்லத் துணிந்தேன்-74)
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து எழுதிவருகின்ற கோபாலகிருஸ்ணன் அவர்கள், கல்முனையில் வன்முறைகள், ஊடுருவல், நிலப்பறிப்புகள், ஆலய அழிப்புகள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை ஆதாரம் காட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.
கொவிட் : இழக்கப்போவது யார்?
இலங்கையில் கொவிட் 19 இன் அடுத்தடுத்த அலைகள் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை போதாது என்ற கவலை அதிகரித்து வருகின்றது. அவை குறித்து ஆராய்கிறார் இந்த பத்தியின் ஆசிரியர்.
சீன, இந்திய, அமெரிக்க தலையீடுகள்: நம் தலையில் நாம் போட்ட மண்
சீனாவின் வருகை பற்றி பேசும் கருணாகரன், இதற்கு முன்னதாக இலங்கைக்கு உதவ வந்த நாடுகள் பற்றி விபரிக்கிறார். இவற்றின் விளைவுகளையும் அதனை இலங்கை கையாண்டதையும் விளக்கும் அவர், நமக்குள் நாம் வளங்களை பகிர மறுத்ததன் விளைவுகளே இவை என்கிறார்.
‘வீட்டுக்குள் புகுந்த ஆமையும், நாட்டுக்குள் புகுந்த சீனாவும்’ — அது அந்தக்காலம்… (காலக்கண்ணாடி – 39)
சீனாவின் போர்ட் சிட்டி திட்டத்தை, இவை போன்ற உலக அனுபவங்கள் மற்றும் இலங்கையின் கடந்தகால அனுபவங்களுடன் மட்டிடுகிறார் அழகு குணசீலன். வீட்டுக்குள் புகுந்த ஆமையும் சீனாவும் ஒன்றா என்ற கேள்விக்கு பதில்காண முனைகிறார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயம் (சொல்லத் துணிந்தேன் – 73)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான நியாயங்களை முன்வைக்கும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்தப் பகுதியில், அம்பாறை மாவட்டத்துக்குள்ளே ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களின் மக்கள் வீதாசாரத்தை முன்வைத்து தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார்.
தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை)
இலங்கை அரசாங்க கட்டுமானம் பாராளுமன்ற கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லும் போக்கை காட்டும் நிலையில், தமிழ் தேசிய அரசியல் அதனை புரிந்துகொள்ளாது, தவிர்த்துவிட்டு தமிழ் மக்களில் இருந்து விலகிச் செல்வதாக கூறுகிறார் ஆய்வாளர் வி. சிவலிங்கம்.
(சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (24)) சூறாவளியால் ஏற்பட்ட அரசியல் மாற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தை 1978 இல் தாக்கிய சூறாவளி அங்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. பொருள், உயிர் அழிவுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியாகவும் அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவற்றை இங்கு நினைவுகூருகிறார் சு. ஶ்ரீகந்தராசா.
கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)
வை.எல்.எஸ். ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து வெளியிட்ட தவறான தகவல்களுக்கு இந்தப் பத்தியில் பதிலளிக்கிறார் கோபாலகிருஸ்ணன் அவர்கள். அதேவேளை, அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயமான ‘சாணக்கியன் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்முனை குறித்து விபரங்கள் தெரியாது’ என்ற வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார்.