—- கலாநிதி ஜெகான் பெரேரா —-
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலத்தின் கைது குறிப்பான அக்கறைக்குரிய இரு விவகாரங்களைமுதன்மைப்படுத்துகிறது. முதலாவது, வடக்கு, கிழக்கின் முனானாள் போர் வலயங்களில்தொடரும் உயர்மட்ட நிலையிலான கண்காணிப்பு. நாட்டின் அந்த பாகங்களுக்கு செல்பவர்கள்இரு மாகாணங்களிலும் சீருடையுடன் மிகவும் பெருமளவில் படையினரின் பிரசன்னத்தை காணத்தவறமாட்டார்கள். சுற்றுலா தலங்களிலும் கூட இதுவே நிலைமை.
அந்த படையினர் 1970 களின் பிற்பகுதியில் தொடங்கி 2009 மே மாதம் முடிவுக்குவந்தஅமைதியைக் குலைத்த வன்முறை நிலைலரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.14 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், நாடு் அதன் வன்முறை கடந்த காலத்தின் மரபைவெற்றிகொள்ளத் தவறியமையை உருவகப்படுத்துவதாக பாதுகாப்பு படைகளுக்காக இன்னமும்செலவிடப்படும் பாரிய செலவினம் அமைந்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் கூடபாதுகாப்புக்கு பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது.
2023 பட்ஜெட் மதிப்பீடுகளின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களின் மொத்த சம்பளங்களில் பாதுகாப்பு துறையினரின் சம்பளம் 48 சதவீதமாக இருக்கிறது என்று வெறைட் றிசேர்ச் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பிந்திய தகவல்கள் கூறுகின்றன. சம்பளங்களுக்கான மொத்தசெலவினத்தில் 32 சதவீதத்தை இராணுவம் எடுத்துக்கொள்கிறது. 16 சதவீதம் ஏனைய பாதுகாப்புசேவைகளுக்கு போகிறது.
உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கையின் ஆயுதப்படைகளின் அளவு 2017 — 2019 காலப்பகுதியில் 317,000 பேராக இருந்தது.2021 தெற்காசிய கற்கைகளுக்கானநிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையின் இராணுவம் உலகில் 17 வதுபெரிய இராணுவமாக — ஐக்கிய இராச்சியத்தினதையும் விட கூடுதலானதாக — இருக்கிறது. இராணுவத்தின் பெரிய படைப்பிரிவுகள் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலேயே தொடர்ந்துநிலைவைக்கப்பட்டிருக்கி்ன்றன. அதனால் அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளுக்கு வளமானகளமாக அந்த மாகாணங்கள் அமைகின்றன.
நில அபகரிப்புக்கு ஆதரவாக இருப்பது மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்பாவனையை ஊக்குவிப்பது உட்பட தமிழ் மக்களை பெரிதும் பாதிக்கும் பல்வேறுநடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுவதாக வடக்கு, கிழக்கில் மக்கள் பரவலாகஉணருகிறார்கள். ஆனால் போதைப் பொருளுக்கு கடுமையாக அடிமையாகும் போக்கும்குற்றச்செயல்கள் அதிகரிப்பும் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்பட்டவையல்ல, நாட்டின்ஏனைய பாகங்களிலும் அவை நிலவுகின்றன. குறிப்பாக தலைநகர் கொழும்பைக் கூறமுடியும்.
வடக்கு, கிழக்கை போலன்றி, தென்னிலங்கையில் பிரதான சந்தேகத்துக்குரியவர்களாக பெரும்பணம் பண்ணும் பேராசையில் பழிபாவத்துக்கு அஞ்சாத பாதகச்செயல்களில் ஈடுபடக்கூடிய–சகல அதிகாரங்களும் கொண்ட அரசியல்வாதிகளே விளங்குகிறார்கள். தங்களது கருவிகளாகபாதுகாப்பு படையினரை அவர்கள் பயன்படுத்தக்கூடும். இந்த உணர்வுதான் அறகலயபோராட்டத்தின்போது மொத்தம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்குப் போகவேண்டும்என்ற சுலோகத்தை பிரபல்யப்படுத்தியது.
நாடளாவிய
கண்காணிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட சம்பவம் வடக்கில் நிலவும்கண்காணிப்பு பிரச்சினையை மையமாகக் கொண்டதாகும். பொது மைதானமொன்றில்விளையாட்டு கழகம் ஒன்றைச் சேர்ந்த சுமார் இருபது ஆதரவாளர்களைசந்தித்துக்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார். அவர்களுடன் தான் பேசிக்கொண்டிருந்தபோதுஇனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 15 — 20 அடி தூரத்தில் தங்கள்வாகனத்தை நிறுத்திய அவர்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டு அடையாளஅட்டைகளை காட்டுமாறு கேட்டபோது அதற்கு அவர்கள் மறுத்தார்கள் என்று பொன்னம்பலம்கூறினார்.
