அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத்திட்டம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத்திட்டம்

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.  

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது. 

1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதைநாவல்கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்பு ஆகிய ஐந்துவகை தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். 

2. ஒவ்வொரு வகையிலும் சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கு தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும். 

3. நூலாசிரியரின் முழுப்பெயர்வயதுமுகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.  

4. நூலின் இரண்டு பிரதிகளை, எதிர்வரும் 30. 06. 2021 ஆம் திகதிக்கு முன்னர்க கிடைக்கக்கூடியதாகக் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். 

5. பரிசுக்குத் தெரிவு செய்யப்படும் நூல்கள் பற்றிய விபரம் பத்திரிகைகள் மூலம் வெளியிடப்படும் என்பதுடன் பரிசு பெற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அறியத்தரப்படும். 

6. நூலாசிரியர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் வேறெந்த நாட்டின் பிரசா உரிமையோ அல்லது வதிவிட உரிமையோ இல்லாதவராகவும்வேறெந்த நாட்டிலும் இப்பொழுது வசித்துக்கொண்டிராதவராகவும் இருத்தல் வேண்டும்.  

நூல்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: 

ATLAS 

PO Box   5292 

Brandon Park  

Victoria – 3150 

Australia