“அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் எதிராக ‘போர்க்கொடி’ தூக்கியவர்கள் பெரும்பாலும் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாதவர்கள். இன்று இத்தகையவர்கள் நிறவெறியையும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வுகளையும் கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியை பாராட்டுவதில் திருப்தி காண்கிறார்கள்.
அமெரிக்க மக்களின் வரிப்பணம் வெளிநாடுகளில் ஒதுக்கீடு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ச தங்களது குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதில் இருந்த வெளிப்படைத் தன்மையின் இலட்சணத்தை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”
