வேந்தர் செல்வராசா: மட்டக்களப்பின் சுடர் ஒன்று அணைந்தது…..!(வெளிச்சம்: 069)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மானாகப்போடி செல்வராசா காலமானார்.
அவர் குறித்த அழகு குணசீலனின் ஒரு நினைவுக்குறிப்பு இது.
அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலியும் உரித்தாகட்டும்.

மேலும்

அமெரிக்காவுக்கு  விழுந்த இடி: பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது பிரான்ஸ்.!(வெளிச்சம்: 068)

“பாலஸ்தீனத்தை சுய இராச்சியமாக அங்கீகரிக்கும் அறிவிப்பை நான் எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் வெளியிட தீர்மானித்துள்ளேன்.
 மத்திய கிழக்கில் நீதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எனது வரலாற்று ரீதியான அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இது ஒரு தார்மீகக் கடமை (DEVOIR MORAL:  MORAL DUTY/ MORAL OBLICATION) என்று நான் கருதுகிறேன்”

மேலும்

கடந்துபோன யுகமொன்றின் கம்யூனிஸ்ட் தலைவரின் நினைவைக் கொண்டாடுதல் 

“மாவோவை நன்கு தெரிந்த தோழர் சண் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சண் மாவோவை சந்தித்து கலந்துரையாடிய ஒரே இலங்கையர் மாத்திரமல்ல, தெற்காசியாவைச் சேர்ந்த சிலரில் ஒருவருமாவார். நக்சலைட்டுக்கள் என்று நன்கு அறிப்பட்ட இந்தியாவின் மாவோவாத  இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்– லெனினிஸ்ட்) யின் தலைவரான சாரு மசுந்தார் மாவோவை ஒருபோதும் சந்தித்ததில்லை.”

மேலும்

எல்லாளனாக உருவெடுத்து, அரங்கை அதிரவைத்த பேராசிரியர் மௌனகுரு!

“அபிநய சேத்திர ஆடலகம்” என்னும் ஆற்றுகைக்குழுவின் ஒரு நீண்ட ஆடல் நிகழ்வில் எல்லாள மன்னனாக தன்னை உருவாக்கி 83வது வயதிலும் ரசிகர்களை அதிசயிக்க வைத்தார் பெருங்கூத்தனாக பலராலும் வர்ணிக்கப்படும் பேராசிரியர் மௌனகுரு.
அந்த ஆற்றுகைக்கான முன்னேற்பாடு, பயிற்சி, தனது பாத்திரம் உருவானவிதம், ஒப்பனை, ஒத்திகை போன்றவை குறித்த தனது அனுபவத்தை அவர் இங்கு சுவாரசியமாக விபரிக்கிறார்.

மேலும்

கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

“கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு! “

மேலும்

கனடா கலாட்டா: ஹரியின் கடிதம் அதிகார அத்துமீறலா…? (வெளிச்சம்: 068)

உண்மையில் செந்தூரன் குடும்ப இணைவு விவகாரம் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையிலான போராட்டமாக உள்ளது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பன சுயமாக இயங்கும் மேற்குலகில் இவை இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. இரு சமாந்தரக்கோடுகளாக நகர்கின்றன. ஹரி ஆனந்தசங்கரியின் மனிதாபிமான அடிப்படையிலான கடிதங்களும், செந்தூரனின் மனிதாபிமான மேன்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டிருப்பதும், சட்டத்துறை நிர்வாகம் கனேடிய சட்டங்களைப் பற்றியே பேசுவதும் இந்த சமாந்தரமான இரு நேர்கோட்டு அணுகுமுறைகளாகும்.

மேலும்

‘BOTTLE NECK’ எங்கே உள்ளது?(சொல்லித்தான் ஆகவேண்டும்-சொல்-42)

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு விவகாரம் தொடர்பில் அழகு குணசீலனால் அரங்கத்தில் எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரைக்கான பதில்கருத்தாக, தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்கள் இங்கு மூத்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கடந்த காலத்தில் கோட்பாட்டு அரசியலில் எவ்வாறு நெகிழ்ந்து கொடுத்துச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுத்தது என்பது பற்றிச் சற்று விளக்கமாகவும் விவரமாகவும் எழுதுகிறார்.

மேலும்

வரதரின்(2025) புதிய முயற்சிகள்

தமிழ் அரசியலில், ஊடகத்துறையில், இலக்கியவெளியில், சமூக நிலையில்  மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய தடைகள் – விலக்கல்கள், விலகல்கள், ஒதுக்கங்கள், ஒதுங்குதல்கள்தான் நீண்ட வரலாறாகும். அந்த வரலாற்றை மாற்றுவது – மாற்றி எழுதுவது நல்லது. அவசியமானது.
 
மாற்றத்துக்கான எத்தனையோ முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் பலரும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுவரையில் எதுவும் சாத்தியமானதில்லைத்தான். ஆனாலும் அதைக் கை விட முடியாது. ஏனென்றால், மாற்றம் வேண்டும். மாற்றம் ஒன்றே வேண்டும். மாற்றத்துக்காகவே இந்த உலகம் இடையறாது பாடுபடுகிறது.

மேலும்

வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!(வெளிச்சம்: 068)

“உண்மையில் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாகாணசபைக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இல்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் படிப்படியாக கொழும்பால் மீளப்பெறப்பட்டு விட்டன.  இன்னும் காலம் கடத்தினால் “கோவணத்தையும்” இழந்த கதைதான் என்பதை வரதர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.”

“மாகாணசபை சபை மூலமாக அதிகாரப்பகிர்வு அடிப்படை கட்டமைப்பை தக்க வைக்க  அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். புலிகளுக்கு பின்னால் போன அனைவரும் செய்ய வேண்டிய பிராயச்சித்தம்.”

மேலும்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்  விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை 

“அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க  கூறியிருக்கிறார். குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு தனது அரசாங்கத்துக்கும் ஓரளவு பொறுப்பு இருக்கிறது என்பதா அவரது அந்தக் கூற்றின் அர்த்தம்? சூத்திரதாரிகள் என்றைக்காவது சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று நம்பவது (இதுகாலவரையான நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது )  கஷ்டமாக இருக்கிறது.”

மேலும்

1 19 20 21 22 23 183