சிட்டி சென்டருக்கு 26.12.2020  அன்று என்ன நடந்தது?

சிட்டி சென்டருக்கு 26.12.2020 அன்று என்ன நடந்தது?

மட்டக்களப்பு சிட்டி சென்டர் நிறுவனத்தில் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டமை தொடர்பாக பலவிதமான செய்திகள் சமூக ஊடகங்களில் வந்த நிலையில், அவை குறித்து அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வருமாறு. 

இறையருளால் எமது நிறுவனம் கடந்த *80* வருடங்களுக்கு மேலாக (3 வது பரம்பரையாக) உண்மை, நேர்மை, வெளிப்படை தன்மையுடன் மட்டக்களப்பில் வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் உச்சபட்சமாக சேவையாற்றி வருவது யாவரும் அறிந்த விடயம். சில நாட்களுக்கு முன் எமது கல்முனை கிளையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவர் தனக்கு சற்று காய்ச்சல், தடுமலாக இருப்பதாகவும் அவர் கல்முனையில் கொரொனா தொற்றின் காரணமாக (தற்காலிகமாக மூடப்பட்ட) ஹோட்டலுக்கு உணவு வாங்க சென்றதாகவும் தனது *உண்மையான மற்றும்  பொறுப்பான தன்மையால்* நிறுவாகத்துக்கு அறியத்தந்தார். இதனடிப்படையில் எமது நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு  *எமது பெறுமதியான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலத்தை முன்னிறுத்தி, ஒழிவுமறைவின்றி தாமாக முன்வந்து அவசமாக* காத்தான்குடி PHI Team ஊடாக Antigen Test (No PCR) செய்து Positive எனக்கண்டதால் அவரை அரச சுகாதார முறைப்படி இன்று காலை 27.12.2020 தனிமைபடுத்தியதுடன் கல்முனை ஊழியர்களுக்கான Antigent Test இனை உடனடியாக Kalmunai PHI & MOH Team ஊடாக மேற்கொண்டு அவர்களுக்கு *Negative* என உறுதி படுத்தப்பட்டது . ஆனால்… தனிமைப்படுத்தபட்டவரின் மனைவிக்கு (தற்போது City Centre இல் கடமையாற்றுபவர்) ஆரயம்பதி PHI மற்றும் MOH அவர்களால்  PCR/Antigens Test பரிசோதனை செய்ய தாமதமாகிவருவதால் மட்டக்களப்பு MOH மற்றும் PHI அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து New Year Season வியாபாரத்தை கூட கருத்தில் கொள்ளாமல் 
*எமது பெறுமதியான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலத்தை பாதுகாப்பை முன்னிறுத்தி*  தற்காலிமாக எமது நிறுவனத்தை மூடிவிட்டு எமது ஆரயம்பதி ஊழியரின் Test Result க்காக  *இறை பிராத்தனைகளுடன்* நாம்  காத்திருக்கின்றோம். 

உங்கள் அனைவரையும் எமக்காக பிராத்திக்குமாறும் வேண்டிக்கொள்வதோடு விரைவில் எமது உட்சபட்ச சேவையை வழங்க நிறுவனத்தை திறக்க நாமும் எமது மதிப்புமிக்க ஊழியர்களும் தயாராக இருக்கின்றோம். 

நன்றி
பொறுப்புடன்  
நிருவாகம் 
Fourams Group 
27.12.2020

*குறிப்பு:*
மேற்படி நடவடிக்கைகள் சமூக பொறுப்புடன் சுகாதார விதிகளை பேணி மேற்கொள்ளபட்டவை. தேவையற்ற வதந்திகளை பரப்புவது சிறந்த  நற்பண்புமிக்க செயற்பாடாக அமையாது .