சிவில் உடையில் வந்த அவ்விருவரும் புலனாய்வு தகவல்களை திரட்டவந்த பொலிஸ்காரர்கள்என்று பிறகு கூறப்படடது. வடக்கு, கிழக்கில் இவ்வாறு நடைபெறுவது வழமையானதாகும். ஆனால்நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு அசௌகரியத்தை தரக்கூடியதாக நாட்டின் ஏனையபாகங்களிலும் இவ்வாறு இடம்பெறுகிறது.
இலங்கை இன்று துரதிர்ஷ்டவசமாக போருக்கான மூலக்காரணிகளைக் கையாளக்கூடியஅரசியல் தீர்வொன்றைக் காணத்தவறிய நாடாக இருக்கிறது. போருக்கு பின்னராக நாடாகமாத்திரமல்ல அறகலயவுக்கு பின்னரான சமுதாயமாகவும் இருக்கிறது. வீழ்ச்சிகண்டபொருளாதாரம் மக்களுக்கு சொல்லொணா இடர்பாடுகளைக் கொடுத்தது. மக்கள் தங்கள்விருப்பங்களையும் ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்ப்பவற்றையும் வெளிப்படுத்துவதற்குவகைசெய்யக்கூடிய தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் காட்டும் மறுப்பு நிலைவரத்தைமேலும் மோசமயைச்செயகிறது. இத்தகைய சூழ்நிலையில், வடக்க்கிலும் கிழக்கிலும்மேற்கொள்ளப்படுவதைப் போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் நாட்டின் ஏனைய பாகங்களிலும்அமைதியின்மை தோன்றக்கூடிய இடங்கள் குறித்து அரசாங்கத்துக்கு முன்கூட்டியே எச்சரிக்கைசெய்வதற்காக முன்னெடு்க்கப்படுகின்றன.
இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் வடக்கு,கிழக்கில் கூடுதலான அளவுக்குவெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் மேற்கொள்ளப்படுவதே வித்தியாசமாகும். தென்னிலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களைசந்தித்துக்கொண்டிருக்கும்போது அங்கு பேசப்படுவதை ஒற்றுக்கேட்பதற்கு பொலிஸ் புலனாய்வுஅதிகாரிகள் 10 — 15 அடி அண்மையாக மோட்டார் சைக்கிளில் வருவது சாத்தியமில்லை.
இரண்டாவது பிரச்சினை பொன்னம்பலம் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றஉறுப்பினர் என்ற மரியாதை காட்டப்படாமல் அவர் கைதுசெய்யப்பட்ட முறையில் இருந்துஎழுகிறது.இது வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்பு படைகள் ‘ ஒரு ‘ஆக்கிரமிப்பு இராணுவம் ‘ போன்று நடந்துகொள்கின்றன என்பதை தமிழ் மக்களுக்கு ஊர்ஜிதப்படுத்துகிறது. பொலிஸ்நிலையத்துக்கு வந்து வாக்குமூலத்தைக் கொடுக்குமாறு பொன்னம்பலத்தை பொலிசார்கேட்டபோதிலும், முன்னதாக மைதானத்தில் வாக்குவாதத்தின்போது தன்னை நோக்கி துப்பாக்கிநீட்டப்பட்ட காரணத்தால் பொலிஸ் நிலையம் சென்றால் தனக்கு பகைமையான சூழல் காணப்படும்என்ற காரணத்தால் அங்கு செல்ல அவர் விரும்பவில்லை.
பொலிசார் அதற்கு பிறகு கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து அவரைக் கைது செய்துவாக்குமூலம் பெறுவதற்காகவும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காகவும் மீண்டும் வடக்கிற்கு கூட்டிச்சென்றனர். அண்மைய கடந்த காலத்தில் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடந்துகொண்ட சந்தப்பங்களிலும் கூட அவர்களை பொலிசார்கடுமையாக நடத்தாமல் விட்டதை பொன்னம்பலத்தின் கைதுடன் நோக்கும்போது அது ஒருமனக்கசப்பான ஒப்பீடாக அமைகிறது.
