“பாலமுனை பாறூக்கின் ’51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை’ நூலின் வெளியீடு 23.11.2025 அன்று அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.”
Category: அரசியல்
(சு)தந்திரம்: தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி…..? (மூன்றாவது கண்: V)
“அநுர அரசாங்கத்திற்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு வெறுமனே பொருளாதார நலன்கள் சார்ந்த உத்தியோகபூர்வ அரசாங்கங்களுக்கு இடையிலானது. ஜே.வி.பி.யை இந்தியாவும், சீனாவும் முதலாவது கிளர்ச்சியில் இனம்கண்டு கொண்டவை. பண்டாரநாயக்கா, ராஜபக்ச குடும்பங்களுக்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு ஜே.வி.பி.கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட காலத்தையும் விஞ்சிய நீண்டகால நட்புறவு. இந்த வேறுபாட்டை இலங்கையின் பூகோள அரசியல் எப்போதும் வெளிப்படுத்தும். சீன உல்லாசப்பிரயாணிகளான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்சவை அதிகாரம் அற்ற நிலையிலும் வீடு தேடிச்சென்று சந்திக்கிறார்கள் என்றால், அரசாங்க, பிரதான எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களை தவிர்த்து நாமல் ராஜபக்ச இந்திய குடியரசு தினத்தில் பிரதமர் மோடியுடன் கை குலுக்குகிறார் என்றால் அதன் பின்னணியில் உள்ள அரசியல் செய்திதான் (சு) தந்திரதினத்திற்கான இலங்கை மக்களுக்கான இந்தியாவினதும், சீனாவினதும் செய்தி.”
தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்
“தேர்தல் வெற்றி – தோல்விகள், தேர்தற்கூட்டுகள் பற்றிய செய்திகளும் பேச்சுகளுமே சென்னைத் தெருக்களையும் ஊடகங்களையும் நிறைத்திருந்தன. ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், கடற்கரையில் காற்று வாங்கிக் களிப்பவர்கள் தொடக்கம் சந்திப்போரில் பெரும்பாலானோரும் தேர்தல் நிலவரத்தைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர்.”
ஐக்கிய நாடுகளுக்கு குழிபறிக்கும் நோக்கில் டொனால்ட் ட்ரம்ப் அமைத்த சமாதான சபை
“சமாதான சபையின் இலச்சினையும் கூட, முழுமையாக ட்ரம்புக்கு விருப்பமான தங்கத்தின் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்க வரைபடத்தை கொண்டிருப்பதையும் தவிர, மற்றும்படி தோற்றத்தில் ஐக்கிய நாடுகளின் இலச்சினையை ஒத்ததாகவே இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் காசாவை மீளக்கட்டியெழுப்புவது என்ற போர்வையில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதான சபை சர்வதேச சட்டங்களை மீறுகின்ற ஒரு நபரின் தன்னகம்பாவத்துக்கு சேவைசெய்வதற்கான ஒரு சர்வதேச அமைப்பாகவே அமையப்போகிறது.”
தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…! (மூன்றாவது கண்: IV)
*பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும்.
*யார் என்னத்தை சொன்னாலும், தமிழரசை காப்பாற்ற மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும்.
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
*எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயக்கா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை.
*சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்.
*இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.
இலங்கை: பொருளாதாரத்தை பாதுகாக்கத்தவறிய அரசியல்..! (மூன்றாவது கண்: III)
“ஒட்டு மொத்தத்தில் டாக்டர் சுப்பிரமணியனின் விரிவுரை இலங்கை புத்தி ஜீவிகளுக்கு ஒரு சவால். பொதுவாக ஜனநாயகம் என்பது அரசியல், மற்றும் பொருளாதார சீர்குலைவுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த அரசியல், பொருளாதார நச்சு இரத்த சுற்றோட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கைக்கு “அரசியல், பொருளாதார சுய பரிசோதனை” என்பது காலத்தின் கட்டாயம். இது விடயத்தில் பழைய பொருளாதார இரத்த சுற்றோட்டத்திலேயே பயணிக்கும் அநுர அரசாங்கம் இலங்கையை அரசியல், பொருளாதார சிறையில் இருந்து மீட்குமா? என்பதுதான் இன்றைய கேள்வி.”
ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் -பகிர்வுகள்(பகிர்வு – 07)
ஈழத்தமிழ்க் கலைஞர்களை நாடளவிய ரீதியிலே ஒன்றிணைக்கும் வலையமைப்பைக் கொண்டு செயற்பட்டு வருவது இவ்வமைப்பின் குறிப்பிடத்தக்க பரிமாணமாகும்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம் பிராந்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு பிராந்திய ரீதியாகத் தனித்தனியே மேடைக்கு அழைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்தியக் குழுவுக்கும் பணிகளைப் பாராட்டும் சின்னங்கள் பிரதமர் விருந்தினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பெற்றன.
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி V.(பக்கம்-08)(சொல்லித்தான் ஆகவேண்டும்)-சொல்-50
“தமிழர்களுடைய வாக்குகள் சிதறி அம்பாறை மாவட்டத் தமிழர்களுடைய ஒரேயொரு பிரதிநிதித்துவமும் பறி கொடுக்கப்பட்டது.
இதற்கு அடிப்படைக் காரணமாகவிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் (தமிழரசுக் கட்சியின்) கிழக்குத் தமிழர்களின்-அம்பாறை மாவட்ட தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தின் மீது அக்கறையற்ற யாழ் மேலாதிக்க அரசியல் குணாம்சமேயாகும்.”
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?
எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு.
