‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’

இலங்கையில் சீனாவின் பொருளாதார முனைப்புக்கள் ஒரு ஆக்கிரமிப்பு என்ற கருத்து பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விடயத்தில் உண்மையான யதார்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் வழமைபோல உணர்ச்சிக்கு அடிமையாக குழப்பத்தில் பலர் தடுமாறுவதாக கருணாகரன் கூறுகிறார். அது பிரச்சினைக்கு தீர்வாகாது என்பது அவர் கவலை.

மேலும்

மலையக மக்களுக்கு துரோகம் செய்த யாழ் மேலாதிக்கம்-(சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 04)

கிழக்கு மக்களுக்கு எதிராக மாத்திரமல்லாமல் மலையக தமிழ் மக்களுக்கு எதிராகவுமே யாழ் மேலாதிக்கத்தின் செயற்பாடு இருந்தது என்று கூறுகிறார் எழுவான் வேலன். தனது கூற்றுக்கான ஆதாரங்களை அவர் சுதந்திரம் கிடைத்த கால நிகழ்வுகளில் இருந்து முன்வைக்கிறார். தேசியக் கொடி விவகாரத்திலும் யாழ் மேலாதிக்க தலைவர்களின் செயற்பாடு குழறுபடியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்

மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை

கடந்த காலத்தில் சிலரது முயற்சியின் பலனாக கிடைத்த மாகாணசபைகளை எதிர்க்கின்ற சில தமிழ் அமைப்புக்கள், மாகாண நிர்வாகத்துக்காக போட்டி போடுவதை செய்தியாளர் கருணாகரன் கடுமையாக கண்டிக்கிறார். இன்றுள்ள அரசியற் தரப்புகளிலே மாகாணசபையை வினைத்திறனுடன் செயற்படுத்தக் கூட அனுபவமும் அக்கறையும் அரசியல் ஒழுக்கமும் வினைத்திறனும் உடைய தரப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டும்தான் என்பது அவரது கருத்து.

மேலும்

சொல்லத் துணிந்தேன்-78

தோழர் பத்மநாபா பற்றிய தனது உரை ஒன்றை ஒட்டி இந்த வாரப் பத்தியை எழுதும் கோபாலகிருஸ்ணன் அவர்கள், அதிகாரப்பரவல் ஒன்றே தமிழர் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்றும், ஆனால், அந்த விடயத்தில் அக்கறையற்ற போக்கை தமிழ் கட்சிகள் காண்பிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். ஆகவே அனைத்து தரப்பும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் இணைந்து, ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ ஒன்றினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

மேலும்

சாதி என்பது தமிழர் மத்தியில் பழங்கதை அல்ல! (சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 03 )

சாதி என்பது பழங்கதை, வர்க்க ரீதியிலேயே தமிழர் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும் என்று இடதுசாரிகளால் பார்க்கப்படுவது குறித்த தனது கருத்தை இங்கு முன்வைக்கிறார் எழுவான் வேலன். சாதியும் சேர்ந்தே இன்றுவரை தமிழர் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் வாதிடுகிறார்.

மேலும்

கிழக்கு அரசியல்: பிரதேசவாதமா? (காலக்கண்ணாடி 44)

தமிழர் தாயகத்தில் சமூக பொருளாதார அரசியலில் மட்டுமன்றி கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களிலும் வேறுபட்டு நிற்கின்ற கிழக்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கானது அப்பட்டமான ஒடுக்குமுறையும், ஜனநாயகப் பற்றாக்குறையுமாகும் என்று வாதிடும் அழகு குணசீலன் அவற்றின் விளைவே கிழக்கின் தனித்துவ அரசியல் உணர்வு என்று கூறுகிறார்.

மேலும்

தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் சில அரசியல் தலைவர்களின் சொந்த அனுபவமும் மன்னிக்கும் மனப்பாங்கும் சில நன்மைகளை கோடிகாட்டியுள்ளன. ஆகவே இந்த விடயத்தை பேசிக் குழப்பாமல், புத்திசாலித்தனமாகக் கையாண்டு ஏனைய கைதிகளின் விடுதலைக்கும் வழி செய்ய வேண்டும் என்கிறார் செய்தியாளர் கருணாகரன்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் 10

இலங்கையில் ஆரம்பத்தில் தமிழர் மத்தியில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓரளவு நடந்த போதிலும் 80களில் சிங்கள அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகள் அனைத்தையும் பேரினவாதத்துக்கு எதிரான திசையில் மாத்திரம் திருப்பி விட்டதாக கூறுகிறார் தேவதாசன்.

மேலும்

தலைமை மாடு முன்னால்……. பட்டி பின்னால்…….! (காலக்கண்ணாடி – 43)

இலங்கை விடயத்தில் அண்டை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றன. ஆனால், சர்வதேச சமூகத்தை உரிய வகையில் அணுகத்தெரியாமல் தமிழர் தரப்பு எல்லாவற்றையும் கடந்த காலம் போல குழப்பிக்கொள்வதாக விமர்சிக்கிறார் அழக் குணசீலன்.

மேலும்

கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும்

அதிகார பகிர்வின் மூலம் மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பறிக்கும் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாக தொடரும் நிலையில், அவற்றை தமிழ் தலைமைகள் கண்டும் காணாததுபோல இருப்பதாக பத்தியின் ஆசிரியர் கவலை தெரிவிக்கின்றார். உரிய புத்திசாலித்தனத்துடன் பதில் நடவடிக்கை எடுக்க தமிழ் தலைமைகள் தவறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்