சமத்துவ குடியுரிமை
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள கூடுதலான அளவுக்குகடும்போக்குடைய பிரிவுகளுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருப்பது உட்பட தமிழ் தேசியமக்கள் முன்னணி தலைவர் கடைப்பிடிக்கும் முனைப்பான தமிழ்த்தேசிய நிலைப்பாடுகள்தெற்கில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயத்திடமிருந்தும் அவரை பெருமளவுக்குதூரவிலக்கிவிட்டது. அவர் கைது செய்யப்பட்டதையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்தும்தெற்கின் சிங்கள பெரும்பான்மை இன பகுதிகளைச் சேர்ந்த ஒரு சில பாராளுமன்றஉறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டதாக ‘ தி இந்து ‘ பத்திரிகை செய்திவெளியிட்டிருக்கிறது. ஆனால், கைதுசெய்யப்படுகின்றபோது சிங்கள மொழியில் பொன்னம்பலம்கருத்துக்களை வெளியிட்ட பாங்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதிக்காக போராடுவதில்அவர் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும். இதை ஊக்கப்படுத்தவேண்டுமே தவிரஒடுக்கக்கூடாது.
” பொன்னம்பலம் இன்றைக்கே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்கவேண்டும்அல்லது அவரைக் கைதுசெய்யப்போவதாக பொலிசார் அச்சுறுத்தியது முற்றிலும்சட்டவிரோதமானதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவரதுசிறப்புரிமையை மீறும் செயலாகும். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்றகூட்டத்தொடரில் கலந்துகொள்வதில் இருந்து அவர் தடுக்கப்படுகிறார். இது அடக்குமுறையாகும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானமதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ருவிட்டரில் பதிவுசெய்தார்.
போட்டி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமை்பின் பேச்சாளர்சுமந்திரன் வெளிக்காட்டிய ஒருமைப்பாடு நேர்மறையான ஒரு அம்சமாகும். அரசாங்கத்துடனானதங்களின் பேச்சுவார்த்தைகளில் நியாயமான பேரம்பேசும் வல்லமையை பெறவேண்டுமானால்தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஐக்கியம் ஏற்படவேண்டியது அவசியமாகும். கைதுக்கு எதிர்க்கட்சிதலைவர் சஜித் பிரேமதாச வெளிக்காட்டிய எதிர்ப்பு பொன்னம்பலத்துக்கு சக பாராளுமன்றஉறுப்பினர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஆதரவு மிகவும் குறைவு என்ற தமிழ் ஊடகங்களின்செய்த செய்திகளை மறுதலிப்பதாக அமைந்தது.
” பாராளுமன்ற உறுப்பினர் பொன்னமப்பலத்தின் கோட்பாட்டுடனும் நிலைப்பாடுகளுடனும்எமக்கு வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த சபையில் வேறு எந்தவொரு பாராளுமன்றஉறுப்பினரைப் போன்றும் நடத்தப்படுவதற்கு அவருக்கு உரித்து இருக்கிறது. சபைநடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தவேளைஅவர் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது சட்டவிரோதமானது.சட்டத்தைமதித்துச் செயற்படுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இது ஒரு சட்டவிரோதமானகைது ” என்று அவர் கூறினார். சகல சமூகங்களினதும் பொதுவான வாழ்விடமாக இலங்கையைகட்டியெழுப்புவதற்கு அவசியமான தேசிய்ஐக்கியம் மற்றும் சமத்துவ குடியுரிமை உணர்வைஎதிர்க்கட்சி தலைவர் வெளிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் எதிரெதிர் பக்கங்களில் இருந்தாலும், தேசிய விவகாரங்களைகையாளுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் உயர்ந்தபொறுப்புக்களில் இருக்கும் இன்றைய காலகட்டம் கடந்த கால பிரச்சினைகளையும் சமகாலபிரச்சினைகளையும் சீர்செய்வதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாகும். ஜெனீவாவில் அடுத்த வாரம் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், ஜனாதிபதி விக்கிரமசிங்க கூட்டிய சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கூட்டத்தில் நல்லிணக்கநடவடிக்கை திட்டம் ஒன்று குறித்து ஆராயப்பட்டது.
அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை வரைவதைதுரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களை ஜனாதிபதி அறிவுறுத்தினார். சட்டவாக்கத்துக்கான ஐந்து முக்கிய விவகாரங்கள், நிறுவன ரீதியான நடவடிக்கைகள், காணிப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை மற்றும் அதிகாரப் பன்முகப்படுத்தல் ஆகியவைதொடர்பிலான முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. வார்த்தைகளில்பெருமளவு விடயங்கள் கூறப்பட்டுவிட்ட போதிலும் நடைமுறையில் களத்தில் பெரிதாக எதையும்காணமுடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் கைது தொடர்பிலானபிரச்சினையை கையாளுவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறை மாற்றத்துக்கானஒரு சான்றாக அமையும்.