அறகலய: அமெரிக்காவே சாதன லத …..! (வெளிச்சம்: 076)

“யு.என்பி – ஜே.வி.பி.  நினைத்துப்பார்க்க முடியாத பின்கதவு உறவு அறகலய காலத்தில் ஏற்பட்டதல்ல. 2009 யுத்த முடிவுக்கு பின்னர் 2010 பொதுத்தேர்தலில் ஏற்பட்டது.  ராஜபக்சாக்களுக்கு எதிரான இந்தக் கூட்டில் களங்கப்படுத்தப்பட்ட அரசியல் ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை  தமிழ்பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தது என்பதும், புலிகளையும், மக்களையும் அழித்த  படைத்தளபதியை வெட்கமின்றி ஆதரித்தது என்பதும் வரலாறு.”

மேலும்

கைதானதை அடுத்து ரணில்  எதிர்க்கட்சிளை ஐக்கியப்படுத்தும் பலமான தலைவராக மாறிவிட்டாரா?

“விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்க உட்பட தேசிய  மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பி.யின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.”

மேலும்

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

“கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்!
குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம்.
அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம் என்று கேள்வியெழுப்புகிறார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர் கருணாகரன்.”

மேலும்

ஆகஸ்ட் 18 ஹர்த்தால் கூறிய செய்தி 

“முரண்பாடுகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது இரு மாகாணங்களிலும் பல பகுதிகளில் காலையில் சில மணித்தியாலங்கள்  வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதேவேளை, இராணுவமயத்துக்கு எதிரான போராட்டம் என்பதையும் பொருட்படுத்தாமல் வேறு பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பை  வழங்கவில்லை. மற்றைய  தமிழ்க் கட்சிகள்  வெளிப்படையாக ஹர்த்தாலை எதிர்த்து அறிக்கை எதையும் வெளியிட்டிருக்க முடியாது என்கிற அதேவேளை, போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீதான அரசியல் பகைமை காரணமாக அது தோல்வியில் முடிவடைய வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தன என்பதில் மறைத்துப் பேசுவதற்கு எதுவுமில்லை.”

மேலும்

ரணில் விக்கிரமசிங்க:  பழுத்த ஓலை விழும் போது  குருத்தோலை  சிரிக்குமாம்! (வெளிச்சம்: 075)

“குற்றவாளிகள் ரணில் அல்ல கடவுளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது நீதிமன்றத்தின் வேலை.  ஆனால் சந்தேக நபர் ஒருவரை ‘குற்றவாளியாக’ புனைவதும், பொதுச்சொத்து  துஷ்பிரயோகத்துடன் சம்பந்தம் இல்லாத குப்பைகளை கிளறுவதும் சுற்றவாளி ஒருவரை குற்றவாளியாக்கி விடாது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாட்டின் முன்னாள் தலைவருக்கு சந்தேகநபர் என்ற அந்தஸ்தில் வைத்து அதற்குரிய கௌரவமும், மனிதாபிமானமும் காட்டப்படவில்லை என்பதாகும். ஒரு வகையில் இது சந்தேக நபர் ஒருவருக்குரிய மனித உரிமைகளை சட்டம், நீதித்துறை மீறுவதாகும்.”

மேலும்

சாமியார்களின் சங்கட அரசியல்…..! (வெளிச்சம்: 074)

“மன்னார் வைத்தியசாலையில் மட்டும் அல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டு. நிதிவளம், ஆளணி, மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றாக்குறையுடன், ஊழல், அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் என்று நீண்ட குறைபாட்டு பற்றாக்குறை உள்ளது. அதற்காக கிடைத்த அதிகாரப்பகிர்வு வாய்ப்பை வெறும் குறுங்கால சுய இலாப நோக்கில் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆயர் வழங்கியுள்ள ஆலோசனை/ கோரிக்கை தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர நீண்ட கால தீர்வு நோக்கில் அப்பட்டமான அவலம்.”

மேலும்

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

“பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு  நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர்  என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார்.”

மேலும்

NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும்

“இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யில் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்க வேண்டிய பொறுப்பு, கடப்பாடு அனைவருக்கும் உண்டு.”

மேலும்

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!(வெளிச்சம்:073)

“அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….?”

மேலும்

ஒரு முகப்பட வேண்டிய சூழல்

“ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது.”

மேலும்

1 17 18 19 20 21 183